ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

2 posters

Go down

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by சிவா Thu Feb 02, 2023 7:19 pm

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் MK_Stalin_new_Edi_640

பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.


கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், மு.க. ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்திருந்து, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் உரையாற்றியதாவது, இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, இதனுடைய நோக்கம் அது அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விரைவிலே நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கிறது.

இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்துபோன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்தத் துறைகள் சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் எந்தளவிற்கு செயலாக்கம் பெற்றுள்ளன, செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் ஆய்வு செய்திருக்கிறோம்.

திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் இதைத்தான் நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம்.

நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் காரணமாக மக்கள் பெறக்கூடிய பயன்கள் குறித்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்ன என்று கண்ணுக்கு முன்னால் கவனிப்பவர்கள் நீங்கள். அந்த அடிப்படையில் இந்தக் கூட்டம் மிகமிக முக்கியமான கூட்டமாக அமைந்திருக்கிறது.

அதே போல் எல்லோரையும் ஒருசேரச் சந்திப்பதும் மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும் - யாரும் தனியாகச் செயல்பட முடியாது. அப்படி செயல்பட முற்பட்டால் அது தாமதத்திற்கு தான் வழிவகுக்கும். அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான வழிமுறை.

உங்கள் பணிகளையெல்லாம் இணைக்கும் ஒரே விபரம் மக்கள் நலன். அதனை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றக்கூடிய அலுவலர்களை பாராட்டுங்கள், அது மற்றவர்களை ஊக்கப்படுத்தும். பின்தங்கும் அலுவலர்களுக்கு வழிகாட்டி, அவர்களது பணியும் மேம்படுவதை மாவட்ட ஆட்சியாளர்களே நீங்களும் துறைத்தலைவர்களிடம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடுதான் நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடுதான் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் இதையெல்லாம் முதல்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டினோம்.

அடுத்த கட்டமாக அமைச்சர்கள் – செயலாளர்கள், அவர்களோடு கலந்துரையாடல்கள் மூலமாகவும், பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் வல்லுநர் குழு அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகமாகிய உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் - சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

சார்நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்.

அரசினுடைய முன்னுரிமை பணிகள் எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும்.

அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm

சார் பதிவாளர்கள் ஆபீசில் நேரிடையாக பணம் பெறுவதில்லை.. ரகசிய போலீஸ் அனுப்பி அறியலாம்.அவர்கள் யுக்தியே தனி ரகம்தான்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum