ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’

Go down

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ Empty சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’

Post by Dr.S.Soundarapandian Fri Jul 08, 2022 2:18 pm

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’

1 . முதலில் ராமு என்ற எட்டு வயதுச் சிறுவனை அறிமுகப்படுத்துகிறார்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ Kc6pupH

இந்த இராமசாமிதான் , கதை இறுதியில் கனவு கண்டு, அகமகிழ்பவன், பள்ளியில்; ஆசிரியரைப் பழிவாங்கும்போது நரகத்திலிருந்து விடுபட்டு மோட்சம் அடைந்ததாக மகிழ்கிறான்! ஆகவே கதைத் தலைப்பு ‘மோட்சம்’!
ஆகவே இவனது உருவத்தை நம்மிடம் மேற்கண்டவாறு நிலைநிறுத்தும் தேவை ஆசிரியருக்கு!
உருவத்தை மட்டும் நம்மிடம் காட்டவில்லை, அவனின் மனதையும் காட்டுகிறார்! அவன் கோழைப்பட்ட மனதுக்காரன் என்று ஒரு வரியில் சொல்லவில்லை! கோழைப்பட்டதன் காரணத்தையும் கூறியுள்ளார்! காரியத்தோடு காரணத்தையும் தெரிவிப்பது நல்ல சிறுகதை உத்தி! நம் நெஞ்சத்தை அப்போதுதான் அச் சிறுகதை தொடும்!
வளர்ச்சி அவ்வளவாக இல்லாதவனாக, ஒல்லியாக இருக்கும் சிறுவர்களுக்கு அடிக்கடி நோய் வரும்! நாம் பார்த்திருக்கிறோம்! இதனை நழுவ விடாமல் எழுதியுள்ளார் கவனியுங்கள்! கதைக்களத்தை ,இவ்வாறு செம்மையாக அமைக்கிறார் பாருங்கள்! கதைக் களம் செம்மையாக அமைந்தால்தான் , அதில் நம்மைக்கொண்டுபோய் ஆசிரியரால் இறக்கமுடியும்! இதுதான் உத்தி!
2 . அம்மா தூரமானால் ஓர் ஐந்து நாட்களுக்கு அச் சிறுவனால் வீட்டுப்பாடம் படிக்க முடியாது; அதனால், பள்ளியில் அவனுக்கு அடி உதைதான் ஆசிரியர்கள் தருவார்கள்!
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ VY7yqxI

இஃது கதைக்கான இரண்டாம் களம்! பின்னே , ஆசிரியரிடம் சிறுவன் உதை வாங்குவதற்கு இது தேவையாகிறது கதாசிரியருக்கு.
வீட்டுச் சிறார்களுக்கு அவர்கள் கவலை! பெரியவர்களுக்கு அவர்கள் கவலை! இந்த இடைவெளியைத்தான் சிறுவனின் புலம்பலில் மேலே பார்த்தோம்!
சிறார்கள் பள்ளி செல்லும் காலம் இன்றியமையாதது! எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர்களின் கல்வி , இதுபோன்ற குழறுபடியால் கெட்டுப்போயுள்ளது! பள்ளிவரை வந்து, பிறகு ஆசிரியர் அடிப்பார் என்று வேறு எங்கோ போய்விட்டு, மாலையில் வீடு திரும்பிய பையன்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்; வீட்டார் கவனிக்க முடியாமல் படிப்பு அப்போதே நிறுத்தப்பட்ட சம்பவங்கள் பல!பல!

3 . ‘மோட்சம்’ , 1934ஐ ஒட்டிய பள்ளிக்கூட நிலவரக் கதை; இப்போதைய பள்ளிக்கூட நிலையிலும் சற்று வேறுபட்டது; அப்போதெல்லாம் ஆசிரியர் என்றால் இப்படித்தான் உடை உடுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது; தலைப்பாகை கட்டாயம்! எனக்கு நீண்ட நாட்களாக ஒன்று புரியாமல் இருந்தது; பத்திரிகைகளில் ஆசிரியர் என்றால் ஏன் தலைப்பாகையுடன் கேலிச்சித்திரம் போடுகிறார்கள்? என்று;சில வருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது, அந்நாளில் அது கட்டாய உடை என்று!
நம் சிறுவன் இராமு, அன்று பள்ளிக்குத் தாமதமாகப் போனதையும் ஆசிரியர் எதிர்வினையயும் இப்படிக் காட்டுகிறார்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ D13nvKS

‘திருட்டு நாய்’என்று திட்டுவது, தரதர என்று இழுப்பது எல்லாம் அன்று சர்வ சாதாரணம்! ஆசிரியர் கற்பனையாகக் கூறவில்லை!
பொதுவாகவே , அந்தக் காலத்துப் பெரியவர்கள் திட்டுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர்! தந்தை மகனைத் திட்டுவது, கடை முதலாளி வேலைக்காரனைத் திட்டுவது , மூதாட்டியர் தனக்குப் பிடிக்காதோரைத் திட்டுவது என்று இப்படித், திட்டுவது பல வகைகளில் இருந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! ‘ஏசல்’ இலக்கிய வகையே இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கல்வி பெருகப் பெருகத்தான் , இது குறைந்தது!

4 . வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று அந்த ஒரு ஆசிரியர் மட்டும்தான் அடித்தார் என்பதில்லை; எத்தனை பாடங்கள் இருந்ததோ அத்தனைப் பாட ஆசிரியர்களும் பிரம்படி கொடுத்தார்கள்!
இப்போது, முதலில் அடித்த அதே ஆசிரியர் இப்போது பூகோளப் பாடத்திற்கு வருகிறார்! இம் முறை நடந்தது!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ MfHPly1

தலைப்பாகையையும் பிரம்பையும் தவறாது இங்கு ஆசிரியர் காட்டுவதைக் கவனிக்க! மாணவர்களின் நடுக்கத்தைக், குறிப்பாக நம் இராமுவின் நடுக்கத்தைச், சித்திரத்தில் கொடுக்கவேண்டும் ஆசிரியருக்கு! இன்னும் இருக்கிறது !:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ C39PF1j

முதலில் டெல்லி என்று சரியான விடையைத்தான் சொன்னான் இராமு; ஆனால் ‘என்ன?’என்று தலைப்பாகை உறுமியதும், ‘இல்லை இல்லை’ என்று சொல்வதை நோக்குவீர்! கதைக் களத்திலிருந்து நம்மை விலகாதபடி எப்படிப் பார்த்துக்கொள்கிறார் ஆசிரியர் பாருங்கள்! நல்ல உத்தி அல்லவா?
இராமு மேப்பில் டெல்லியைக் காட்ட முயலும் காட்சியைக் கவனித்தீர்களா? ‘விரல் ஊர்கிறது, கண் பிரம்பின் மேல்!’ இப்போது சொன்ன உத்திக்கூர்மை!
முன்பு ‘நாயே’ எனத் திட்டிய தலைப்பாகை , இப்போது ‘கழுதை’ எனத் திட்டுவதையும் காண்க!
திட்டுவதோடா? ‘தறிகெட்டு வேட்டையாடும் பிரம்பு’ அதன் வேலையைச் செய்கிறது! பாவம் இராமு!
5 . புத்தகத்தோடு வெளியே போய் விழுந்த மாணவனுக்கு ஒரு கனவு!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ Q16XTrA

இராமு, இப்போ ‘நாயே’, ‘ராஸ்கல்’ என்றெல்லாம் திட்டுகிறான் முன் ஆசிரியரை! அவர் பிரம்பு வைத்திருந்தார்; இப்போ இராமு, தடிக்கம்பு வைத்திருக்கிறான்! முன் தன்னை வெளியே போய் விழுமாறு உதைத்தார் அல்லவா? இவனும் அதைப்பொலவே உதைத்துத் தள்ளுகிறான்! தன்னைப், ’படித்து ஒப்பித்துவிட்டுத்தான் போகவேண்டும் ’அவர் சொன்னாரல்லவா? பதிலுக்கு இராமு ‘நீ தலைகீழாக நின்று படித்து ஒப்பித்துவிட்டுத்தான் போகவேண்டும்’ என்கிறான்!
இப்படியாக மனதுக்குள் ஒரு ‘மோட்ச’த்தைத் தேடிக்கொள்கிறான் இராமு!

6 . பூகோள ஆசிரியர் மீதுதான் இராமுவுக்குக் கடுங் கோபம்! ஆனால், எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லையாம்! நல்ல ஆசிரியரிடம் தனது மோட்ச உலகில் எப்படி நடந்துகொள்கிறான் இராமு?:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ 29RE84a

கனவில், பள்ளிக்குத் தாமதமாக வந்த அந்த நல்ல ஆசிரியருக்கு இலட்டு ஊட்டுகிறான் இராமு! தன்னிடம் முன்பு கடுமையாக நடந்த ஆசிரியர் இப்போ உதைபட்டுக் கிடப்பதைச் சொல்லிக்காட்டுகிறான் இராமு!
கனவில் வந்தவை, இராமுவின் மனதுக்குள் இருப்பவை!

‘கனவு’ எனும் செய்கையை நல்ல உத்தியாகத் திறம்படப் பயன்படுத்துகிறார் புதுமைப்பித்தன் , அவரது சிறுகதைகளில்!

சிறுவன் கனவு கண்டதைப் பார்த்தோம்! ஆனால், ‘கனவு’ என்ற சொல்லை ஓரிடத்திற்கூடப் புதுமைபித்தன் எழுதவில்லை! நம்மை உணரவைத்துள்ளார்! இவ்வாறு , படிப்பவரை உணரவைப்பது சிறுகதையின் தலையாய உத்தி! எல்லாவற்றையுமே வெளிப்படையாக எழுதினால், அது சிறுகதையாக அமையாது! ‘அறிக்கை’ (report) என்று ஆகிவிடும்!

7 . சிறுவனின் கனவை ஓர் அடி கொடுத்துக் கலைக்கிறார் முன் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘மோட்சம்’ 1O2gnRy

அலறியடித்தபடி கனவு கலைந்து , அடித்த ஆசிரியர் முன் நிற்கிறான் இராமு! கதை நிறைவடைகிறது.

8 . ‘மோட்சம்’ கதையில், புதுமைப்பித்தன் , கல்விசார் அம்சங்கள் சிலவற்றைப் பதித்துள்ளார்!:
(அ) ஆசிரியர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; திருத்தப்பட வேண்டியவர்களும் இருக்கிறார்கள்.
(ஆ) ஆசிரியர்கள், ’நம் முன் இருக்கும் மாணவர்களே வருங்காலத்தைக் கொண்டுசெல்வோர்’ என்ற உணர்வோடு அவர்களைப் பார்க்கவேண்டும்! நமக்கு விளையாடக் கிடைத்த பந்துகளாக மாணவர்களைப் பார்க்கக் கூடாது.
(இ)நல்ல சூழல் கிடைப்பது , நல்ல மாணவர்களை உருவாக்கும்.
இதனை வீட்டார் உணர்ந்து , மாணவர்களின் படிப்பில் எந்த ஊறும் வாராவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum