ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

2 posters

Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 2:09 pm

நோய் எதிர்ப்புத்திறனை ஏன் அதிகரிக்க வேண்டும்?
நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  764420


ஒமைக்ரான் வேற்றுருவால் அச்சமான சூழல் உருவாகியிருந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர் நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றார்கள். மருத்துவ அணுகுமுறை, தடுப்பூசி போன்றவற்றால் இது சாத்தியமானது என்றாலும், இவற்றைவிட முக்கியப் பங்காற்றியது நமது உடலில் காணப்படும் ‘நோய் எதிர்ப்புத்திறன்’.
தொடருகிறது.
நன்றி தமிழ் ஹிந்து 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty Re: நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 2:13 pm

----2-----
சாலையோரக் கடையின் விளம்பரப் பலகையில் ‘இங்கே நோய் எதிர்ப்பாற்றாலை அதிகரிக்கும் கம்புத் தோசை கிடைக்கும்’ என எழுதிவைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நோய் எதிர்ப்புத்திறன் என்பது கம்புத் தோசையையும், உலகத் தரச்சான்றிதழ் பெற்ற சத்துமாவினையும் உண்பதால் மட்டுமே பெற்றுவிடக்கூடிய உடல் திறன் அல்ல. அது உடலின் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு. நோய் எதிர்ப்புத்திறன் பற்றிய சரியான புரிதலே, திறன் வாய்ந்த நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுவதற்கு உதவும்.
நோய் எதிர்ப்புத்திறனின் வகைகள்

நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறன் இரண்டு வகைப்படும். முதலாவது, இயல்பாக நமது உடலில் அமைந்திருக்கும் ‘Innate Immunity’. ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களும், தோல், தொண்டை, குடல், கல்லீரல், மூளை ஆகியவற்றில் உள்ள நோய்த் தடுப்புத்திறன் பெற்ற திசுக்களும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட்டு நோய்த் தொற்றினைத் தடுப்பது இந்த வகையில் அடங்கும்.
இரண்டாவது வகையானது, ‘Acquired or Adaptive immunity’ என்று அழைக்கப்படுகிறது. இதனை மேலும், Active and Passive immunity என இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்கள். நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கில் உடல் தன்னியல்பாக உற்பத்திசெய்யும் எதிரணுக்கள், டி-செல், பீட்டா செல் அல்லது தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசிகள் ‘ஆக்டிவ் இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகின்றன. தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அல்லது கரோனா நோய்த்தொற்றிற்கு வழங்கப்படும் ‘பிளாஸ்மா தெரபி’ போன்றவற்றால் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் ‘Passive Immunity’ என்று அழைக்கப்படுகிறது.
உணவும் நோய் எதிர்ப்புத்திறனும்
நம்முடைய நோய் எதிர்ப்புத்திறனானது உணவு முறை, மனநலம், உடற்பயிற்சி, உறக்கம் போன்ற வாழ்க்கை முறைகளால் பெருமளவு பாதிக்கப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள சமூகத்தில் பெருமளவிலான மக்கள் காசநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். இவையல்லாது துத்தநாகம், வைட்டமின் - ஏ, சி, டி, போலிக் அமிலம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு நுண்ணூட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் தொற்று நோய்களால் எளிதாகப் பாதிக்கப்படும் சாத்தியம் உண்டு. முக்கியமாக, ஒருவரின் சிறுவயதில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, அவரது நோய் எதிர்ப்புத்திறனைப் பெருமளவில் பாதிக்கும். உடல் பருமன் உடையோர், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து சளி, இருமல், நிமோனியா போன்ற சுவாச நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். எனவே, முழுமையான நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுவதற்குச் சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த சீருணவு அவசியம்.
-----3---


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty Re: நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 2:16 pm

---3---
உடற்பயிற்சியும் நோய் எதிர்ப்புத்திறனும்
உடற்பயிற்சி செய்வது என்பது ஏதோ ‘சிக்ஸ் பேக்’ வைப்பதற்கும், நீரிழிவு - ரத்த அழுத்த நோயாளர்களுக்கு மட்டும் உரியதும் அல்ல. தினம்தோறும் உடற்பயிற்சி செய்வது ‘ஆக்டிவ் இம்யூனிட்டி’யை அதிகரிக்கும். மேலும், ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் காரணிகளின் (Immunoglobulins, Anti-inflammatory cytokines, Neutrophils, NK cells, Cytotoxic T cells, B cell) அளவையும் அதிகரிக்கிறது. இந்தக் காரணிகளே நோய்க்குக் காரணமான பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைக் கண்டறிந்து உடலிலிருந்து அகற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன. எனவேதான், எளிய உடற்பயிற்சி - யோகாசனப் பயிற்சி போன்றவை கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீள்வதற்குப் பயனுடையதாக அறியப்படுகின்றன.
மனநலமும் நோய் எதிர்ப்புத்திறனும்
மன உளைச்சல், மனச் சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகள் தொற்றுநோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறனைக் குறைப்பதோடல்லாமல் பாக்டீரியாக்கள், கரோனா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உடலை எளிதாகப் பாதிக்கவும் ஏதுவாகின்றது. மனமும் உடலும் இணைந்து இயங்குபவை. எனவே, மனநலனுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பது, நோய் எதிர்புத்திறனையும் அதிகரிக்கும்.
நல்ல தூக்கம் அவசியம்
தூக்கமின்மையால் புரோ-இன்ஃபிளமேட்டரி சைட்டோகைன்கள் எனப்படும் CRP, IL-6 - TNF-alpha போன்றவற்றில் ஏற்படும் அதிகரிப்பு, நோய் வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.மேலும், நோய் எதிர்ப்புக் காரணிகளான CD4, CD8 - NK செல்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறைக்கப்படுகின்றன. எனவே, முறையான தூக்கம் மிக அவசியம். தூக்கம் உடலுக்குப் புத்துணர்வு கொடுப்பதோடு, மெலடோனின் என்கின்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இது நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த உதவும்.
புகையும் மதுவும் பெருங்கேடு
பொதுவாகவே, மேல் சுவாசப்பாதையில் காணப்படும் மியூகோசில்லரி செல்களின் செயல்பாட்டைக் குறைத்து, கரோனா தொற்று மட்டுமல்லாமல் பல்வேறு சுவாச நோய்கள் வருவதற்குப் புகைப் பழக்கம் சிவப்புக் கம்பளம் விரிக்கும். புகைப்பழக்கம் உள்ளோரிடம் நோய் எதிர்ப்புத்திறன் தரவல்ல மரபணுக்கள் அளவில் குறைந்து காணப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மதுவின் அராஜகம் இரைப்பையில் தொடங்குகிறது. மது, இரைப்பையின் வழியாகத்தான் ரத்தத்தில் கலக்கிறது. முன்னதாக, இரைப்பையிலும் குடலிலும் காணப்படும் பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை (Gut microbe) இது அழிப்பதுடன், நோய் எதிர்ப்புத்திறன் காரணிகளின் செயல்பாட்டையும் முடக்கி விடுகிறது.
ஆரோக்கிய வாழ்வே முக்கியம்
சமூகத்தில் ஒருவரின் மதிப்பை, எப்படி அவர் வாழ்ந்த வாழ்க்கை நிர்ணயிக்கின்றதோ, அதுபோல ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி (அ) உடல் உழைப்பு, மன அமைதி, ஆழ்ந்த உறக்கம் ஆகிய காரணிகள் ஒருவருக்கு வலுவான நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கின்றன. நோய் எதிர்ப்புத்திறனால் மட்டுமே கரோனா ஒமைக்ரான் வைரஸ் போன்றவை மட்டுமல்ல; வருங்காலத்தில் வரப்போகிற இன்னும் பல வைரஸ்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வழியமைக்கும். நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும் விதமாக வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வது காலத்தின் கட்டாயம்.
நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  16440422183059

கட்டுரையாளர், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவர், தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty Re: நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 2:17 pm

ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்கள் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty Re: நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by krishnaamma Sat Feb 05, 2022 3:24 pm

T.N.Balasubramanian wrote:ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1357462

உண்மை ஐயா, நல்ல பகிர்வு! ...மிக்க நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோய்  எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்  Empty Re: நோய் எதிர்ப்பு திறன் ஏன் அதிகரிக்கவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum