ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குறிப்புகள்

2 posters

Go down

மருத்துவ குறிப்புகள் Empty மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:09 am

மருத்துவ குறிப்புகள் AqabN76
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:09 am

மருத்துவ குறிப்புகள் ZZajnW8
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:09 am

மருத்துவ குறிப்புகள் JK8SneX
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:10 am

மருத்துவ குறிப்புகள் KnU4mP0
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:10 am

மருத்துவ குறிப்புகள் 9j2BbP8
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Dec 07, 2021 6:27 am

மருத்துவ குறிப்புகள் LPzV4Ui

-அக்ரி டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty கொப்புளங்கள் தீர்வு

Post by Srg Tue Dec 07, 2021 1:33 pm

கொப்புளங்கள் ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

சருமத்தில் ஏற்படும் ஏதாவது பாதிப்பினாலோ, உடலின் உள்ளே ஏற்படும் சில நோய்களின் காரணமாகவோ, தோலுக்கு மேல் ஏற்படும் திரவம் (Serum), சீழ் மற்றும் ரத்தம் நிறைந்த கட்டிகளை ‘கொப்புளங்கள்’ என்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். சின்னது, பெரியது, வலி நிறைந்தது, வலியில்லாதது என்று கொப்புளங்களில் பல வகைகள் உள்ளன. இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான கொப்புளங்கள் ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடும். உள்ளிருக்கும் திரவம் வற்றி மேல் தோல் உரிந்துவிடும். அதை பிய்க்கவேண்டாம் தானாகவே உதிர்ந்துவிடும். சில கொப்புளங்கள் தானாக உடைந்துவிடும், அதை சுத்தப்படுத்தினால் போதுமானது. சீழ்க்கோர்த்துள்ள கொப்புளங்களுக்கு கட்டாயம் மருத்துவரிடம் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாங்கி  பயன்படுத்த வேண்டி இருக்கும்.

யாருக்கு வரும்

• மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்றின் காரணமாக கொப்புளங்கள் உருவாகும்.

• மரபுக் கோளாறுகள் காரணமாக சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கூட உடம்பில் கொப்புளம் இருக்கும்.

• நோய்த்தொற்றின் காரணமாக கொப்புளங்கள் வரலாம்.

• நோய் எதிர்ப்பு குறைந்தோருக்கு  வைரஸினால் அல்லது சூட்டினால்   கொப்புளங்கள் வரும்.

• நாட்பட்ட நோய் பாதிப்பு உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும்.

• சோப், டிடெர்ஜென்ட், அழகு சாதனங்கள், மாத்திரை, மருந்து, உணவு போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் கொப்புளங்கள் வரலாம்.

• வைரஸ் நோய்தொற்று காரணமாக கொப்புளங்கள் வரலாம்.

• அதிக சூடு குறிப்பிட்ட ஓர் இடத்தில் தாக்கும் போது அந்த இடத்தில் கொப்புளங்கள் வரலாம். வெயில் காரணமாகவும் கொப்புளங்கள் வரலாம். 

• புற்றுநோய் பிரச்னைகளாலும் கொப்புளங்கள் வரலாம்.

கொப்புளங்களை தவிர்க்க...

திடீரென்று ஏற்படும் தீக்காயம் போன்றவற்றினால் ஏற்படும் கொப்புளங்களை தவிர்க்க முடியாது என்றாலும் ஒரு சில காரணங்களால் ஏற்படும் கொப்புளங்களை ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம்.

*  தொற்றுகளால் ஏற்படும் கொப்புளங்களை தவிர்க்க சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளை காலையில் மட்டுமில்லாமல் மாலையில் விளையாடிய பின்னரும் குளிக்க வைப்பது அவசியம்.

*  கைகளில் ரசாயனங்களால் அதாவது, துணி துவைக்கும் சோப், பாத்திரம் கழுவும் பவுடர் போன்றவற்றால் கொப்புளங்கள் வராமல் இருக்க கைகளில் கிளவுஸ் போட்டுக் கொண்டு  வேலை செய்ய வேண்டும்.

*  சில காஸ்மெடிக் பொருட்களால், உணவுகளால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க, அவற்றை தவிர்ப்பது தான் ஒரே வழி. 

*  மருந்துகளால் அலர்ஜி ஏற்பட்டால் எந்த மருந்தினால் ஏற்படுகிறது எனக் கண்டறிய வேண்டும். அந்த மருந்துகளுக்கு பதில் வேறு மருந்துகளை மருத்துவரிடம் கேட்க வேண்டும்.

*  சர்க்கரை நோயால் ஏற்படும் கொப்புளத்துக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பது நல்லது.

*  அதிக வெப்பத்தினால் ஏற்படும் கொப்புளத்தை தவிர்க்க வெளியில் செல்லும் போது சன் ஸ்கிரீன் க்ரீம் தடவிக்கொள்ளலாம்.

*  கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

*  உடலில் கொப்புளங்கள் இருந்தால் இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். 

கொப்புளங்கள் குணமாக மருத்துவம்

கொப்புளங்கள் உடலில் ஏற்படத் தொடங்கும் போதே அதற்கான சிகிச்சையை பின்பற்றி அவற்றைப் போக்குவது நல்லது.

*  வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும்.

*  டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொப்புளங்கள் மீது தடவ குணமாகும்.

*  மஞ்சளை கொப்புளத்தின் மேல்புறமாக தடவலாம் அத்துடன் மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

* வேப்பெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் மஞ்சளை கலந்து கொப்புளங்கள் மீது தடவ குணமாகும்.

*  கற்றாழை ஜெல்லை நன்றாக சுத்தம் பண்ணி உட்கொண்டால் கொப்புளங்கள் சரியாகும். கற்றாழை ஜெல்லை கொப்புளத்தின் மீதும் தேய்க்க வேண்டும்.

*  1 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து,    கொப்புளங்கள் தடவி பின் 2 மணிநேரம் கழித்து மிதமான சூடுள்ள நீரில் கழுகவும். ஒரு சில நாட்களுக்கு இது போன்று தினமும் 3 அல்லது 4 முறை செய்யுங்கள்.

*  1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்த சூடான பாலை தினமும் ஒருமுறை குடிக்கலாம். மஞ்சள் கொப்புளங்களால் ஏற்படுகின்ற வலி மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

*  வேப்பிலையுடன் ஒரு சிறு துண்டு மஞ்சள் சேர்த்தரைத்து கொப்புளம் மேல் பூச குணமாகும், அரைத்த கலவையை ஒரு நெல்லிக்காய் அளவு உள்ளுக்கும் சாப்பிட குணமாகும்.

ஏதாவது ஒரு எளிய மருத்துவ முறையை பயன்படுத்தி பயனடையவும்.
Srg
Srg
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by Srg Tue Dec 07, 2021 1:38 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் எடை குறைகிறது?

லேசாக உடல் எடை குறைந்தாலே, “சுகராக இருக்குமோ” என்ற அச்சம் எல்லோருக்கும் வந்து விடுகிறது. சர்க்கரை நோய் என்றால் உடல் எடை குறையும் என்பது இயல்பான கருத்தாக மாறிவிட்டது. அது உண்மைதான் என்றாலும், உடல் எடை ஏன் குறைகிறது என்பது பலருக்குத் தெரியாது.

நாம் உண்ணும் உணவுகளில் மூன்று வகையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை
√ மாவுச்சத்து,
√ புரதச்சத்து,
√ கொழுப்புச்சத்து.
இதில் மாவுச்சத்தில் தான், நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் அதிகமாக இருக்கிறது. இந்த குளுக்கோஸ் இரத்தத்தில் கலக்கும்போது கணையத்தில் இன்சுலின் உற்பத்தி ஆகிறது.

இன்சுலின் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது. செல்கள் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கின்றன.

எடை குறைய காரணம்

நம் வீட்டின் கதவைத் திறப்பதற்கு ஒரு சாவி இருப்பதுபோல் செல்களில் குளுக்கோஸை உள்ளிழுத்துக் கொள்வதற்கு வாங்கிகள் (Receptors) இருக்கின்றன. இந்த வாங்கிகள் அனுமதித்தால் மட்டுமே குளுக்கோஸ், செல்களுக்குச் செல்ல முடியும். சர்க்கரை பாதிப்புள்ளவர்களின் செல்களில் உள்ள வாங்கிகள் (Receptors) செயல்படாமல் இருக்கும். அதனால் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் பழையபடி இரத்தத்திலேயே கலந்துவிடும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்றால், இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை அல்லது அதன் செயல்திறன் போதுமான தாக இல்லை என்று அர்த்தம். செல்களுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை இரத்தத்திலேயே இருப்பதால், எந்தக் காரணமும் இன்றி உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கிறது.

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 180 மி.கிராமுக்குமேல் அதிகரித்தால், எனர்ஜியாக மாறாமல் சிறுநீராக வெளியேறும். நம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்காததாலும் குளுக்கோஸ் சிறுநீருடன் வெளியேறி விடுவதாலும் தான் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது.

முக்கியமான காரணிகள்

* அதிகமான பசி (Polyphagia)
* தாகம் (Polydipsia)
* அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria)

தீர்வுகள்

√ மாதுளை தோலை எடுத்து பேஸ்ட்டாக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காலை மாலை என இரண்டு முறை என குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* மாதுளை தோல் சர்க்கரையின் அளவை குறைக்கும். சிறுநீர் அதிகம் வெளியேறுவதை மட்டுப்படுத்தும்.

√ துளசி இலைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது. 3-4 துளசி இலைகள் என தினசரி காலையில் வெறும் வயிற்றில் எடுத்து வர இரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.

√ நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், பாகற்க்காய், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.

√ தினமும் சாப்பிடும் உணவுகளில் கைக்குத்தல் அரிசி, தவுடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், துவரம் பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு போன்ற தானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

√ சிறுதானிய வகைகளான குதிரைவாலி, சாமை, வரகு, திணை, மக்காச்சோளம் போன்றவற்றை அளவாக சாப்பிடவும். இதனை சாதம், உப்புமா மற்றும் தோசையாகச் சாப்பிடவும். கஞ்சியாக செய்து சாப்பிடதை தவிர்க்கவும். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் இவற்றின் உமியை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம்.

√ மூன்று வேளைகள் சாப்பிடும் வழக்கத்தை தவிர்த்து உணவை ஐந்து அல்லது ஆறு வேளை ஏன பிரித்து சாப்பிடுவது உடல் எடை பராமரிப்புக்கு நல்லது. 
Srg
Srg
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by Srg Tue Dec 07, 2021 1:39 pm

கைகளில் தோல் கடினமாக இருந்தால் செய்ய வேண்டிய மருத்துவம்

*  சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைல பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை கையில் காய்ப்பு மற்றும் கடினமான தோல் உள்ள இடங்களில் தடவ தோல் மென்மையாகும்.

*  வெங்காய சாற்றினை தேய்த்தாலும்  மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டாக வெட்டி உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் அதை பேஸ்ட் போல் அரைத்து, அதனை தோல் காய்த்திருப்பதன் மேல் தடவி 8 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். 

* அம்மான் பச்சரிசி செடியை அரைத்து கடினமான தோல் மேல் இரவில் பற்றுபோட்டு காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ தோல் மென்மையாகும்.
அல்லது
இந்த செடியை உடைக்கும்போது வெளிவரும் பாலைத் தொடர்ந்து தடவி வந்தாலும் தோல் மிருதுவாகும்.

* குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி ஒரு சிறு துண்டு மஞ்சள் வைத்து அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ குணமாகும்.

ஏதாவது ஒரு எளிய மருத்துவ முறையை பின்பற்றி பயனடையவும்.

எந்த மருத்துவம் எடுத்தாலும் சரி
தினம் இரவு படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை (செக்கு எண்ணெயாக வாங்குங்கள்) லேசாக கடின தோல் மீது  தேய்த்துவிட்டு படுங்கள் காலை மிதமான சூட்டு வெந்நீரில் கழுவுங்கள்.

நீர்காய்களை  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இளநீர் குடிங்கள், வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டை அடிக்கடி சாலட் போட்டு சாப்பிடுங்கள்.
Srg
Srg
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum