ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

Top posting users this week
heezulia
குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Poll_c10குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Poll_m10குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடமிளகாய் சமையல் குறிப்புகள்

2 posters

Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 9:49 pm

ஸ்டஃப்டு குடமிளகாய்



குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F79af2058-a13d-4689-afb2-6a84d158b556%2Fp103.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா - ஒரு கப், சோளமாவு - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

குடமிளகாயின் காம்பை நீக்கி விட்டு, உள்ளே லேசாக கத்தியால் கீறி விதைகளை எடுத்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் உப்புமாவை உள்ளே வைத்து, சோளமாவை கெட்டியாகக் கரைத்து, குடமிளகாயின் மேல்புறத்தில் வைத்து மூடவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை வரிசையாக அடுக்கி மூடி, உப்பு கலந்த தண்ணீர் தெளித்து 20 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.




சிவப்பு குடமிளகாய் தொக்கு


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F3e25b9ef-8a0d-4215-bd05-3dd4d292ec26%2Fp104.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

சிவப்பு குடமிளகாய் - கால் கிலோ, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

குடமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கெட்டியாக கிளறி எடுக்கவும்.

இதை சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி எல்லாவற்றோடும் சேர்த்து சாப்பிடலாம்.


Last edited by சிவா on Wed Mar 01, 2023 10:31 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 9:53 pm

குடமிளகாய் பொடி தூவிய பொரியல்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2Fec218a2f-61f8-4cbf-a13f-a789c29c8a11%2Fp105.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - கால் கிலோ, பயத்தம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன் (மூன்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பயத்தம் பருப்பை வேக வைக்கவும் (குழைய வேக விட வேண்டாம்).கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வேகவைத்த பயத்தம்பருப்பு, உப்பு, வறுத்து அரைத்த பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


குடமிளகாய் பாம்பே சட்னி


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F6dcbbb04-ef09-40b0-bb2b-f753b289440b%2Fp106.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 4 முதல் 6 (நீளவாக்கில் நறுக்கவும்), கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைமாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடலைமாவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பச்சை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு நறுக்கிய குடமிளகாயை போட்டு வதக்கவும்.

அரை கப் தண்ணீர் விட்டு கிளறி, மூடி சிறிது நேரம் கொதிக்க விடவும். மறுபடியும் நன்றாக கிளறி, சீரகத்தூள், துருவிய தேங்காய், வறுத்த கடலைமாவை போட்டு, மேலும் சிறிது நேரம் கிளறவும். வேறு பாத்திரத்தில் மாற்றி, எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 9:57 pm

குடமிளகாய் பருப்பு உசிலி


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F03111b7d-d757-4c0e-8d4a-674693eb932b%2Fp107.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 5 (மூன்றையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த மிளகாய் விழுதை போட்டுக் கிளறவும். 15 நிமிடம் கிளறியதும், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து மேலும் நன்றாக கிளறி இறக்கவும்.

சாப்பாட்டுடன் தொட்டுக் கொள்ள ஏற்ற உசிலி இது.


குடமிளகாய் மோர் கறி


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F27029104-27bf-40d4-83c8-1a0f9d97de91%2Fp108.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 2, கடலைமாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 5 பல் (நசுக்கிக் கொள்ளவும்), கெட்டி மோர் - அரை கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வறுத்து பொடிக்கவும். பிறகு பச்சைமிளகாய், நசுக்கிய பூண்டை போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள்தூள், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மோரில் கடலைமாவை கரைத்து குடமிளகாய் கலவையுடன் சேர்த்து, உப்பு, கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும் கையில் தொட்டால் ஒட்டாமல் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 10:00 pm

குடமிளகாய் பனீர் ஃப்ரை


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2Fce556ff9-030b-487d-b6a6-2dd6b87f76ca%2Fp109.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

பனீர் - 2 கப், பெரிய குடமிளகாய் - 1 (நீள வாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சோயா சாஸ் - சிறிதளவு. பூண்டு, பச்சைமிளகாய் சாஸ் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

சோயா சாஸ், பூண்டு - மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.


குடமிளகாய்-காலிஃப்ளவர் பாஜி


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F236e2e40-72fb-4bcd-a300-fb752d101582%2Fp110.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 2, காலிஃப்ளவர் - 2 கப் (பூக்களை நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2, தக்காளி - 2, பாவ்பாஜி மசாலா - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்- தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உலர் மாங்காய்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

குழிவான ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் தக்காளி துண்டுகளைப் போட்டு சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும். குடமிளகாய், காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து, பாவ்பாஜி மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மாங்காய்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் வதக்கி இறக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 10:03 pm

மசாலா குடமிளகாய்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F9600eb18-ef15-4d75-85b0-e080576bc960%2Fp111.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 3, கெட்டியான புளி தண்ணீர் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், உலர் தேங்காய் பொடி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு வறுக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளைப் போட்டு, 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் மூடி போடாமல் சமைக்கவும். புளித்தண்ணீருடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், உலர் தேங்காய் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து, வதங்கிக் கொண்டிருக்கும் குட மிளகாயில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். இது, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


ஸ்டஃப்டு சிவப்பு குடமிளகாய்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F1e1de4cc-d494-4947-8521-31c6d2201789%2Fp112.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

சிவப்பு குடமிளகாய் - 8 முதல் 10 (கடைசி வரை 'கட்' பண்ணாமல் நீளமாக நறுக்கவும்), வெங்காயம் - 8 , பூண்டு - 4 பல், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், சமையல்சோடா, உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும், குடமிளகாயில் சிறிது அடைத்து, கடலைமாவு கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 10:18 pm

குடமிளகாய்-பொட்டுக்கடலைமாவு பொரியல்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F44417e4d-e421-46b4-a256-af9ec46b83b8%2Fp113.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 2 (அ) 3, பூண்டு - 3 பல், பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பூண்டு துண்டுகளை போட்டு மூடி, குறைத்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வதங்க விடவும். நடு நடுவே மூடியைத் திறந்து கிளறி விடவும்.

பிறகு பொட்டுக்கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு மேலும் 8 முதல் 10 நிமிடம் கிளறவும். குடமிளகாயுடன் பொட்டுகடலைமாவு நன்றாக சேர்ந்து இருக்க வேண்டும். கொத்தமல்லி தூவி, சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.


தாமரைத் தண்டு-குடமிளகாய் மசியல்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2Fba687621-6af8-4f11-9af9-792f4c746009%2Fp114.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 2, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா 1 (சிறியது), சீஸ் கால் கப், பொரித்த தாமரைத் தண்டு வற்றல் - அரை கப், (கடைகளில் கிடைக்கும்), முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் (வறுத்துக் கொள்ளவும்), தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சதுரமான துண்டுகளாக நறுக்கவும். சீஸ், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். தாமரைத் தண்டு, சீஸ், உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி தயிர் விட்டு, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

உப்பு, மிளகாய்த்தூள் போட்டு, வறுத்த முந்திரி, சீஸ், தாமரைத் தண்டு, உருளைக்கிழங்கு, குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும். மூடியால் மூடி 2 நிமிடம் சமைக்கவும். இஞ்சி துருவல் தூவி, சாதத்துடன் பரிமாறவும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 10:22 pm

குடமிளகாய்- ராஜ்மா பொரியல்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F11e22206-a3d5-4feb-b443-532d82e93e8a%2Fp115.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

குடமிளகாய் - 2 (துண்டுகளாக நறுக்கவும்), ராஜ்மா - அரை கப் (முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைக்கவும்), நறுக்கிய தக்காளி - கால் கப், கடுகு, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி, வேக வைத்த ராஜ்மா சேர்க்கவும். மூடியால் மூடி 10 முதல் 15 நிமிடம் சமைக்கவும்.

குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


குடமிளகாய்-வேர்க்கடலை புளி சட்னி


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F8fbe25d4-c96a-4fc0-b300-f968a7c54bdb%2Fp117.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

பெரிய குடமிளகாய் - 4, வறுத்த வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

குடமிளகாயை பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், புளி விழுது சேர்த்து அரைக்கவும். குடமிளகாயை மிருதுவாகும் வரை லேசான தீயில் வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பிறகு வேர்க்கடலை விழுதை சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். சீரகம், உப்பு, மிளகாய்த்-தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, எண்ணெய் மேலே மிதக்கும் வரை சமைக்-கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by சிவா Wed Mar 01, 2023 10:25 pm

குடமிளகாய் கிண்ணங்கள்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2Fd1b7a50b-1e88-465e-84c6-343c69a4fa0f%2Fp116.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

பெரிய குடமிளகாய் - 2, வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்) காலிஃப்ளவர் (பூக்களாக ஆய்ந்து கொள்ளவும்) - அரை கப், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மாங்காய்தூள், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு.

செய்முறை

குடமிளகாயை நீளவாக்கில் அல்லது குறுக்கில் பாதியாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். வெங்காயத்தையும், காலிஃப்ளவரையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தூருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி சேர்த்துக் கிளறவும். பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி, மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, லேசாக தண்ணீரை தெளித்து நன்றாக கிளறவும். மூடியால் மூடி 3 முதல் 5 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். மிருதுவாக ஆனதும் இறக்கி ஆற விடவும். குட மிளகாயில் இரு பக்கமும் வெந்த காலிஃப்ளவர் கலவையை நிரப்பி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, குடமிளகாயை அடுக்கி மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை சமைக்கவும்.



குடமிளகாய் டிலைட்


குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Vikatan%2F2019-05%2F7094c576-a931-4d2b-8d37-9240a36a4342%2Fp117a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தேவையானவை

பெரிய குடமிளகாய் - 4 (அ) 5, பெரிய தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ், கரம் மசாலாத்தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெச்சப் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

எண்ணெய், பெருங்காயம், மஞ்சள்தூள், உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் - தேவையான அளவு.

செய்முறை

குடமிளகாயின் விதைகளை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயம், மஞ்சள்தூள், உளுத்தம்பருப்பு போட்டு வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பிறகு தக்காளி, சர்க்கரை, பச்சைமிளகாய் சாஸ், கரம் மசாலாத்தூள், தக்காளி கெச்சப், உப்பு சேர்த்து 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். மூடியால் மூடி தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாய் துண்டுகளை போட்டு மூடியால் மூடி வதக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, கடாயில் உள்ள பொருட்களுடன் நன்றாக கலந்து 10 நிமிடம் சமைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by Dr.S.Soundarapandian Mon Aug 21, 2023 10:27 am

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   3838410834 குடமிளகாய் சமையல் குறிப்புகள்   1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

குடமிளகாய் சமையல் குறிப்புகள்   Empty Re: குடமிளகாய் சமையல் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum