ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் களம் --நகராட்சி தேர்தல்.--ரசிக்க --தொடர் பதிவு.

Go down

தேர்தல் களம் --நகராட்சி தேர்தல்.--ரசிக்க --தொடர் பதிவு. Empty தேர்தல் களம் --நகராட்சி தேர்தல்.--ரசிக்க --தொடர் பதிவு.

Post by T.N.Balasubramanian Tue Feb 08, 2022 5:39 pm

Code:
தேர்தல் களம் --பல கட்சிகளின் வீர தீர பேச்சுக்களை கேட்டு ரசிக்கலாம்.
ஆளும் கட்சி ,எதிர் கட்சி ,நட்பு கட்சி, தேசிய கட்சிகள்,சுயேச்சை கட்சிகள்
பேச்சை பதிவு செய்யுங்கள்
  

கும்பகோணம்: தேமுதிகவுக்கு கூட்டம் கூடவில்லை என்று சொல்கிறவர்கள் கன்னத்தில் அறையுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக கோலோச்சிய தேமுதிக இன்று எங்கே இருக்கிறது என தெரியாத அளவுக்கு காணாமலேயே போய்விட்டது. தமிழக தேர்தல் களத்தில் தீர்மானிக்கிற சக்தியாக தேமுதிகவும் ஒரு காலத்தில் இருந்தது என்பதாகிப் போனது அதன் வரலாறு.

தேமுதிக சர்ச்சை பேச்சுகள் தேமுதிகவின் பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் பிற கட்சிகளுக்கு தாவிவிட்டனர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மட்டுமே தேமுதிகவின் முகங்களாக இருக்கின்றனர். பிரேமலதாவும் விஜயபிரபாகரனும் பொதுமேடைகளில் பேசுகிற பேச்சுகள் எப்போதும் சர்ச்சையாகத்தான் இருக்கின்றன.

செவிட்டில் அறையுங்க.. இந்த நிலையில் கும்பகோணம் அருகே தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன் பேசியதாவது: கும்பகோணத்தில் முன்னர் நான் பேசியது சர்ச்சையானதால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கொடுத்தனர். தேமுதிக முன்னர் போல.. இப்போது தேமுதிகவுக்கு கூட்டமே வருவதில்லை.. தேமுதிகவுக்கு கூட்டம் குறைவு.. இப்படியெல்லாம் பேசுகிறவர்கள் செவிட்டிலேயே விடுங்கள்.

அதிமுக பரிதாபம் தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் என்பது குறைந்துதான் உள்ளது. அதனை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்... ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு காரணமே அரசியல் சூழ்ச்சிதான். தமிழக அரசியல் என்பது தேமுதிகவை சுற்றித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை யாருமே ஏன் பேசுவதே இல்லை? தேமுதிக கூட்டணியில் இல்லாததால் அதிமுக, எதிர்க்கட்சியாகிவிட்டது என்பதை அந்த கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர்.

விஜயகாந்த் சிங்கம் விஜயகாந்த் உடல்நலம் சரியில்லை என்பதால் வீட்டில் இருக்கிறார். விஜயகாந்த் வெளியே வராமல் இருக்கலாம். ஆனால் குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். எல்லோரும் என்னுடன் இருங்கள்.. உங்களால் தேமுதிக மீண்டும் எழும். தேமுதிகவின் பலமும் அதிகரிக்கும். இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்

நன்றி தட்ஸ் தமிழ் 


Last edited by T.N.Balasubramanian on Tue Feb 08, 2022 6:00 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தல் களம் --நகராட்சி தேர்தல்.--ரசிக்க --தொடர் பதிவு. Empty Re: தேர்தல் களம் --நகராட்சி தேர்தல்.--ரசிக்க --தொடர் பதிவு.

Post by T.N.Balasubramanian Tue Feb 08, 2022 5:48 pm

என்னங்க இது?.. திமுக, பாஜகவுக்கே டஃப் தரும் "கண்ணாத்தாள்".. நாட்டரசன்கோட்டையில் அப்படி என்ன இருக்கு?--
2வது வார்டு இங்கு வார்டு தேர்வு எப்போதுமே வித்தியாசமாக நடக்குமாம்.. 12 வது வார்டு கவுன்சிலரை ஒவ்வொரு முறையும் அங்கு வீற்றிருக்கும் அன்னை கண்ணாத்தாள் தான் தேர்வு செய்து தருவார் என்று வாக்காளர்கள் சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த 12 வார்டுகளில் 6571 பேர் வசிக்கின்றனர்... இதில் 5652 வாக்காளர்கள் உள்ளனர். 12வது வார்டு எப்போதும் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு தான் ஒதுக்கப்படும்.

கண்ணாத்தாள் ஆனால் இங்கு எப்போதுமே போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிவிடுவார்கள்.. கண்ணாத்தாள் அதாவது முளைக்கொட்டு திண்ணை கோயிலில் அம்மன் சந்நிதி முன்பு அந்த சீட்டுக்களை குலுக்கி போடுவார்கள்.. அதில் இருந்து முதலில் வரும் நபரை தான் போட்டியின்றி தேர்வு செய்வார்கள்... எப்போதுமே இதுதான் அங்கு நடைமுறையாம்.. இந்த முறையும் சீட்டில் பெயர் எழுதி கொண்டு, வேட்பாளர்கள் எல்லாரும் கண்ணாத்தாளிடம் சென்றார்கள்..சீட்டை குலுக்கி போட்டு போட்டுவிட்டனர்.. அதன்படி ஒரு வேட்பாளரும் தேர்வாகிவிட்டார்.

60 வருடமாகவே இந்த நடைமுறை உள்ளதாம்.. இந்த முறை 12வது வார்டில் போட்டியிட 13 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.. அம்மன் முன்பு சீட்டை குலுக்கி போட்டு எடுத்ததில், பெண் வேட்பாளர் பெயர் வந்திருக்கிறது.. அதனால் அந்த பெண்தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டாலே கிட்டத்தட்ட அவர்தான் வெற்றியாளரும் ஆவார்.. இந்த நடைமுறை ஆச்சரியத்தை தந்தாலும், வழக்கமாக தேர்தல் களத்தில் நடக்கும் பூசல், தகராறு, போன்றவைகள் இல்லாமல் இருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.

நன்றி தட்ஸ் தமிழ். 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum