ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை

3 posters

Go down

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Empty `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை

Post by சிவா Sat Jan 23, 2010 8:42 am

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 0912e5f9-cdae-43a7-b96e-151393c49de8_300_225secvpf

``நான் மிகவும் இளம்பெண்ணாக இருக்கும்போதே ஒரு பீடாக் கடைக்காரருடன் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். என்னையும், இரு மகன்கள், மகளையும் இழுத்துப் போட்டு அடிப்பார். எங்களுக்கு அவர் `எலக்ட்ரிக் ஷாக்' கூட கொடுத்திருக்கிறார்! அவர் ஒரு பெண் பித்தர்.

ஆனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக என் மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவார். ஒருநாள் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவர், எனது நீண்ட கூந்தலை வெட்டியெடுத்து விட்டார். அதனால் என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன்.

வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய டீக்கடையை அமைத்தேன். அப்போது தான் நான் எனது இரண்டாவது கணவர் பிரகாஷ் ஜாதவைச் சந்தித்தேன். அதே பகுதியைச் சேர்ந்த அவர், அடிக்கடி எனது கடைக்கு வருவார். அவர் என்னை விரும்பினார், விரைவிலேயே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

இதற்கிடையில் மொடாக்குடியால் கல்லீரல் கெட்டுப் போய் எனது முதல் கணவர் இறந்துவிட்டார். நான் எனது டீக்கடையை விரிவுபடுத்தினேன், எனது முன்னாள் கணவரின் பீடாக் கடையையும் சேர்த்து ஓர் உணவகத்தை அமைத்தேன். புதுவாழ்க்கையில் நான் மகிழ்ச்சி கண்டேன். ஆனால் அது அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.

1990 ஜுன் 6-ம் தேதி இரவை நான் மறக்கவே மாட்டேன். அன்று நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன். நள்ளிரவில் அழைப்பு மணியோசை கேட்டு விழித்தேன். கணவர்தான் வந்து விட்டார் என்று நினைத்துப் போய் கதவைத் திறந்தேன். ஆனால் அங்கு எட்டு முதல் ஒன்பது பேர் நின்றிருந்தார்கள். அவர்களில் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரும் அடக்கம். அவரைப் பார்த்ததுமே இது நல்லதுக்கில்லை என்று தோன்றிவிட்டது.

காரணம் அவர் அடிக்கடி என்னைத் தவறான பார்வை பார்ப்பார். பயந்துபோன நான், அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டேன். அவர்கள், `உடனே வீட்டைக் காலி செய்' என்று கத்தினார்கள். அதிர்ச்சியடைந்த நான், `நாங்கள்தான் வாடகையை ஒழுங்காக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே, வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாகவாவது கூற மாட்டீர்களா?' என்று கேட்டேன். ஆனால், வீட்டைக் காலி செய்ய வைப்பது அவர்களின் நோக்கமல்ல என்று நான் விரைவில் புரிந்துகொண்டேன். எப்படி அவர்களைத் திருப்பி அனுப்புவது என்று யோசித்தேன்.

அப்போது அவர்களில் ஒருவன், `இந்தப் பொம்பளைக்குப் பாடம் கற்பிக்க இவளின் ஆடைகளைக் களையலாம்' என்று கூறினான். வீட்டுக்குள் தபதபவென்று புகுந்த அவர்கள் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள், ஒருவன் எனது சேலையை உருவி எறிந்தான். வெறும் ரவிக்கை, உள்பாவாடையுடன் நின்ற நான் உதறிக்கொண்டு வீட்டு பூஜையறைக்குள் பதறியோடினேன்.

அங்கு சிவனின் கையில் இருந்த சூலாயுதத்தை உருவி எடுத்தேன். என்னை நெருங்கித் தொட முயன்றவனின் தொண்டையில் சூலாயுதத்தைப் பாய்ச்சினேன். அவன் தடுமாறித் தரையில் சாய்ந்து அங்கேயே செத்துப்போனான். மற்றவர்களையும் எதிர்கொள்ள நான் தயாரானேன். ஆனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

என்னைக் கற்பழிக்க முயன்றவனைத் தாக்க நினைத்தேனே தவிர, அவனைக் கொல்ல அல்ல. ஆனால் எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் போலீசுக்கு பணம் கொடுத்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிய வைத்தார்.

அமர்வு நீதிமன்றத்தில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான் உயர் நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்ய, அங்கும் அது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நான் உச்ச நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்தேன். தொடர்ந்து போராடுவதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஆனால் எனது நிலையால் எனது கணவர், குழந்தைகள்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். வழக்குச் செலவாக மட்டும் ஏழெட்டு லட்ச ரூபாய் வரை செலவானது. வீட்டிலிருந்த கடைசி பைசா வரை காலி. என்னால் எனது கணவர் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைத்து, நான் அவரை மிகவும் வற்புறுத்தி மறுமணம் செய்துகொள்ள வைத்தேன்.

எனக்கோ சிறை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்போது நான், எனது தாய்மொழியான மராத்தியிலேயே சரியாகப் பேச முடியாததால்தான் எனது நிலையை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூற முடியவில்லை என்பதை உணர்ந்தேன். சிறைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த ஆசிரியர்கள், சக கைதிகளின் ஊக்குவிப்பினால் பி.ஏ. படித்து முடித்தேன்.

இதற்கிடையில் எனது சிறைத்தண்டனையை ஏழாண்டுகளாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். வெளியே போய் மீண்டும் டீக்கடையை நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாக்பூர் யஷ்வந்த்ராவ் சவான் திறந்தவெளிப்பல்கலைக்கழகம் எனக்கு எழுத்தர் பணி வழங்க முன்வந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இன்று நான் எனது பிள்ளைகளுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறேன். சக ஊழியர்கள் என்னை மதிக்கிறார்கள். என்னை பல்கலைக்கழக பியூன் முதன்முதலாக `மேடம்' என்று அழைத்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அதுநாள் வரை எனக்கு கிடைத்த அதிகபட்ச மரியாதை அது!'' -நெகிழ்கிறார் தீரப் பெண்மணி சந்தியா


`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Empty Re: `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை

Post by msmasfaq Sat Jan 23, 2010 10:15 am

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 67637 `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 677196


`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Empty Re: `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை

Post by சபீர் Sat Jan 23, 2010 10:17 am

அருமை நண்பரே வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Empty Re: `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum