Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
Page 1 of 1
தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
-
திருக்கடையூரில் வாழ்ந்து வந்த சுப்ரமணியன் இசையிலும், பாடல்
இயற்றுவதிலும் புலமை பெற்றிருந்தார்.காவிரிக் கரையில் உள்ள
புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருக்கடையூர் அபிராமிவல்லி
உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், அம்பிகையை வழிபட்டு
அனைத்தும் அன்னைதான் என்று வழிபட்டு வந்தார்.
எந்நேரமும், அபிராமிவல்லியின் மீது தீவிர பக்தி கொண்டு, நிலா போல்
ஒளிவீசும் அம்பிகையின் முக அழகிலேயே எப்போதும் லயித்திருப்பார்.
சுப்ரமணியன் அபிராமிவல்லி மீது கொண்டிருந்த பக்தியையும் தெய்வீக
நிலையையும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவரை பித்தன் என்றும், போக்கிரி என்றும் கிறுக்கன் என்றும் வசை பாடி
தூற்ற ஆரம்பித்தனர். ஆனால் சுப்ரமணியன் எதைப் பற்றியும் கண்டு
கொள்ளவில்லை. அம்பிகையை துதிப்பதும், அவளைப் பற்றிய துதிகளை
இயற்றி பாடுவதுமாகவே இருந்தார்.
நாள்தோறும், கோவிலுக்கு வந்து அன்றைய திதியை கூறுவார்.
கூடவே அந்தந்த திதிகளுக்கு ஏற்றவாறு அம்பிகைக்கான வழிபாட்டு
நியமங்களையும் ஏற்பாடு செய்வதுமாகவே இருந்து வந்தார். இவரின்
புகழை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டாள் அம்பிகை
ஸ்ரீஅபிராமிவல்லி தாயார்.
அதற்கான நாளும் வெகு சீக்கிரத்திலேயே வந்துவிட்டது. அந்த சமயத்தில்,
தஞ்சை பகுதியை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் (கி.பி 1675-1728)
இந்து மதத்தின் மீது தீவிர பற்றும் அதீத தெய்வ நம்பிக்கையும் கொண்டவர்.
அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று, காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி
தன்னுடைய படை பரிவாரங்களுடன் பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்
பட்டினம் சென்று தன்னுடைய நேர்த்திக் கடனை நிறைவு செய்த பின்னர்,
அருகிலுள்ள திருக்கடையூரில் அருள்பாலித்து வரும் அபிராமிவல்லி
உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல்
கொண்டார்.
சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோவிலுக்குள் நுழைந்து போது, அங்கிருந்து
மக்கள் அனைவரும், மன்னரை போற்றி வணங்கி வழிவிட்டு நின்றனர்.
ஆனால், சுப்ரமணியர் அபிராமிவல்லியின் கருவறைக்கு முன்பு உட்கார்ந்து
கொண்டு, யோக நிலையில் ஒளிமயமான அபிராமிவல்லியின் திருவருளை
உணர்ந்து, அந்த ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார்.
மன்னர் வருவதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை அபிராமி பட்டர்.
இதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார் மன்னர். சுப்ரமணியரை பார்த்து
ஆச்சரியப்பட்டு, அருகில் இருந்தவர்களிடம், இவர் யார் என்று கேட்டார்.
அருகில் இருந்தவர்கள், சுப்ரமணியரை, இவர் ஒரு பித்தர் தம் குல ஆச்சார
அனுஷ்டானங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஏதோ ஒரு துர்தேவதையை
வழிபடுபவர் என்று போட்டுக் கொடுத்தனர்.
சரபோஜி மன்னருக்கோ சுப்ரமணியரின் தோற்றமும், அவர் முகத்தில்
தோன்றிய வசீகரம் பிடித்து விட்டது. அவரிடம் பேச்சு கொடுத்து, அவரின்
உள்ளுணர்வை தெரிந்து கொள்ள விரும்பினார். அவரிடம், பட்டரே,
இன்றைக்கு என்ன திதி தெரியுமா? என்று கேட்டார். சுப்ரமணியனோ,
அபிராமிவல்லியின் அருள்மணம் கமலும் தெய்வீக தோற்றத்தை மனதில்
நிறுத்தி, ஆனந்தமாக கண்டு பரவச நிலையில் இருந்ததால், வாய் குழறி,
இன்றைக்கு பூரண பவுர்ணமி திதி என்று சொன்னார்.
சுப்ரமணிய பட்டர் சொன்ன பதிலைக் கேட்ட சரபோஜி மன்னர், ஆச்சரியப்
பட்டார். அப்படியானல், இன்று இரவு வானில் முழு நிலவு உதிக்குமோ? என்று
கேட்டார். காரணம், அன்று தை அமாவாசை திதியாகும். அதை நினைத்தே
மன்னர் அப்படி கேட்டார்.
ஆனால், சுப்ரமணிய பட்டரோ, எதைப் பற்றியும் யோசிக்காமல் நிச்சயம்
வரும் என்று கண் மூடிய நிலையிலேயே கூறினார். மன்னருக்கு கோபம்
பொத்துக்கொண்டு வந்தது. அப்படியானால், இன்று இரவு வானில் பூரண
நிலவு உதிக்காவிட்டால், நிச்சயம் உனக்கு மரண தண்டனை, இது அரச
கட்டளை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அரசரும் அவருடைய பரிவாரங்களும் சென்ற பின்னரே, சுப்ரமணிய
பட்டருக்கு சுயநினைவு வந்தது. உடனே அருகில் இருந்தவர்களிடம்
நடந்ததைக் கேட்டு, கவலைப்பட்டார். ஏற்கனவே, மற்றவர்கள் தன்னை
பித்தன், கோமாளி, கிறுக்கன் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர்.
இப்போது, தான் அமாவாசை திதியை மாற்றி பவுர்ணமி திதி என்று
சொன்னதால், அவர்கள் சொன்னது உண்மையாகிவிடுமே என்று கவலைப்
பட்டார். இந்த தவறிலிருந்து தன்னை அந்த அபிராமிவல்லி தாயார் தான்
காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டார்.
அபிராமிவல்லித் தாயார் சன்னதி முன்பாக ஒரு ஆழமான குழியை
வெட்டினார் சுப்ரமணிய பட்டர். அதில் விறகுகளை அடுக்கி தீ மூட்டினார்.
அந்த குழிக்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளால் ஆன உறியையும் கட்டி,
அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அந்த அபிராமிவல்லி தாயார் எனக்கு காட்சி
கொடுத்து, ‘என்மேல் வழிந்த பழியை நீக்காவிட்டால், என் உயிரை மாய்ப்பேன்’
என்று சபதம் செய்தார்.
பிறகு, அபிராமிவல்லியை நினைத்து, உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை என்று
ஒவ்வொரு அந்தாதியாக பாட ஆரம்பித்து, ஒவ்வொரு கயிறாக அறுத்துக்
கொண்டே வந்தார். மாலை நேரம் வந்த உடன், தை அமாவாசை திதியான
அன்று உலகமே இருண்டு இருளில் மூழ்கத்தொடங்கியது.
ஆனால் அபிராமி அன்னையின் ஆசியால் நிச்சயம் நிலவு தோன்றும் என்று
நம்பிக்யோடு தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய பட்டர்
79ஆவது பாடலை பாடி முடித்த உடனேயே, அன்னை அபிராமிவல்லி அவருக்கு
காட்சி கொடுத்தாள். தன் காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி வான்
வெளியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள்
ஒன்று கூடியது போல் ஒளியை பொழிந்தது.
அன்னை அபிராமி, சுப்ரமணிய பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய
சொல்லையும் உண்மையே என நிரூபித்தேன், நீ தொடங்கிய அந்தாதியை
தொடர்ந்து பாடு என்றாள். அபிராமிவல்லியின் அருள் பெற்ற பட்டர் பரவசப்பட்டு,
தன்னுடைய அநுபூதி நிலையை வெளிப்படுத்தும் அபிராமி அந்தாதி பாடல்களை
பாடி நிறைவு செய்தார்.
சரபோஜி மன்னரும், பட்டரின் உறுதியான பக்தியைக் கண்டு மகிழ்ந்தார்.
பட்டரை பித்தன் என்றும் கிறுக்கன் என்றும் அதுவரை கூறியவர்கள், அவரிடம்
மன்னிப்பு கேட்டனர்.
அன்று முதல் சுப்ரமணியர், அபிராமிபட்டர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
சரபோஜி மன்னரும், அபிராமிபட்டரின் பக்தியைக் கண்டு மெச்சியதோடு,
ஏராளமான பரிசுகளையும் மானியத்தையும் அளித்தார். மானியம்
அளித்ததற்கான பட்டயம் இன்றும் அபிராமிபட்டரின் வாரிசுகளிடம் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்த அதிசயம் நிகழ்ந்த நாள் தை அமாவாசை தினம் என்பதால் இன்றைக்கும்
திருக்கடையூர் அபிராமி அன்னை ஆலயத்தில் தை அமாவாசை தினத்தில்
அபிராமி அந்தாதி பாடப்படுகிறது.
அன்றைய தினம் மாலையில் அபிராமி பட்டருக்காக வானத்தில் முழு நிலவு
காட்டிய ஐதீக விழா நடைபெறுகிறது
Similar topics
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
» தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !
» திருக்கடையூர் ஆலயம் பற்றி - தல வரலாறு
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
» தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !
» திருக்கடையூர் ஆலயம் பற்றி - தல வரலாறு
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|