ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

5 posters

Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by சபீர் Wed Jan 20, 2010 2:51 pm





உடல் எடை என்பது இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் பல இன்னல்களைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.















webdunia photo
WD

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துகளும், தேவையற்ற சத்துகளும் உடலில் ஏற்படும் ஜீரண வேதிமாற்றத்தால் முழுவதுமாக எரியாமல் உடலின் ஓரிடத்தில் தங்குவதாலோ அல்லது தேவையற்ற பகுதிகளில் தசையோடு சேர்வதாலோ தொப்பை உள்ளிட்ட உடல் குண்டு தோற்றம் ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளையும், அசைவ உணவுகளையும் அதிக அளவில் உண்பதால் உடல் எடை பெருத்து, பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது.

சரி, உடல் எடையைக் குறைத்து `ஸ்லிம்' ஆக இருப்பது எப்படி? என்பதற்கு சில யோசனைகளை இங்கே தந்துள்ளோம்.

அதற்காக இதைப்படித்து விட்டாலே உடல் எடை குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்(!). படித்த கையோடு, உருப்படியான திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப உணவுப் பழக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். விரைவில் நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்பை' பெற்று விடுவீர்கள்.

2030
ஆம் ஆண்டுவாக்கில், உலக அளவிலான மக்கள் தொகையில் 58 விழுக்காட்டினர் குண்டான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாம்.

அந்த 58 விழுக்காட்டினர் என்பது இந்த கட்டுரையால், ஒரு விழுக்காடு குறைந்தாலும் மகிழ்ச்சியே.

உங்களை அதிக உடல் எடையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குண்டாக இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பதற்கும் சில யோசனைகள் இதோ...

1.
பொதுவாக எந்தவகை உணவாக இருந்தாலும், அது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவானாலும் சரி, வயிறு புடைக்க சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே பாதியளவு உடல் கோளாறுகளைத் தவிர்க்கக் கூடியது.

வயிற்றில் பாதியளவு உணவு, கால் பாகம் தண்ணீர், கால் வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.

2.
கூடியவரை குறித்த நேரத்தில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்தல் அவசியம். காலை உணவு 8.30 - 9.00 மணிக்குள். மதிய உணவு 1.30 - 2.30 மணி. மாலையில் 2 பிஸ்கட் உடன் தேநீர் ஒரு கப். இரவில் கூடுமானவரை 9 மணிக்கு முன் உணவு உண்டு, அரைமணி நேரமாவது விழித்திருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிருங்கள். மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

3.
வயதிற்கேற்ற உணவுப் பழக்கமுறை: 25 வயது வரை ஆண்/பெண் இருபாலருக்குமே ஜீரண சக்தி சீராக இருக்கும் என்பதால், எந்தளவு கடினமான உணவுகளையும் செரிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புகள் செயலாற்றும். 25 வயதைத் தாண்டி விட்டாலே,


அசைவ உணவுகளை குறிப்பிட்ட ஒருநாளில், ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ என திட்டமிட்டு, ஓய்வு நேரத்தில் சாப்பிடுவது நலம். அசைவ உணவு சாப்பிடும்பட்சத்தில், அவை ஜீரணமாவதற்குத் தேவையான பொருட்களை போதிய அளவு சேர்த்துக் கொள்தல் நலம்.










webdunia photo
WD

4. முப்பது வயதைக் கடந்து விட்டவர்கள், அசைவ உணவு சாப்பிடும்பட்சத்தில் முறையான அணுகுமுறையைக் கடைபிடித்தல் வேண்டும். வயது ஏற, ஏற ஜீரண உறுப்புகளின் செயல்பாடு ஓரளவுக்கு குறையத் தொடங்கும். 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை இரவில் சாப்பிடுவதால், உடல் எடைபோடுவதைத் தவிர்க்கலாம்.

5.
சரி, குண்டாக இருப்பவர்கள், சாப்பாட்டைக் குறைக்க வேண்டுமா? அப்படி திடீரென்று சாப்பிடும் அளவைக் குறைப்பவர்களுக்கு சக்தி இழப்பு (Energy loss) ஏற்பட்டு சோர்வு உருவாக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் உடல் எடையைக் கூட்டாத உணவு வகைகளாகச் சாப்பிடலாம். இதனால் சோர்வு ஏற்படுவதில் இருந்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் திகழ முடியும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.










webdunia photo
WD

6. காலையில் காபி, டீ பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர், அருகம்புல் சாறு, நீராகாரம் போன்றவற்றை அருந்துங்கள். இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதுடன், அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுநீரக எரிச்சலைப் போக்கி, ஜீரணத்தை எளிதாக்குகிறது.

7.
உடல் பருமன் உள்ளவர்கள் காலைநேரத்தில் இட்லி, இடியாப்பம், புட்டு, ஓட்ஸ் கஞ்சி போன்ற நீராவியில் வேகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

8.
மதிய உணவாக ஒருபிடி அரிசி சோற்றுடன், காய்கறிகள் குறிப்பாக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறித்த அல்லது வதக்கிய காய்கறிகளை தவிர்த்தல் சிறந்தது. சிறிதளவு தயிரும் எடுத்துக் கொள்ளலாம்.

9.
மாலையில் 2 அல்லது 3 பிஸ்கட் உடன் தேநீர் அருந்தலாம்.

10.
இரவு உணவில் அவசியம் சப்பாத்தி, கோதுமையால் ஆன உணவு வகைகள் சாலச் சிறந்தது. கேழ்வரகுக் கஞ்சி, அடை போன்றவையும் கொழுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யாது.

உடல் பருமன் கொண்டவர்கள் இதேபோன்ற உணவுப்பழக்க முறைகளை குறைந்தது 2 மாதத்திற்குக் கடைபிடிப்பீர்களானால், அப்புறமென்ன, நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரர்கள்தான்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty Re: ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by rikniz Wed Jan 20, 2010 3:51 pm

சபீர் உங்க உடம்ப பார்த்த இவைகளை நீங்கள் கடைபிடித்தது போன்று தெரியவில்லையே!


ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty Re: ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by தர்ஷினி Wed Jan 20, 2010 5:29 pm

safeer and rikniz..நீங்கள் கத்தாரில் வசிக்கீர்களா?
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty Re: ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 5:47 pm

அருமையான தகவல் சபீர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty Re: ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by தாமு Wed Jan 20, 2010 6:38 pm

அருமையான தகவல் சபீர் super ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? 677196 ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? 677196 ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா? Empty Re: ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum