ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்

Go down

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...  பாரதிசந்திரன் Empty கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து... பாரதிசந்திரன்

Post by bharathichandranssn Mon Jan 10, 2022 8:25 pm

மௌனம் உடையும். அள்ள...

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளை முன்வைத்து...



பாரதிசந்திரன்



கவிஞர் அமீர்ஜானின் கவிதைகளைப் பார்த்த, படித்த பொழுதெல்லாம் மெளனம் எனும் உள்பிரளய லார்வாக்கள் பீறிட்டுக் கிளம்பி, இனம் காட்டி அலைகின்றன. பாதரசத் துளியென ஒன்றிதிரண்டு பெருவடிவெடுத்து உரு காட்டி நிற்கின்றன. அவ்வடிவழகைத் தொடல் சுகமானது.

நிசப்தங்களின் ஆழ்வெளிப்பரப்பில் எவ்வித ஊடாடலுமின்றி மௌனித்த பயணம், சப்தக்காடுகளின் சாயல் பெற்று ஊதக்காற்றின் உரசலாகி உடைபட்டதென்னே?

ஏன் மௌனம் மௌனிக்கவில்லை?

மௌனம் எப்போதும் உள்ளே மௌனமாகவே இருப்பதில்லை.

தீராத வலியும், முற்றுப்பெறா கேள்விகளும், தேடித்தேடி இம்சித்தே கனலாகி நிற்கின்றன. அந்த மௌனம் என்ற ஒன்று அதாகவே உடைந்து சப்தரூபத்தை எடுக்கிறது. அதுவே ஞானப்பிரவாகமாகவும், வெற்றுப் பிளிறலாகவும் மையம் தரிக்கிறது.

மௌனம் உடைந்து, தீர்க்கதரிசனங்களை அள்ளி வீசி, அடைகடலுக்குள் அமிழ்த்தி, ஆழ்நிலைக் கனாக்களுக்கான விடைகளை எழுதிச் செல்கின்றது அகோரம் தாண்டிய விசாரணையை உலகம், மௌனமொழிகளைக் கொண்டே புரிந்துகொள்கின்றது.

இவையெலாம், உண்டு வெளிவந்தவுடன் உணவு குறித்த சம்பாஷணைகள். நிழலைத் தேடி, நிஜத்தைத் தேடி, எதிரைத் தேடி அலையும் நாக்குகள் கண்ட சுவை. எல்லாம் புதிய கட்டுமானத்தினால் உண்டாக்கப் பெற்றவை. ரசம் பூசிய கண்ணாடிகள் பார்ப்பவரைப் பார்ப்பவராகக் காட்டும் பரிமாணமற்றச் சுயங்களின் சுத்த வடிவம்.

“என்னைக் காட்டும்

நானும்

நானைக் காட்டாத

என்னையும்

பிரித்தெடுக்க முடியாமல்

நானும்

நானுமாகி நானின்றி

இருக்கின்றேன் நான்”



உலகறிந்த வெளியுருவமும், தான்மட்டுமே அறிந்த உள்ளுருவமும் போராடிப் போராடித் திரியும் இருமைத்தனம் எல்லோருமறிந்த நயமே. பிரித்தறிதலே தன்னையறியும் ஞானம். தத்துவார்த்தப் புரிதலும், வெளிக்காட்டலும் இக்கவிதைகளில் அதிகமாகப் புலர்ந்துள்ளன.



நிழல், நான், மனம், காட்சி (பார்த்தல்) எனும் சொல்லாட்சிகளும், அதன் நளின வெளிப்பாடும் சமூகத்தையும் தன்னையும் மாறி மாறி அடையாளப் படுத்துகின்றன. காலஓட்டம் அதன் முதிர்ச்சியை எழுத்தின் அடியாள சிந்தனைக்குச் சிம்மாசனம் போட்டு அமர வைத்திருக்கிறது.

“திரியின் முனையில்

எரிகிறது

இருள்”



“உள்ளிருந்து வெளியேறினால் தான்

ஆரோக்கியமாக இருக்கும்

மனிதத்தைத் துவம்சிக்கும்

மலமும் மதமும்“



கவிதைக்குள் வார்த்தைகள், வெவ்வேறு மெட்டுகளில் வர்ணங்கள் பலபூசி விஸ்வரூப தரிசனங்களைக் காட்டுகின்றன. வாசகர்களுக்குச் சலிப்பைத் தராத வாஞ்சையுடன் அவை வலம்வருகின்றன.

“கல்லெறிந்த கண்ணாடியில்

காணமுடியவில்லை

என் முகம் –

சிதறிப் போயிருந்தேன்

நான் சில்லுகளில்”



வாழ்வின் அர்த்தப்பாடுகளில் உணரத்தவறும் மெல்லிய உணர்வுத் தேவைகளை இனம்கண்டு கொண்டு, தன் வார்த்தைகளில் கிஞ்சித்தும் குறைவுறாது அதை வடித்து, வாசிப்பவரிடமும் நெளிந்து உள்நுழையச் செய்யும் ஏராளமான உணர்வுகளின் கண்காட்சிதான் இவரின் கவிதைகளில் அதிகம் உள்ளன.

தன்னோடு நெருக்கமானவர்களின் மனநிலையையும் அதன் உரசல்களின் தீரத்தை, அப்படியே ஓவியமாக்கித் தருவதென்பது கவிஞர் அமீர்ஜானுக்கு மட்டுமே முடிந்தவொன்று. கவிதைப் படைப்பில், நவீன வடிவமைப்பொன்றை பல கவிதைகளில் செய்து பார்த்திருக்கிறார்.

கவிதையின் முதலடியில் பயன்படும் வார்த்தையின் எதிர்பொருள் தரும் வார்த்தைகள் அடுத்த அடியில் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன. இவை பொருள் தேடலை ஆழப்படுத்துகின்றன.

அழுது* சிரித்து,

பின்* முன்,

போதாமை* இருப்பு,

சலிப்பு* சளைக்காமல்,

பார்த்து* பார்க்காமல்,

பிடிக்காதிருந்த* பிடித்திருந்த,



சங்கப்பாடல்களின் காட்சிப்படுத்துதலைப் போல, சில கவிதைகள் மனக்கண் முன் தொடர் காட்சிப்படுத்துதலை ஒன்றிணைத்து இலயித்தலை உருவாக்குகின்றன.

“வலியத் தொடரும் வலி” கவிதையில், வலியின் நெருடல் அப்படித்தான் தொடர்காட்சிப்படுத்துதலைப் பெற்றிருக்கிறது. இதுபோல் பல கவிதைகள் குறும்படங்களுக்கான கருவாகப் பூத்திருக்கின்றன.

‘இறப்பு’ - மனிதர்கள் கண்டுபிடிக்க முயன்று, முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் தேடலது. அதனை, மிக எளிமையாக ‘முயன்று தோற்றல்’ கவிதை விளக்குகிறது. தேடல்களின் பதிலது. இதன் தொடர்ச்சியைக் “காற்று வாங்கும் ஜுவாலை” கவிதை முடித்து வைக்கிறது. முடிவு

‘நானும் நீயுமற்ற நாமில் தேடும்படியாக எதுவும் இல்லை’ எனும் வரியில் தொடர்கிறது.

”கரைவிட்டு

வெளியேறி அவரவர் திசையில்

பயணிக்கிறது

காற்று வாங்க...

அக்கினியின் ஜுவாலை”

சூபித் தத்துவம் போல் விளங்கும் இக்கவிதைக்குள் எல்லாம் சூட்சுமமாகி, விளங்கிப் பின் மர்மமாகி விடுகிறது. இனம்புரியாக் காதல், அது முதல் காதல். அது தரும் உணர்வுப் பெருவெள்ளம் சொல்லவொணாதது. அதைக் குமுதா வழிப் புலப்படுத்த முயல்கிறார் ஆசிரியர்.

கவிஞர் அமீர்ஜான் கவிதைகளில், முதல் காதலும் வெளிப்படுகிறது. கடைசியும் புனிதமுமான முதியோர் காதலும் வெளிப்படுகிறது. ‘குமுதா’ கவிஞர் கூறிமுடிக்காத இன்னுமொரு காவியம் ‘எனக்கான வாழ்க்கை’ கவிதையாகும்.

“நான் ஐம்புலன்களின் வழிச் சிதைக்கப்படுகின்றேன். எனக்குள் தேடும் என்னை அவை காணவிடாமல் செய்கின்றன” கவிஞர் கூறுவதைத்தான் பல மதங்கள் தத்துவார்த்தமாகவும் சித்தாந்தமாகவும் உரைக்கின்றன. தத்துவம், ஞானம், உணர்வு என விரிந்த தளத்தை கவிதைகள் வியாபித்திருக்கின்றன.

”நீரில் மிதக்கும் என்நிழலை .

அள்ளியெடுக்க முடியாமல்

நான்.”

மௌனம் நிழலைக்கூட விட்டுவைக்கவில்லை. அதை அள்ளியெடுக்க முயற்சிக்கிறது.

நாமும் கவிதைக்குள் நம்மை அள்ளியெடுக்க முயற்சிப்போம்...

“உண்டில்லையென

ஆட்டிப் படைக்கின்றன

என்னை”



இவரின் கவிதைகள்.

சிறந்த உணர்வு வெளிப்பாடுகளின் கவிதைகள் இவருடைய கவிதைகள். தத்துவார்த்தம், தொன்மம், நவீனம், உளவியல், பாசம், அழகு, சமூகம் என விரிகிற கவிதையோவியமாக இவைகள் திகழ்கின்றன.

நன்றி: படைப்பு. காம் (தகவு- மின்னிதழ்) ஜனவரி-2022
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் அபி கவிதையை முன்வைத்து வித விதமாத் தொய்யுலகம் – பாரதிசந்திரன்
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
» அங்காடித்தெரு -அமெரிக்காவை முன்வைத்து
» பவுத்த ராமாயணம் - அம்பேத்கரின் 'ராமனின் புதிர்' கட்டுரையை முன்வைத்து...
» நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum