ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’

Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’

Post by Dr.S.Soundarapandian Thu Jul 14, 2022 6:40 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’


1 . கைதி எண் 43! ஆம், இவர் பெயர் கடைசி வரை கூறப்படவே இல்லை! அவரை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ BnQ4oa7

நெர் – 43! அந்தக் காலத்தில், number என்ற சொல் நம்மவர்களைப் படாத பாடு படுத்தியுள்ளது! பலர் ‘நிர்’ என்று முன்பு எழுதியுள்ளனர்! புதுமைப்பித்தன் ‘நெர்’ என்று எழுதியுள்ளார்; யாரும் ‘நர்’ என்று எழுதவில்லை! ‘நம்பர்’ என்பதன் சுருக்கம் ‘நர்’தானே? வெகுநாட்கள் கழித்துத்தான் ‘எண்’ என  ஒருமுகமாக எழுதலாயினர்!
கதையின்படி, எண்43, ஒரு புரட்சிச் சிந்தனை உள்ளவந்தான்; ஆனால் பயங்கரமான ஆள் அல்லன்! அதிலும் இவரைக் கொலைக்குற்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர்! அரசாங்கம் அதன் வசதிக்காக எடுத்த முடிவு இது ! எண்43இன் தோற்றத்தைப் பார்த்தாவது அரசின் தவற்றை உணர்ந்திருக்கலாம் ; உணரவில்லை! அரசு இயந்திரம் என்பது , எக்காலத்திலும் , ஒரு மோசமான இயந்திரம்! இந்தக் கருத்தையே புதுமைப்பித்தன் சொல்லவருகிறார்!

2 . எண் 43க்கு ஒரு ‘சிநேகிதை’! அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார் 43! இன்னும்15 நாட்களில் தூக்கு இருக்கும் நிலையில், அவர் எழுதி வைத்திருக்கும் கிரந்தத்தை (புத்தகத்தை) அவளிடம் ஒப்படைத்துவிட்டால் , அவருக்குத் திருப்தியாகிவிடும்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ P8gDJ1G

சிறையிலிருந்துகொண்டு அக் கைதி எழுதிய நூல் மக்களின் பார்வைக்குப் போகவேண்டும் என்பதால், சமுதாயத்திற்குத் தேவையான சிந்தனைகள் கொண்டது அஃது என்பது விளங்குகிறது!
கைதியின் ‘சிநேகிதை’யும், அக் ‘கிரந்த’மும் நமக்கு ஆர்வத்தைத் தூண்டி விடுவனவாக உள்ளன! அடிப்படைச் சிறுகதை உத்தி இது!
 
3 . இப்போது, சிறையில் அக் கைதியால் எழுதப்பட்ட புத்தகம் நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும்! இதற்கு என்ன செய்கிறார் ஆசிரியர்? சிறைக் காவலரைச் சோதனை போட அனுப்புகிறார்; அவர் ஏன் சோதனை போட விரும்பினாராம்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ 33jG5QI

 ‘சூப்பிரண்ட்’ பரமேஸ்வரனின் அந்தராத்மா சொல்லியதோ என்னவோ என்று குழப்பிவிட்டார் பாருங்கள்! இதுவும் ஒரு உத்திதான்! ஏனென்றால், உலகில் எல்லாமே ஒரு கணக்குவழக்கோடு நடந்துகொண்டிருப்பதில்லை! இஃது ஒரு சமுதாய உளவியல்தான்!

4 . சிறையிலிருந்த அக் கைதியிடமிருந்து  தாள் கற்றையை அதிகாரிகள் பிடுங்கிய காட்சியை இப்படிச் சித்திரிக்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ ZmiHhrS

‘அதிகாரிகள் அடித்து உதைத்துப் பிடுங்கினார்கள்’ என எழுதவில்லை! அவர் எழுதியதை மீண்டும் ஒருமுறை மேலே பாருங்கள்!  இதுதான் புதுமைப்பித்தனைத் தேர்ந்த எழுத்தாளர் எனச் சாற்றவல்ல இடம்!
இங்கு மீண்டும் , கைதி ஓர் இலட்சியவாதி என்பதை உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர் கவனியுங்கள்! ஏனெனில், அப்போதுதான் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்படும்போது ஓர் அவலச்சுவை தோன்றும்! இதுதான் உத்தி!

5 . கைதிக்குத் தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது! அதனால், கைதியின் சிநேகிதைக்குக் கைதியைப் பார்க்க அனுமதி இல்லை!

6. இப்போது , கதை ‘சூப்பிரண்ட்’ பரமேஸ்வரன் பக்கம் திரும்புகிறது.
பரமேஸ்வரன் , அதிகாரியாக இருந்தாலும் , சதா சிறையிலேயே இருக்கவேடிய சூழல்! இவ்வகையில் இவரும் கைதிதான் என்கிறார் ஆசிரியர்! பரமேஸ்வரன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் நமக்கு உண்டாகவேண்டும்; கதை இறுதிக்கு இது தேவை! அதனால் இப்படி எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ NJLAjTi

 ’நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!’ (மூதுரை 10) என்றார் ஔவையார்! இது பொதுவான நீதி மொழிதான்! ஆனால்,  ‘இது ஒரு தத்துவப் பிரமை’ என்று ஒரு போடு போடுகிறார் புதுமைப்பித்தன்! சரிதானே? தொடர்ந்து ஆசிரியர் , ‘தீயார்’களைத் தண்டிக்கிறேன் எனக் கிளம்பும் அரசு, நல்லவர்களையும்  , தெரிந்தோ தெரியாமலோ, தண்டித்துவிடுகிறது எனக் கூறுகிறார் ஆசிரியர்! இதுவும் சரிதானே?  இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டு, சிறை அதிகாரி பரமேஸ்வரன் என்கிறார் ஆசிரியர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தமாதிரி எல்லாம் பரமேஸ்வரன் நினைத்ததே இல்லையாம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ QE7siHM

துயருரும் மக்களுக்குத் தாம் ஏன் இப்படித் துயருருகிறோம் என்பது தெரியாது! உண்மையைச் சொன்னாலும், சொன்னவனைச் சந்தேகப்படுவார்களே ஒழிய உண்மை அவர்களுக்கு எட்டவே எட்டாது! இஃது ஒரு சமுதாய உளவியல்!  இதைத்தான் தொட்டுக் காட்டுகிறார் புதுமைப்பித்தன் வேறுவகையில்!

7 . அது சரி! சிறையில் , சிறையதிகாரி பரமேஸ்வரன் நம் கைதியிடம் கைப்பற்றிய தாள்களில் என்ன இருந்தது?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ 7XzYMNa

கைதிக்கு முகம் காட்டாத அப் பெண், கைதியின் மனத்தை வெகுவாகப் பாதித்துள்ளாள்!  அது மட்டுமல்ல அவனின் புரட்சிக்கு ஈடுகொடுப்பவள் என்றும் நம்புகிறான்! ஆகவே, கைதி எழுதியது முழுவதும் காதற் செய்திகள்தான் என எண்ண வேண்டியதில்லை; அப்படி ஆசிரியர் காட்டவும் இல்லை. அத் தாள்களைப் படித்த அதிகாரி பரமேஸ்வரனின் மனமே மாறிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! பரமேஸ்வரனின் மன ஓட்டம் இதுதான்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ JaOK1sE

‘அந்நிய அரசாக இருந்தால் என்ன, நம் அரசாக இருந்தால் என்ன?எல்லாம் இப்படித்தான்’என்ற பாங்கில் கூறுவதைக் கவனியுங்கள் ! 1934இல் எழுதப்பட்ட கதை இது; அப்போது தமிழகத்தை ஜஸ்டிஸ் கட்சி ஆண்டது.
‘கடமை’பெரிதுதான்! ஆனால் , அதையும் பகுத்தறிவோடு பயன்படுத்தவேண்டும்! – என்ற அரிய கருத்தை இங்கு மொழிகிறார் புதுமைப்பித்தன்! அடிக்கடி, திரைப்படங்களில் வரும் மோதல் காட்சிதான் இது! இங்கே ,  ‘அரசுக் கடமையா? சமுதாயக் கடமையா ?’ என்று கேட்கப்படுகிறது சிறையதிகாரி பரமேசுவரனிடம்; பரமேசுவரன், ‘சமுதாயக் கடமையைத் தேர்ந்தெடுக்கிறார்!’; ‘பறிமுதல்’கதை , அர்த்தமுள்ளதாகி விட்டது!

8 . நம் கைதியைப் பார்க்கச் ‘சிநேகிதை’ப் பெண் , சுவர் ஏறிக்குதித்து, சிறைக்கு நுழைகிறாள்; ஆனால், பரமேசுவரன் பிடித்துக்கொள்கிறார்! ஆனால் , ‘சல்லடம்’ போட்ட  (சல்லடம் – கால் சட்டை ; டிரௌசர்) அவளைத் தண்டிக்கவில்லை! அவர்தான் கைதியின் எழுத்துகளைப் படித்து உண்மையைத் தெரிந்துகொண்டாரே!
கைதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தாள் கற்றையை, அப் பெண்ணின் பைக்குள் போடுகிறார் பரமேசுவரன்; அதை எப்படித் தீட்டுகிறார் ஆசிரியர்?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ QrNQssx

நாமாக இருந்தால், ‘தாள் கற்றையை அவள் பைக்குள் போட்டார் பரமேஸ்வரன்’என்றுதானே எழுதுவோம்? ஆனால், புதுமைப்பித்தன் எப்படி எழுதினார் பாருங்கள்!
இருவரும் ஏன் மௌனமாக நின்றனர்? அவள் இதை எதிர்பார்க்கவில்லை! ‘ஆமாம்! இதைத் தக்க வழியில் நீதான் பயன்படுத்த வேண்டும்!’ என்று பரமேசுவரன் மௌன மொழியால் தெரிவித்தார்! இதனைப் புரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகுமல்லவா? அதுதான் ‘மௌனம்!’

9 .அவ்வளவுதான்! கதை முடிந்தது! முடிக்கும்போது, ஒரு தொடரை உச்சமாக (climax)எழுதி முடிக்கிறார் ஆசிரியர்:

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘பறிமுதல்’ PJ05S2y

ஒன்றும் பறிமுதல் ஆகவில்லை!
வெளிப்படையாகத் தாள் கற்றை பறிமுதல் செய்யப்பட்டாலும், அது சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டதே! கைதியின் இலட்சியம் எல்லாம், ‘சல்லடம்’போட்ட பெண் மூலமாக இனி வளருமல்லவா? நிலைப்படுமல்லவா?
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum