ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

Post by Dr.S.Soundarapandian Sat Jul 16, 2022 7:50 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

1 . மனைவி இறந்தபின் ஒரு கணவனின் நினைவுப் பாதைதான் கதைக் கரு.

2. வள்ளியம்மை ஆச்சி தான் இறந்த மனைவி; பறிகொடுத்த கணவன் – மேலச்செவல் என்ற ஊரைச் சேர்ந்த வைரவன் பிள்ளை.; ஐம்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவர் ஆச்சியோடு.

3 . வள்ளியம்மை ஆச்சி எப்படி இறந்தாள்?
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WzHg3gF

ஆக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை , வீடுவாசல் கட்டி வாழ்பவர்கள் , வயதானவுடன் கால்வழுக்கிப் படுப்பது, பிறகு எழுவதே இல்லை என்பதுதான் நிலை! அண்மையில் கூட என் நண்பரும் ஆங்கிலப் பேராசிரியருமான எம்.எஸ். நாகராஜன் அவர்கள் (80க்கு மேல் வயது) குளியலறையில் கால் வழுக்கி, மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார் பாவம்! ஆனால் குணமாகிவிட்டார். ஆனாலும் மக்கள் அந்த வழுவழுக் கற்களையே தளத்தில் பதிக்கின்றனர்!

4 . வயதில் மூத்தவர் இறந்தால், அந்த வீட்டிலுள்ளோர் அழுவது பொதுவாக நமக்குத் தெரியும்! ஆனால், அவர்களில் பெண்கள் அழுகை, அவர் வாய்ச்சொற்கள் இவற்றைக் கவனித்திருக்க மாட்டோம்! அந்த நுட்பம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ AKiqhR1

பார்த்தீர்களா?
அழுகை இருக்குமாம் , ஆனால் வருத்தம் இருக்காதாம்! சொல்லியழும்போது , சொற்கள் முத்துமுத்தாக இருக்குமாம்!இடையே கண்ணீர்த் துளிகள் காணப்படுமாம்! ஆனால். அவை தத்தம் சொந்த இழப்புகளை நினைத்து வருவதால்!
இதுதான் சமுதாய நுட்பம் என்பது! தமிழ் தெரிந்த எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாது ! சமுதாய நுணுக்கம் அறிந்திருக்கவேண்டும்!
இழவு வீட்டில் அழும் பெண், ஒப்பாரி வைக்கையில், வீட்டின் பாகற் கொடியைப் பார்த்துவிட்டாள்! அப்போது எப்படிப் பாடினாள்? ‘பந்தலிலே பாவக்காய்! பந்தலிலே பாவக்காய்!’ என்று தன்னுடன் ஒப்புவைத்தவளுக்குச் சாடை கூறினாள்! கேட்டவள், ‘போகும்போது பாத்துக்குவோம்! போகும்போது பாத்துக்குவோம்!’என்று பதிலுக்குப் பாடினாளாம்! இதைக் கேட்ட வீட்டுக்காரி , அவள் இலேசுப்பட்டவாளா? அவள் , ‘ஐயையோ! ஐயையோ! நன் விதைக்கில்ல விட்டிருக்கேன்! விதைக்கில்ல விட்டிருக்கேன்!’ என்று இசை பாடினாளாம்! நான் பள்ளிக் காலத்தில் கேட்டுள்ளேன்! புதுமைப்பித்தனின் மேலை வரிகள் சரிதான்!

5. ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்திருப்பான்! ’இன்னும் விடியாத’ அந்த நேரத்தில் வானத்து வெள்ளி எப்படி இருந்ததாம்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ Chw2qRO

6 . ஒரு செய்தியைச் சிறுகதை ஆசிரியர் எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்குப் புதுமைப்பித்தனின் இந்த இடத்தைக் கூறலாம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ ES6auBE

‘வயரவன் பிள்ளை வெளியில் உட்கார்ந்திருந்தார் ’ – இதுதானே செய்தி? ஆனால் இப்படி எழுதினால் ‘கதைச்சுவை’ கிடைக்காது!அதனால்தான் மேற்கண்டவாறு வரையலானார் புதுமைப்பித்தன்! (குறடு – வீட்டின் வெளிப்புறத் தின்ணை; குறட்டைத் தாண்டி உள்ளே வந்தால் இருக்கும் வீட்டுத் திண்ணை அல்ல)

7 . மனிதனின் மன ஓட்டத்தின் பின்னே ஆசிரியர் விரட்டிச் சென்று , அது நிற்குமிடத்தில் தானும் நின்று , நம்மை அழைத்துக் காட்டும் வித்தை புதுமைப்பித்தனுடையது! மனைவி இறந்த மறுநாள் காலையில், கணவன் வயிரவன் பிள்ளையின் மன ஓட்டம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WxJii5f

8 . வயிரவன் பிள்ளை - ஐம்பதாண்டுக் காலம் மனைவியோடு வாழ்ந்த வயிரவன் பிள்ளை - இப்போது அவள் இறந்துவிட்ட பிறகு என்னென்ன நினைப்பார்? என்னென்ன அவரின் முன் தோன்றும்?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ F5ctyhF

படித்ததும் ஒவ்வொருவரும் ஒரு வயிரவன் பிள்ளையாக மாறுகிறோம்!
நெஞ்சை உருக்கும் நடை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம் சான்று!

9 . வயிரவன் பிள்ளை மனது அல்லாடுகையில் , வள்ளியம்மை ஆச்சியின் நகை மீது கண்ணாக இருக்கிறது உறவுப் பெண்களிடம்!
மனைவியைப் பறிகொடுத்த கணவனின் நினைவுப் பாதை வேறு! அம் மனைவியின் நகைகள் மீது வீட்டுப் பெண்களின் நினைவுப் பாதை வேறு! ஒருத்தி சொல்கிறாள் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WmrYGMI

10 . பொதுவாகவே, வயதானவர்களுக்குச் சிறார்கள் மீது ஒரு பிரியம் ஏற்படும்! மனைவியை இழந்த துக்கத்தில் வயிரவன்பிள்ளை இருந்தாலும் , தன் பக்கத்தில் வந்த சிறுவனை அணைத்துக் கொள்கிறார் ! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ CjdmknY

11 . ஆச்சி இறந்ததை நினைவிற்கொண்டு, ஒருவர் அச் சிறுவனிடம் ‘எலே எங்கடா உங்க ஆச்சி?’ எனக் கேட்கிறார்; அதற்கு அச் சிறுவன் சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ OfJbuPO

‘அர்த்தமில்லமல்’ என்பதைக் கவனியுங்கள்! சிறுவனுக்கு மனித இறப்பு பற்றித் தெரியாது! அவனது நினைவுப் பாதை வேறு!

12 . இழவுக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த சடங்குகளிலேயே கவனமாக உள்ளனர்! அவர்களது நினைவுப் பாதை அது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ MSt021m

13. மொட்டைபோட்ட தலையுடன் சுடுகாட்டிற்குச் செல்லும் தன் மகன் , எந்தக் கவலையும் இல்லாமல் , செல்கிறான்; ஆனால், மனைவியை இழந்த வயிரவன்பிள்ளையின் நடை தள்ளாடுகிறது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ SqZN0La

14. வயிரவன்பிள்ளையின் நினைவுப் பாதையில், இறந்த தன் மனைவி, அன்று மணக்கோலத்தில் வந்த காட்சி இந்த நேரத்தில் கண்முன் நின்றது! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ UCl54fO

சரியான இடத்தில் சரியான சித்திரத்தைக் காட்டவேண்டியது சிறுகதை உத்தி! இதைத்தான் கையாண்டுள்ளார் புதுமைப்பித்தன்!

15 . சுடுகாட்டில், இப்போது சடங்குகள் தொடங்கப் போகின்றன! ஆனால், இப்போது நடக்க இருப்பவை பற்றி நினைத்துப் பார்க்க வயிரவன்பிள்ளையால் இயலவில்லை! அவரது நினைவுப் பாதையின் உச்சம் (climax) இதுதான்! துக்கத்தின் உச்சம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ FpVji3Z

16 . புதுமைப்பித்தனுக்கு , ‘வயிரவன்பிள்ளையின் துயர நெஞ்சைச் சரிவரச் சொன்னோமா? ’ என்ற கீறல் ஒன்று அவரில் விழுந்தது போலும்! அதனால், மேலும் தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WWKaYXU

பேரனுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை! அதனால் அவன் மற்றவர்களைவிட மிகப் பின்தங்கி, ஒரு வேடிக்கையாக வந்துள்ளான்!

இது, வயிரவன்பிள்ளையின் கனத்த நினைவுப் பாதையை அடிக்கோடிட்டுக் காட்டும் சிறுகதை உத்தி!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum