ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

3 posters

Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  Empty இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

Post by Joseph28 Mon Dec 26, 2022 9:51 am

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:-

மன்னர் அழகுமுத்துக்கோன்(1710-1750)

வீர அழகுமுத்து கோன் (1728-1757)

சின்ன அழகுமுத்து கோன் (1729-1755)

பூலித்தேவன் (1715-1767)

வாண்டாயத் தேவன்

பெரிய காலாடி

வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர்

மருது பாண்டியர்

மருதநாயகம் (1725-1764)

விருப்பாச்சி கோபால நாயக்கர்

கட்டபொம்மன் (1760 - 1799)

சிங்கமுத்து சேர்வை

தீரன் சின்னமலை (1756-1805)

மயிலப்பன் சேர்வைகாரர்

சின்ன மருது மகன் துரைச்சாமி

வீரன் சுந்தரலிங்கம்

வடிவு

ராமச்சந்திர நாயக்கர்

தூக்குமேடை ராஜகோபால்

சுத்தானந்த பாரதி

மோகன் குமாரமங்கலம்

சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்

மேயர் டி. செங்கல்வராயன்

சாவடி அருணாச்சலம் பிள்ளை

தூத்துக்குடி பால்பாண்டியன்

முத்துவிநாயகம்

டி. என். தீர்த்தகிரி

ஏ. பி. சி. வீரபாகு

எம். சங்கையா

கல்கி டி.சதாசிவம்

ஸ்ரீநிவாச ஆழ்வார்

தியாகி விஸ்வநாததாஸ்

திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்

மதுரை பழனிகுமாரு பிள்ளை

ஹாஜி முகமது மெளலானா சாகிப்

தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்

அகினி திராவக அபிஷேகம்

கவி கா.மு.ஷெரீப்

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

பி. சீனிவாச ராவ்

காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்

டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி

வீரன் வாஞ்சிநாதன்

எஸ். என். சோமையாஜுலு

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ப. ஜீவானந்தம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

ஐ. மாயாண்டி பாரதி

புதுச்சேரி சுப்பையா

ஜி. சுப்பிரமணிய ஐயர்

வெ. துரையனார்

கோடை எஸ். பி. வி. அழகர்சாமி

வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி

சுப்பிரமணிய சிவா

எம். பி. டி. ஆச்சார்யா

ஆ. நா. சிவராமன்

ம. பொ. சிவஞானம் கிராமணியார்

என். எம். ஆர். சுப்பராமன்

அ. வைத்தியநாதய்யர் மதுரை

டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு

செண்பகராமன் பிள்ளை

சேலம் ஏ. சுப்பிரமணியம்

குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்

வ. வே. சுப்பிரமணியம்

வ. உ. சிதம்பரனார்

திரு. வி. கலியாணசுந்தரனார்

மகாகவி பாரதியார்

ராஜாஜி

திருக்கருகாவூர் பந்துலு ஐயர்

திருப்பூர் பி. எஸ். சுந்தரம்

பி. வேலுச்சாமி

தர்மபுரி குமாரசாமி

க. சந்தானம்

புலி மீனாட்சி சுந்தரம்

சீர்காழி சுப்பராயன்

கு. ராஜவேலு

மட்டப்பாறை வெங்கட்டராமையர்

முனகல பட்டாபிராமையா

பெரியகுளம் இராம. சதாசிவம்

திண்டுக்கல் மணிபாரதி

தேனி என். ஆர். தியாகராஜன்

பழனி கே. ஆர். செல்லம்

மதுரை ஜார்ஜ் ஜோசப்

மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்

பி. எஸ். சின்னதுரை

செங்காளியப்பன்

கே. வி. ராமசாமி கோவை

தியாகி வைரப்பன் வேதாரண்யம்

திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி

திருச்சி பி. ரத்னவேல் தேவர்

திருச்சி டி. எஸ். அருணாசலம்

பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு

ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்

ம. சிங்காரவேலர்

சர்தார் வேதரத்தினம் பிள்ளை

கே. பி. சுந்தராம்பாள்

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

பாஷ்யம் என்கிற ஆர்யா

திருப்பூர் குமரன்

காம்ரேட் பி. ராமமூர்த்தி

பி. கக்கன்

தி. சே. செள. ராஜன்

டி. கே. மாதவன்

பூமேடை ராமையா

எம். பக்தவத்சலம்

கு. காமராசர்

ரா. கிருஷ்ணசாமி நாயுடு

சி. பி. சுப்பையான் கோவை

கோவை என். ஜி. ராமசாமி

கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்

தீரர் சத்தியமூர்த்தி

தோழர் கே. டி. கே. தங்கமணி

கோ. வேங்கடாசலபதி

கோவை அய்யாமுத்து

முஹம்மது இஸ்மாயில்

ச. அ. சாமிநாத ஐயர்

லீலாவதி

பங்கஜத்தம்மாள்

அம்புஜம்மாள்,

கடலூர் அஞ்சலையம்மாள்

மூவலூர் இராமாமிர்தம்

நீலாவதி இராம. சுப்பிரமணியம்

முத்துலட்சுமி ரெட்டி

அசலாம்பிகை அம்மையார்

கண்ணம்மையார்

நாகம்மையார்

கே.கே.எஸ். காளியம்மாள்

எஸ். என். சுந்தராம்பாள்

வை. மு. கோதைநாயகி

செல்லம்மா பாரதி

மீனாம்பாள்

மணலூர் மணியம்மா

கே. பி. ஜானகியம்மாள்

இலட்சுமி சாகல்

கோவிந்தம்மாள்

ஜானகி ஆதி நாகப்பன்

இராசம்மா பூபாலன்

இராமு தேவர்

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது.எனினும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.

அழகுமுத்துக்கோன்:-

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த அழகுமுத்து ராஜா 1710 முதல்1750 வரை மன்னராக ஆட்சி செய்து வந்தார்.மாமன்னர் அழகுமுத்து கோனார் மற்றும் பாக்கியத்தாய் என்ற இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு யாதவர் மரபில் பிறந்த இரு மகன்கள் அழகுமுத்து சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். ஜூலை 11 ம் நாள் 1728ஆம் ஆண்டு பிறந்த மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோன் என்ற பெரிய அழகுமுத்து கோன் எனவும், ஜனவரி 24 ம் நாள் 1729ஆம் ஆண்டு பிறந்த இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து கோன் எனவும் அழைக்கப்பட்டனர்.இவர்கள் எட்டயபுரம் மன்னர் ஜெகவீரராம பாண்டிய எட்டப்ப மன்னரிடம் நட்பு கொண்டிருந்தனர்.அழகுமுத்து சகோதரர்கள் எட்டயபுரம் பாளையத்திற்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டனர்.1750 ஆம் ஆண்டு தந்தை மாமன்னர் அழகுமுத்துக்கோன் இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்டு ஜூலை 09ம் நாள் அனுமந்தகுடியில் மரணம் அடைந்தார்.இதனையடுத்து மூத்த சகோதரரான, வீர அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டிக் கொண்டார்.ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் வாணிபம் செய்வதை சின்ன அழகுமுத்து விரும்பவில்லை எனவே ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு கொண்டவராக இருந்தார்.

1750 ஆம் ஆண்டு எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர்.ஆனால் அவர்கள் வந்த எட்டயபுரமே முதல் எதிர்ப்பாக அமைந்தது. 
ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் பெரிய அழகுமுத்துகோன்.ஆலோசனைக்கூட்டத்தில் பெரிய அழகுமுத்து, சின்ன அழகுமுத்து,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துறை ஆகியோர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த கூடாது என முடிவு செய்யப்பட்டது.எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோனின் படை வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கத்துணிந்த சின்ன அழகுமுத்து ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் வாயிலாக,வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை ஏது?வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். கோபமடைந்த ஆங்கிலேய அரசு 1750 ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் ஆங்கிலேய படையை எட்டயபுரம் பாளையத்திற்கு அனுப்பியது.ஆங்கிலேயர்களுக்கும் எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக போரிட்ட அழகுமுத்து சகோதரர்களுக்கும் போர் மூண்டது.எண்ணற்ற வீரர்களை உடைய எட்டயபுரம் பாளையம் இப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்டது.இதுவே வரலாற்றில் நடந்த முதல் ஆங்கிலேயருக்கு எதிரான போர் ஆகும்.இதனைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படச் செய்தனர் அழகுமுத்து சகோதரர்கள்.இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே கிளர்ச்சி ஏற்பட்டது.1752ல் நடந்த போர்களத்தில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர் அவ்வப்போது ஆங்கில வீரர்களிடம் பீரங்கி படை வந்து சேரவில்லை.  ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் எட்டையபுரம் உதவியை நாடிய பூலித்தேவனுக்கு எட்டையபுரம் மன்னர் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் அழகுமுத்து சகோதரர்கள் தங்களை நம்பி வந்த பூலித்தேவனுக்கு உதவ ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.இதுவே பாளையக்காரர்களின் கூட்டமைப்பிற்கு முதல் படியாக அமைந்தது.ஆனால் இது தொடரந்து நீட்டிக்கவில்லை,சில மன்னர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டியதால் பாளையக்காரர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது.

சின்ன அழகுமுத்து கோன், 1755ல் எட்டையபுரத்தை தாக்குதல் நடத்திய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு சிவன் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் அளித்துவிட்டு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு உயிர் துறந்தார்.தன் தம்பி சின்ன அழகுமுத்து கோன் இறந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத வீர அழகுமுத்துக்கோன் மற்றும் அவரது படைவீரர்கள் கடுமையான போர்தாக்குதலைக் கையாண்டனர்.போர் முடிவு பெறும் வேளையில் ஆங்கிலேய படை பின் வாங்கியது.இதுவே 1757ல் கான்சாகிப் படை மாவீரன் அழகுமுத்துக்கோன் மீது இரவில் தாக்குதல் நடத்த வழிவகுத்தது.1750ல் ஆங்கிலேயர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்ன அழகுமுத்து தொடங்கிய போரே 1755ல் அவருக்கு முடிவைத் தேடித் தந்தது. கி.பி 1757ஆம் ஆண்டு பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் கான்சாகிப் என்ற ஆங்கிலப் படைத்தளபதியின் சூழ்ச்சியின் காரணமாக பெத்தநாயக்கனூர் கோட்டையில் இரவு பொழுதில் வீர அழகுமுத்துக்கோன் மற்றும் 766 வீரர்களையும் தாக்கினர்.இதில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். வீர அழகுமுத்துக்கோன் இரும்பு சங்கிலியால் கைது செய்யப்பட்டு நடுகாட்டூர் என்னும் இடத்தில் பீரங்கியால் மார்பு பிளக்க சுட்டுக்கொல்லப்பட்டார். எஞ்சிய 248 போர் வீரர்களையும் 6தளபதிகளையும் கொன்று குவித்தனர்.1757ல் நவம்பர் 18 ல் நடந்த இந்நிகழ்வே வரலாற்றில் நடந்த மிகப்பெரிய படுகொலையாக கருதப்படுகிறது.இதுவே இந்திய விடுதலை வரலாற்றில் நடந்த முதல் பீரங்கி படுகொலை ஆகும்.

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் வீர அழகுமுத்துக்கோனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வீர அழகுமுத்துக்கோன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பூலித்தேவன்:-

நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.

1755-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.

பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு எட்டயபுரம் அழகுமுத்து சகோதரர்கள் மற்றும் திருவிதாங்கூர் படையின் உதவியுடன் வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.


வேலு நாச்சியார்:-

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்:-

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் இருந்து காப்பாற்றிய சிங்கமுத்துசேர்வைக்கோன் கோட்டையை விட்டு வெளியேற்றினார்.இதன் பின் சிங்கமுத்து சேர்வை ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிங்கமுத்து சேர்வை :-

முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார் என்று அழைக்கப்படும் இவர் பாஞ்சாலங்குறிச்சியைச்சேர்ந்த பாளையக்காரர் ஆவார்.தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தவர்.இவர் ஒரு தென் இந்திய பாளையக்காரர் இவர் ,பாளையக்காரர் போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார் . ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்னழகை அல்லது சேவூர் என்று பெயர் கொண்ட ஒட்டபிடாரம் எனும் ஊர்.இதற்கு அழகிய வீரபாண்டிய புரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ஒட்டபிடாரத்தை யாதவ மரபைச் சேர்ந்த மன்னர் அளகைக்கோன் 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இவரது ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை எனும் ஊரில் மூலநாத சுவாமி கோவிலை கட்டியுள்ளார். அங்கு இருக்கும் நாற்பது தூண்களிலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அளகைக்கோன் வழிவந்தவர்கள் திருச்சிற்றம்பலநாத உடையார் அய்யமிடாளுடையக்கோனார் 1755 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு தளபதியாய் சிங்கமுத்துசேர்வைகோனார் விளங்கினார்.
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் தலைமையில் சிங்கமுத்துசேர்வைகோன் வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் போரிட்டு வந்தார்.சிங்கமுத்து சேர்வைகள் காரர்களுக்கு சொந்தமான மொட்டையக்கோன் படையும்,அவரது உறவினர்களான சேர்வைக்கோன் படையினரும்,சம்மந்தக்காரர்களான கட்டாலங்குளத்தைச்சேர்ந்த குமார அழகுமுத்து சேர்வைக்கோன்,இவரது மகன் செவத்தையாக்கோனார் என அனைத்து ஆயர் படைகளும் ஊமைத்துரைக்கு ஆதரவாக போர்களத்தில் இறங்கி சண்டை செய்தனர்.
போர் இறுதிகட்டத்தை எட்டியவுடன் கட்டபொம்மன்,ஊமைத்துரை உட்பட முக்கியமானவர்களை கோட்டையைவிட்டு ரகசியமாக வெளியேற்றினார் சிங்கமுத்துசேர்வை கோனார்.
தளபதி சிங்கமுத்துசேர்வை தலைமையிலான ஒருபடை பாஞ்சை கோட்டையின் உட்புறம் இருந்துகொண்டு ஆங்கிலேயர்களை உள்ளே வரவிடாமல் தீரத்துடன் போர் புரிந்தனர்.இடைவிடாமல் நடந்த போரின் முடிவில்
தளபதி சிங்கமுத்துசேர்வை ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளேயே செப்டம்பர் 5, 1799ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். தன் இறுதிமூச்சு உள்ளவரை ஒரு ஆங்கிலேயனைக்கூட கோட்டைக்குள் வரவிடாமல் வீரப்போர் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திர வரலாற்றில் கட்டபொம்மனுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் இவரைப் போன்ற என்னற்ற வீரர்களுக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

மருதுபாண்டியர் :-

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர். 1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் .

1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

இதுவே தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மன்னர்கள் நடத்திய போர். அதன் பின்னர் நடந்ததே வேலூர் புரட்சி, பல தமிழர்களுக்கு இது இன்றும் தெரியாமல் இருப்பதே வேதனை, பகிரவும் இந்த சுதந்திர தினத்திருக்கு முன்பாகவே அணைத்து தமிழர்களுக்கும் இவர்களை பற்றி தெரியட்டும்.
Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

சிவா, Dr.S.Soundarapandian and Joseph28 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

Post by சிவா Mon Dec 26, 2022 9:06 pm

தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. பகிர்வுக்கு நன்றி.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

Post by Dr.S.Soundarapandian Tue Dec 27, 2022 11:55 am

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  103459460
இளைய தலைமுறை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு இது! இது சரிவரக் கூறப்படாததால்தான், தவறான பல கருத்துகள், பாதைகள் , கோலோச்சுகின்றன!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு  Empty Re: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum