ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Go down

எடையைக் குறைக்க உதவுமா பார்லி? Empty எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Post by சிவா Sat Mar 04, 2023 12:29 pm

பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் புரோபியானிக் அமிலம், கொலஸ்ட்ராரை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் இதயநோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

என்னுடைய தோழி எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறாள். அவள் வாரத்துக்கு இரண்டு முறை பார்லியை உணவில் சேர்த்துக்கொள்கிறாள். பார்லி என்பது எல்லோருக்குமான உணவா? அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? எடையைக் குறைக்க உதவுமா?



எடையைக் குறைக்க உதவுமா பார்லி? Vikatan%2F2020-12%2F53332eed-5334-418f-9e91-a4d5cc5e156b%2Fspike_2015211_1920.jpg?rect=0%2C69%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&dpr=1

நிறைய மருத்துவப் பலன்களைக் கொண்டது பார்லி. இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலமில்லாதபோது நார்ச்சத்து குறைவான, செரிமானத்துக்கு சிரமமில்லாத பார்லி கஞ்சியை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

சளி சவ்வுப் படலத்தில் புண்கள் இருந்தால் அவற்றை ஆற்றக்கூடியது பார்லி. அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் புரோபியானிக் அமிலம், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் இதயநோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்கு பதில் பார்லி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

உடலிலுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி. அதனால்தான் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் உள்ள நியாசின் எனும் வைட்டமின் பி சத்தானது மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியது. அந்த வயதில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் எக்ளாம்சியா எனும் பாதிப்புக்கும் பார்லி கஞ்சி பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கு ரத்தத்தில் புரதச்சத்து அதிகரித்து, கை, கால்கள் வீங்கும். அதைக் குணமாக்க பார்லி தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

பார்லியை வேகவைத்து அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். காலை தொடங்கி மதியம் வரை குடிக்கலாம். அது சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். அடிக்கடி சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் இது சிறந்த சிகிச்சை. எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் நிச்சயம் உதவும்.

ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்க உதவுமா பார்லி? Empty Re: எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Post by சிவா Tue Mar 07, 2023 2:22 am

எடை இழப்புக்கான சிறந்த உணவு சேர்க்கை எவை?


1. மிளகு சேர்த்த உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு பொதுவாக கொழுப்பை அதிகரிப்பதற்காக கூறப்படுகிறது. ஆனால் சில ஆய்வுகள் உருளைக்கிழங்கு எடை இழப்புக்கு உதவும் என்று கூறுகின்றன. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மிளகுடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் எடை நன்றாக குறையும். கருப்பு மிளகில் உள்ள பைபரின் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கிறது.

2. இலவங்கப்பட்டையுடன் காபி


இலவங்கப்பட்டை சேர்த்து காபி குடிப்பது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. காபியில் உள்ள காஃபின் பசியை அடக்குவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சில சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களை இலவங்கப்பட்டை வழங்குகிறது. இந்த இரண்டு பொருள்களின் கலவையானது எடை இழப்புக்கு மிகவும் உதவி செய்கிறது.

3. பட்டாணியுடன் அரிசி


அரிசியில் லைசின் அமினோ அமிலம் குறைவாக உள்ளது, அதனால்தான் இது முழுமையற்ற புரதமாக கருதப்படுகிறது. பட்டாணி போன்ற லைசின் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அதன் புரத அளவை அதிகரிக்கிறது. எடையை குறைக்க விரும்புவோர் வெள்ளை அரிசிக்குப் பதிலாக பழுப்பு அரிசியைப் பயன்படுத்தலாம்.

4. ஆரோக்கியமான கொழுப்புகளுடன் பழங்கள் மற்றும் காய்கறிகள்


பழங்கள் மற்றும் காய்கறிகள் உடன் ஆரோக்கியமான கொழுப்புகளான ஆலிவ் எண்ணெய், நெய், பருப்புகள் மற்றும் விதைகளை சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

எடை இழப்புக்கான சேர்க்கை உணவுகளை மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உண்பது நல்லதாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum