ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

2 posters

Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

Post by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 1:49 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு

2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ 0HPu5BU

தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!

3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ VYFbPo7

( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!

4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ XH9qIL7

அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ TXAb06o

5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!

6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ P1ikm5R

7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ ODs6rsL

‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?

8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ IHNrMgS

9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ OxYvVsQ

உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Z9EyoNy

குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!

10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?

சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!

11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ PTcXQwT

இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!

12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Dm82p8u

‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:14 pm

5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!

அருமையிருக்கு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

Post by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum