ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!

Go down

டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?! Empty டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!

Post by சிவா Sat Mar 04, 2023 12:41 pm

டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?! Vikatan%2F2023-03%2F0f30bd62-f35b-4b0a-9fc9-6958860282ce%2F6401920134bfe

“தமிழ்நாட்டைப்போல ஒற்றுமையான கூட்டணியை அமையுங்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. அகில இந்தியத் தலைவர்கள், இந்தத் தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள்’’

அகில இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா! காரணம், அகில இந்தியத் தலைவர்களின் பங்கேற்புடன், மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த மாநாடுபோல நடந்த பொதுக்கூட்டம். கூட்டத்தில் நாம் கண்ட சில சுவாரஸ்யங்கள் இங்கே...

* சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பிறந்தநாள் கூட்டத்தில், பங்கேற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தன் தந்தை கருணாநிதி பாணியில், அகில இந்தியத் தலைவர்களை அழைத்து கட்சியின் பொதுக்கூட்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மேடை தொடங்கி பொதுக்கூட்டத்திடல் வரை எல்லாமே நவீனம்.

* 60 அடி அகலம்கொண்ட மேடை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தது. அதேபோல கட்அவுட்டுகளுக்கு பதிலாக அதே உயரத்துக்கு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு, தலைவர்களின் படங்கள் திரையிடப்பட்டன. தி.மு.க கொடி மட்டுமன்றி, நிகழ்வில் பங்கேற்ற அகில இந்தியத் தலைவர்களின் கட்சிக்கொடிகளும் சுமார் 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கம்பங்களில் பறக்கவிடப்பட்டிருந்தன.

* பொதுக்கூட்டம் நடைபெற்ற திறந்தவெளி அரங்கைச் சுற்றிலும், 20 மாத தி.மு.க ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. தி.மு.க தொண்டர்கள் அந்தப் படங்களுக்கு அருகில் நின்று ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

* நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணைந்தது தொடங்கி, மிசா காலம், இளைஞரணிச் செயலாளர், கட்சித் தலைவர் எனப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது, முதல்வரான பிறகு செயல்படுத்திய திட்டங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அதற்கு உடன்பிறப்புகளிடையே செம ரெஸ்பான்ஸ். அந்தக் குறும்படத்தில், உதயநிதியை அமைச்சராக்கியதையும் ஸ்டாலினின் சாதனையாகக் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் ஓவர்தான்.

* ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, “ஸ்டாலின் அவர்களே... ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே உழைத்துவருகிறீர்கள். நீங்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தபோது தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள்.

* கூட்டத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘`ஸ்டாலின் நாத்திகவாதியாக இருந்தாலும், எந்த மதத்துக்கும் எதிரானவர் இல்லை. அவரின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தை மிகச்சரியாகக் கையாண்டார். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக சமுகநீதியை முன்னிறுத்திச் செயல்படுகிறார்” என்று பாராட்டு மழை பொழிந்தார்.

* அமைச்சர் துரைமுருகன், ‘`என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்திய நாடு ஒருநாள் இந்த கோபாலபுரம் வீட்டு வீதியில் நுழைந்து, நீங்கள்தான் இந்தியாவுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று நிற்கும் காலம் வரும்’’ என்று சொன்னபோது ஸ்டாலின் முகத்தில் புன்னகை.

* பீகார் மாநிலத் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ், “வடஇந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியதும், மேடையின் முன்னாலிருந்த அமைச்சர்கள் சிலர் எழுந்து நின்று கைதட்டினர்.

* இறுதியாகப் பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டைப்போல ஒற்றுமையான கூட்டணியை அமையுங்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. அகில இந்தியத் தலைவர்கள், இந்தத் தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள்’’ என்பதை, தமிழிலும் ஆங்கிலத்திலும் அழுத்திச் சொன்னார். ஆனால் அவரைத் தவிர, வேறு தலைவர்கள் பா.ஜ.க எதிர்ப்பைத் தீவிரமாகப் பேசவில்லை. இதனால், அவர்கள் பேசும்போது கூட்டத்தில் பெரிதாக கைதட்டல், ஆர்ப்பரிப்புகள் இல்லை.

* பொதுக்கூட்ட மேடைக்குப் பின்னால் தற்காலிக ஏ.சி அறை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த தலைவர்கள் அங்கிருந்துதான் மொத்தமாக மேடை ஏறினர். ஃபரூக் அப்துல்லா மேடையில் ஏறி, தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும், கூட்டத்தினரோடு ஒரு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

* நிகழ்ச்சியில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேடையில், தேசியத் தலைவர்களுக்கு மத்தியில் ஸ்டாலின் என்றால், கீழே முன்வரிசையில் தமிழகத் தலைவர்களுக்கு நடுநாயகமாக உதயநிதி அமர்ந்திருந்தார். `டெல்லிக்கு ஸ்டாலின்... தமிழ்நாட்டுக்கு உதயநிதியா?’ என்று கிசுகிசுத்தார்கள் தி.மு.க-வினர். ஆனால், கருணாநிதியின் பெயரோ, படமோ பொதுக்கூட்ட வளாகத்தில் தென்படாதது மூத்த உடன்பிறப்புகளுக்கு கடும் வருத்தம்.

* கடும் போட்டிக்கு இடையே, விழாவை சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் நடத்துவதாக முடிவானது. அதனாலேயே பிற மா.செ-க்களும், மற்ற பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளும், கூட்டத்துக்கு ஆள் சேர்க்காமல் ஈகோ பார்த்ததாகப் புலம்பினார்கள் தெற்கு மாவட்ட நிர்வாகிகள். அது உண்மை என்பதை, அங்கு போடப்பட்டிருந்த 70,000 சேர்களில், சுமார் 25,000 சேர்கள் காலியாகக் கிடந்ததே உறுதிப்படுத்தியது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum