ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகாலாந்து தேர்தல்

Go down

நாகாலாந்து தேர்தல் Empty நாகாலாந்து தேர்தல்

Post by சிவா Thu Feb 16, 2023 5:08 pm

நாகாலாந்து தேர்தல் Vikatan%2F2023-02%2Ff9f17707-5ad5-44c2-bf34-bc5b1515e983%2FWhatsApp_Image_2023_02_16_at_18_17_34.jpeg?rect=0%2C0%2C1144%2C644&auto=format%2Ccompress&format=webp&dpr=1

நாகாலாந்து: ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக கூட்டணி? - காங்கிரஸின் நிலை என்ன?- தேர்தல் கள நிலவரப் பார்வை



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க கூட்டணி போராடுகிறது. சமூக, அரசியல் சிக்கல்களோடு நீண்ட நெடும் வரலாற்றில் பின்னிப்பிணைந்த நாகாலாந்தின் சட்டமன்றத் தேர்தல் கள நிலவரங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை!



வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. திரிபுராவில் இன்று (பிப்ரவரி 16) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இதில் நாகாலாந்தைப் பொறுத்தவரையில், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி.) தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.

ஆனால் என்.டி.பி.பி. 18 இடங்களிலும், பா.ஜ.க 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்குப் பிறகு நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்கள் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு கூண்டோடு தாவியதால், எதிர்க்கட்சியே இல்லாத ஓர் ஆட்சியே அங்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில், வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பதால் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைமையிலான கூட்டணியே மீண்டும் வெற்றிபெறும் என்று ஆளும் அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்திருக்கிறது. நாகா மக்கள் முன்னணியிலிருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களில் 12 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததும் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும், `இடைத்தேர்தல்களில் மூன்று எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருப்பது மக்களின் பேராதரவு எங்களுக்கு இருப்பதையே காட்டுகிறது. கடந்தமுறையைவிட இந்த முறை அதிக இடங்களில் வெல்வோம்' என நம்பிக்கையோடு இருக்கிறார் நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ. 20 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்ட பா.ஜ.க, நாகாலாந்து மக்கள் முன்னணியிலிருந்து வந்த ஒரு எம்.எல்.ஏ-வுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது. மற்றபடி புது முகங்களைக் களமிறக்கி வீண் ரிஸ்க் எடுக்க பா.ஜ.க தயாராக இல்லை என்பதையே அவர்களின் வேட்பாளர் பட்டியல் வெளிக்காட்டுகிறது. நாகாலாந்தில் அமைதியை நிலைநிறுத்த பா.ஜ.க எடுத்த முயற்சிகளால், இந்த முறை வாக்குவங்கி கணிசமாக அதிகரிக்கும் என்றும் அந்தக் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் நாகாலாந்தின் சமூக, அரசியல் சூழல்களை ஒற்றைத் தேர்தலை வைத்து கணித்துவிட முடியாது. அரசியல் சூழல் எப்போதும் கொந்தளிப்பாகவே காணப்படும் நாகாலாந்தின் வரலாறு, ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலிருந்து விரிவடைகிறது. இன்றைக்கு இருக்கும் நாகாலாந்து வெறும் 16,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. உண்மையான நாகாலாந்து 1.20 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. விடுதலைக்குப் பிறகு நாகாலாந்தின் ஒரு பகுதி இந்தியாவுடனும் மற்றொரு பகுதி மியான்மருடனும் இணைக்கப்பட்டுவிட்டது. நாகா இன மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாடுகளுடன் இணைக்கப்பட்டதை அந்த மக்கள் துளியும் விரும்பவில்லை. நாகாலாந்து தனி நாடாக இருக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.

1951-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலை நாகாலாந்து மக்கள் முழுமையாகப் புறக்கணித்து, காலி வாக்குப் பெட்டிகளையே திருப்பி அனுப்பினார்கள். அந்த அளவுக்கு நாகாலாந்து தனி நாடு கோரிக்கை வலுவாக இருந்தது. அதன் பிறகு 1958-ம் ஆண்டில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றி, நாகாலாந்தில் மூவருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் ராணுவப் படை குவிக்கப்பட்டது. தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களும் ஏராளமாக உருவாகத் தொடங்கின.

ராணுவத்துக்கும் ஆயுதம் தாங்கிய நாகா விடுதலைக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் நீடிப்பதும், அவ்வப்போது ஒப்பந்தங்கள் கையொப்பமாவதும் வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால், சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. இந்தச் சூழலில் ‘Nationalist Socialist Council of Nagaland’ (NSCN) என்ற ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்போடு, பிரதமர் மோடி முன்னிலையில் 2015-ம் ஆண்டில் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் கையொப்பமிட்டவர் தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான ஆர்.என்.ரவி. மத்திய அரசின் தூதுவராக போராளிக் குழுக்களுடன் அவர் 2014-ம் ஆண்டிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.

“நாகாலாந்து மக்களின் தனித்துவமான கலாசாரம், நாகாலாந்து போராளிக் குழுக்களின் நிலைப்பாடு, அவர்களுடைய உணர்வுகள், அவர்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் அங்கீகரிக்கிறோம்” என மத்திய அரசு அப்போது தெரிவித்தது. ஆனால், ஒப்பந்தத்தில் என்ன உடன்பாடு ஏற்பட்டது என்பதை வெளியிடவில்லை. “இந்திய இறையாண்மையைப் பகிர்ந்துகொள்கிறோம்” என்ற வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகப் போராளிக் குழுக்கள் பின்னர் தெரிவித்தன. ஆயுதம் தாங்கிய குழுக்களால் முன்வைக்கப்பட்ட நாகாலாந்துக்கான தனிக்கொடி, தனி அரசியல் சாசனத்துக்கான கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 12 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பிறகு நடைபெறும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் இதுவென்பதால், வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக வேரூன்ற நினைக்கும் பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமானத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம், தனி நாடு கோரிக்கைக்கான குரல்கள் நாகாலாந்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இப்போதும் நாகாலாந்தின் கிழக்கு மாவட்டங்களில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி இயங்கும் போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. கிழக்குப் பகுதியிலுள்ள ஆறு மாவட்டங்களில் மொத்தம் 20 தொகுதிகள் இருக்கின்றன.

70 ஆண்டுகளுக்கும் மேலாக நாகாலாந்தில் நிலவும் அரசியல் சிக்கல்களை வைத்துப் பார்க்கும்போது, கடந்த தேர்தலின் முடிவுகள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை துல்லியமாகக் கணிக்க இயலாது என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், ``நாகாலாந்து சிறப்பு அதிகாரச் சட்டம் பகுதியளவு நீக்கப்பட்டது, நாகாலாந்திலுள்ள 16 மாவட்டங்களைப் பிரித்து தனி மாநிலமாக்கும் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது போன்றவற்றால் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கும். ஆளும் கூட்டணிக்குச் சாதகமாகத் தேர்தல் களம் இருக்கும்" என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில், அகுலுடோ தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி திடீரென தனது மனுவைத் திரும்பப் பெற்றார். இந்தத் தொகுதியில் பா.ஜ.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனால் பா.ஜ.க வேட்பாளர் தற்போதைய எம்.எல்.ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றிபெற்றார். கெகஷே சுமி ஆர்.ஜே.டி-யிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார். அதனால் அவர் விலகியதால் எந்த இழப்பும் இல்லை என்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆனால், நாகாலாந்தில் காங்கிரஸுக்கு இருப்பே இல்லை என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை. இந்த முறை அந்த நிலையை மாற்ற வேண்டுமென்ற முனைப்போடு தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறது அந்தக் கட்சி. நாகலாந்தின் நீண்டகால சிக்கல்களுக்குக் கடுகளவுகூட, ஐந்து ஆண்டுகளில் தீர்வு காணப்படவில்லை என்ற கடும் விமர்சனங்களோடு கோதாவில் குதித்திருக்கிறது காங்கிரஸ்.

உள்கட்டமைப்புப் பணிகளில் சிறு துரும்பைக்கூட ஆளும் அரசு கிள்ளிப் போடவில்லை என அடுக்கடுக்காக குற்றம்சாட்டியிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதள பொறுப்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் (Supriya Shrinate). திமாபூரில் பிப்ரவரி 13-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அஸ்ஸாமின் மரியானியிலிருந்து நாகலாந்தின் திமாபூர் நகரம் சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் அதிகபட்சம் இரண்டரை மணி நேரமாக இருக்க வேண்டும். ஆனால் 6 மணி நேரமாகிறது என்பதுதான் யதார்த்தம்.

அதேபோல, லோங்நாக் முதல் மங்கோலெம்பா வரையிலான 9 கிலோமீட்டர் பயணத்துக்கு 2 மணி நேரம் செலவிட வேண்டிய அளவுக்கு சாலையின் தரம் மோசமாக இருக்கிறது. இது நாகாலாந்து பா.ஜ.க தலைவர் தெம்ஜென் இம்னா அலாங் (Temjen Imna Along) சொந்த பகுதியில் இருக்கிறது. இரட்டை இன்ஜின் வேகத்தில் மாநில அரசு செயல்படுகிறது என்கிறார்கள். ஆனால், மின்வெட்டு இல்லாத நாளே இல்லை. வறுமை ஒழிப்பு, சுகாதார நிலைகளிலும் நாகாலாந்து மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என அடுக்கடுக்கான விமர்சனங்களை அவர் முன்வைத்திருக்கிறார்.

ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி, நாகா மக்கள் முன்னணி, காங்கிரஸ் மட்டுமின்றி ஜனதா தளம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் ஆர்.பி.பி., வடகிழக்கு ஜனநாயக முன்னணி போன்ற புதிய கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கின்றன. உள்கட்டமைப்பு சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், நாகாலாந்தின் வழக்கமான சுயாட்சி உரிமைகள் சார்ந்த விவகாரத்தில் அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென்பதில் இப்போதும் சில தீவிரவாத குழுக்கள் உறுதியாக இருக்கின்றன. எனவே, எந்த அரசு அமைந்தாலும் அடிப்படைச் சிக்கல்கள், நாகாலாந்தின் நீண்ட நெடிய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த சுயாட்சி உரிமைக்கான குரல்கள் எனப் பெரும் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி நாகாலாந்து தேர்தலில் உற்றுநோக்க வேண்டிய மற்றொரு கோணம் ஒன்று இருக்கிறது. அது பாலின பிரதிநிதித்துவம். இந்தியா விடுதலை அடைந்து 75-வது ஆண்டில் நிற்கிறோம் நாம். இந்த நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்திக்கிறார். தற்போதைய அமைச்சரவையில்கூட பெண்கள் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். எத்தனையோ மாநிலங்களில் பெண்கள் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்... இருக்கிறார்கள். ஆனால், இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் நாகாலாந்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ-கூட இருந்ததில்லை. 13 தேர்தல்களில் 20 பெண்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக 2018 தேர்தலில் மட்டும் அதிகபட்சமாக ஐந்து பெண்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவே நாகாலாந்தில் பெரும் வன்முறை வெடித்தது. இருவர் கொல்லப்பட்டனர்.

நாகாலாந்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டுமென, அன்னையர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இருப்பினும் இந்த முறையும்கூட இதில் பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆளுங்கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி இரண்டு பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது. பா.ஜ.க ஒரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியிருக்கிறது. பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நாகாலாந்து சட்டசபை வரலாற்றில், இந்த முறையாவது மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்!

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
» திரிபுரா பிப்.16; மேகாலயா, நாகாலாந்து பிப்.27-ல் சட்டசபை தேர்தல்; மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை!
» மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல்கள்
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum