ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் திராவிடர்கள் அல்ல

+3
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty நாம் திராவிடர்கள் அல்ல

Post by சிவா Thu Aug 12, 2021 6:16 pm

 தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களைத் #தெலுங்கர் என்றும், கன்னட மொழி பேசுபவர்கள் தங்களைக் #கன்னடர்கள் என்றும், மலையாள மொழி பேசுபவர்கள் தங்களை #மலையாளிகள் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் மட்டும்தான் நெஞ்சை நிமிர்த்தி நம்மைத் "#தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்ளாமல் "#திராவிடர்கள்' என்று சொல்லிக் கொள்கிறோம்.

 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தென்னிந்தியாவை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் "#திராவிடம்' என்ற சொல்லே வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். காரணம், தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை "#திராவிடன்' என்ற பொதுவான சொல்லில் அழைத்துக் கொள்வதில்லை.

 வடமொழியில் "#தமிழ்' மொழியை "திராவிடம்' என்று குறித்துள்ளனர். குமாரிலபட்டர் என்னும் #வடமொழி அறிஞர், தென்னிந்திய மொழி இனத்தை "ஆந்திர - திராவிட பாஷா' என்று பதிவு செய்துள்ளார். திராவிட ஆய்வில் முதலில் ஈடுபட்ட வெள்ளையர்கள் "திராவிடம்' என்ற சொல்தான் "தமிழ்' என்றாகி இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 இதில் முக்கியப் பங்காற்றியவர் ராபர்ட் கால்டுவெல். வடமொழியில் "ள' என்ற எழுத்தும் "ட' என்ற எழுத்தும் ஒன்றுக்கொன்று மாறிவரும். "திராவிடம்' என்பது "திராவிளம்' என்றானதாம். அதேபோல் "வ' என்ற எழுத்தும் "ம' என்ற எழுத்தும் மாறிவரும். "திராவிடம்' என்பது "திராமிளம்' என்றாகிப் பின்னர் "த்ரமிளம்' என்றும் "தமிளம்' என்றும் "தமிள்' என்றும் நிறைவாகத் "தமிழ்' என்றானது என்பது ராபர்ட் கால்ட்வெல் பதிவு.
 சுற்றிவளைத்து வலியப் புனையப்பட்ட வேர்ச்சொல் ஆராய்ச்சி அது. அதாவது "திராவிடம்' என்ற வடமொழிச் சொல்லிருந்துதான் "தமிழ்' என்ற சொல் வந்தது என்று சொன்னதாகச் சொல்லி இருக்கிறார்.

 தமிழ் என்ற சொல்லின் சிறப்பே அதிலுள்ள "ழ' என்னும் எழுத்துதான். "ழ' என்னும் எழுத்து, வேறெந்த ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவர்கள் வாயில் "ழ' என்னும் சொல் நுழையாததாலும், அவர்கள் மொழிகளில் "ழ' இல்லாததாலும், "தமிழ்' என்ற பெயரை அப்படியே சொல்லாமல் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். நிறைவாக #ராபர்ட்_கால்டுவெல் சொன்ன "திராவிடம் என்ற சொல்லிலிருந்து தமிழ்' என்ற வாதமே நிலைத்துவிட்டது.

 "திராவிடம்' என்பது "திரமிழம்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். "தமிழ்' மொழிக்குத் "திரமிழம்' என்றொரு பெயரும் உண்டு. "திரம்' என்றால் "உறுதி' மற்றும் "நிலை' என்று பொருள். "மிழம்' என்றால் "மொழி' என்று பொருள். ஆக "திரமிழம்' என்றால் "உறுதியான நிலையான மொழி' எனப் பொருள்படும்.

 "திராவிடம்' என்ற சொல்லிலிருந்து "தமிழ்' என்ற சொல் வரவில்லை. மாறாக "தமிழ்' அதாவது "திரமிழம்' என்ற சொல்லிலிருந்தே "திராவிடம்' என்னும் வடசொல் உருவானது.
 தமிழ் மொழிக்கு "திராவிடம்' என்ற பெயர் பழங்காலம் தொட்டே இருந்திருந்தால் "திராவிடம்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூவாயிரம் ஆண்டு பழந்தமிழ் "தொல்காப்பியம்' இலக்கண நூலில் எங்குமே "திராவிடம்' என்ற சொல் இல்லை. "தமிழ்' என்ற சொல்லே வழங்குகிறது.

 தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய #பனம்பாரனார் "தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் "தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

"திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை.
 "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று #பாரதி பாடியதில் வியப்பில்லை. காரணம் "இனிமை' என்ற சொல்லுக்குப் பதிலாக "தமிழ்' என்ற சொல்லையே தமிழர்கள் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.

 "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்கிறது பிங்கல நிகண்டு. அதாவது, இனிமை, ஒழுங்கான இயல்பு ஆகியவற்றைக் குறிக்கத் "தமிழ்' என்ற ஒற்றைச் சொல்லே போதுமாம்.

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான "#சீவக_சிந்தாமணி' நூலின் ஆசிரியர் திருத்தக்கத் தேவர் "இனிமை பொருந்திய சாயலை உடைய பெண்கள்' என்று குறிப்பிட "தமிழ் தழீஇய சாயலவர்' என்று கூறுகிறார். அவர் "இனிமை' என்ற சொல்லுப் பதிலாகத் "தமிழ்' என்றே குறிப்பிடுகிறார்.

 தென்னிந்திய நல உரிமைக் கழகம், நீதிக் கட்சி, இவற்றின் நீட்சியாக திராவிடர் கழகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி பேசுவோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
 குறிப்பாக தமிழர்களை விடவும் மற்ற மொழியினரே பெரும்பான்மையாக இருந்தனர். எனவே "தமிழர் கழகம்' என்று பெயர் வைப்பதில் தயக்கம் இருந்திருக்கலாம். ஆகவே, ஈ.வெ.ரா. "திராவிடர் கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியதில் வியப்படைய ஏதுமில்லை.

 ஈ.வெ.ரா., "#திராவிடர்_கழகம்' தொடங்கியபோது, அதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அதிக அளவில் இணைந்தனர். தாங்கள் தமிழர்களல்ல என்பது அடையாளப்பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், "திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டியதில் வியப்பில்லை.
 மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து தனித்தனி மாநிலங்கள் உருவான பின்னரும், "தமிழன்' என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளாமல் "திராவிடன்' என்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் அழைத்துக் கொள்வதன் காரணம்தான் தெரியவில்லை.

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு டமிலியன் ஸ்டாக்' என்று கூறாமல் "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு திராவிடியன் ஸ்டாக்' என்று சொன்னதன் காரணம் என்ன?

 தமிழும், திராவிடமும் ஒன்றா? அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுந்தானே முதல்வர்? தென் இந்தியா முழுமைக்குமான (தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கிய) திராவிடத்தின் முதல்வரா? தமிழும், திராவிடமும் வேறு வேறு எனில் "டமிலியன் ஸ்டாக்' என்று சொல்லிக் கொள்வதில் என்ன தயக்கம்?

 வரலாற்று ரீதியாகப் பார்த்தால் 11-ஆம் நூற்றாண்டில் நிலவிய சோழ சாம்ராஜ்யமே தமிழர்களின் கடைசி சாம்ராஜ்யம் ஆகும்.
 இதன் பின்னர் தமிழகத்தை ஆண்டவர்கள் விஜயநகரப் பேரரசு (கிருஷ்ணதேவ ராயர்), நாயக்கர்கள் (திருமலை), மராட்டியர்கள் (சரபோஜி), சுல்தான்கள் / நவாப்புகள் (உருது), டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ்காரர்கள்.
 இவர்கள் அனைவரும் தமிழர் அல்லாத தெலுங்கு, மராட்டியம், உருது, ஆங்கிலம் பேசும் வேறு வேறு மொழியினர். இவர்கள் தமிழ் மொழியை ஆதரித்தார்களா, இல்லையா என்பது வேறு விஷயம்.
 பிராமணர் அல்லாத இயக்கமாகத் தோன்றிய "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', பின்னர் "நீதிக் கட்சி'யாகவும், "திராவிடர் கழக'மாகவும் உருமாறியது. பெயரில்தான் மாறுதலே தவிர மற்றபடி கொள்கை என்னவோ மூன்றுக்கும் ஒன்றுதான்.
 நீதிக் கட்சியின் தலைவர்களாக விளங்கிய பிட்டி தியாகராய செட்டி (தெலுங்கு), டி.எம். நாயர் (மலையாளம்) ஆகியோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல.

 தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்த #சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கா ராவ், கர்ம வெங்கட் ரெட்டி, டி. பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா ஆகிய அனைவரும் தெலுங்கர்களே.

 காமராஜரும், அண்ணாவும் தேர்தலில் போட்டியிட்ட போது காமராஜரை "பச்சைத் தமிழன்' என்று சொல்லி ஈ.வெ.ரா. ஆதரித்தார். "காமராஜர் பச்சைத் தமிழன் என்றால் திமுக தலைவர் #அண்ணாதுரை யார்' என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஈ.வெ.ரா. திமுகவினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

 பிற்காலச் சோழர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் கடைசி 600 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கொண்டால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களின் எண்ணிக்கையும், காலமும் மிகவும் சொற்பமே.
 பெயரில்தான் தமிழ்நாடு. ஆனால் ஆட்சி செய்த 90% பேர் வேற்று மொழிக்காரர்கள். அதிலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோரே அதிகம்.

 பல்லாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழி தனது பெயரை இன்னொரு மொழியிலிருந்து பெற்றது என்று கூறுவது அதன் தொன்மையையும், செம்மொழித் தகுதியையும் குறைப்பது போலாகும். ஆகவே, தமிழ் மொழிக்கு "தமிழ்' என்று பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தானே தவிர வடமொழி பேசுவோரோ அல்லது வேறு மொழி பேசுவோரோ அல்ல என்பது தெளிவு.
 தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமையைத் தராமல் "திராவிடன்' என்று பொத்தாம்பொதுவாகப் பேசி, தமிழுக்கு உரிய எல்லாப் பெருமைகளையும், சிறப்புகளையும் தென் இந்தியாவைக் குறிக்கும் திராவிடத்துக்குத் தாரை வார்ப்பது நியாயம் அல்ல.

 தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினர் தங்களை "திராவிடர்கள்' என்ற குடையின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட "தமிழன்' தன்னை "திராவிடன்' என்று சொல்லிக் கொள்வதற்கு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒற்றைக் காரணம்கூடக் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
 
 தினமணி
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian, jairam, Dr.S.Soundarapandian, ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by Dr.S.Soundarapandian Fri Aug 13, 2021 7:30 pm

நாம் திராவிடர்கள் அல்ல 103459460

கட்டுரை சொல்வது உண்மை!
கட்டுரை சொல்வதில் தமிழர்களுக்குக் குழப்பம் கூடாது!
குழப்பத்தை ஏற்படுத்துவோர் , தமிழைக் குறைப்பவர்கள்!
குழப்பத்தை ஏற்படுத்திவிட்டுக், கீழடி ஆய்வு முதலியவற்றைத் ,
‘தமிழர் பண்பாடு’ என்று சொல்லாமல், ‘திராவிடப் பண்பாடு’ என்று திசை திருப்புகின்றனர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா, T.N.Balasubramanian, aanmeegam and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by T.N.Balasubramanian Fri Aug 13, 2021 9:17 pm

திராவிட தேசம் --தமிழ் -கன்னட -தெலுங்கு -மலையாளம் கலந்தது.
திராவிட தேசத்தில் நாம் ஒரு கால் (1/4) 
நாம் தமிழர். (நாம் தமிழர் கட்சியுடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்)

அரசியலுக்குக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தை திராவிடம் .அப்போது அதை எதிர்த்து கேள்வி கேட்க எந்த தமிழனும் வரவில்லை.
ஆட்சியை தக்க வைக்க செய்யப்பட்ட இடைச்செருகல் திராவிடம்.

எப்போது காவிரி நீர் நமக்கு ஒழுங்காக வருகிறதோ,
எப்போது முல்லை பெரியாறில் குழப்பங்கள் இல்லையோ 
எப்போது கோதாவரி -கிருஷ்ணா நீர் நமக்கு வருகிறதோ 
அப்போதுதான் திராவிட ஒன்றிய நாடு --அந்த நாலு மாநிலத்தவரும் திராவிடர்கள்.

அது எப்பிடி சாத்தியம் இல்லையோ,

 நாம் தமிழர்கள் என்று பெருமை கொண்டு ,தமிழ் கலாச்சாரத்தை பேணுவோம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

சிவா, Dr.S.Soundarapandian, aanmeegam and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by ukumar1234 Fri Aug 13, 2021 10:37 pm

சிறப்பு ஐயா! தமிழர் தமிழினம் தான்,திராவிடராக திரிவது இன அழிவே ,திராவிடம் என்பது திருட்டு,பிறமொழியாளர்கள் தமிழரை திருட்டுத்தனமாக ஆளும் சூழ்ச்சி ,...கன்னடர்,தெலுங்கர்,மலையாளிகள் தனியாக தனக்கென நாட்டை பெற்றுக்கொண்டபின் தமிழ் பங்கை தின்பது???? அதை விளங்கிக்கொள்ளாமல் தமிழினம் ஏமார்ந்து கிடப்பது அறியாமை இன்றி வேறில்லை ...... தமிழினம் சிந்தித்து விழித்து பிழைத்துக்கொள்ள வேண்டும் ....
ukumar1234
ukumar1234
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 22/07/2021

சிவா, Dr.S.Soundarapandian, aanmeegam and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by T.N.Balasubramanian Sat Aug 14, 2021 8:50 pm

திராவிட மாயை இன்னும் ஒட்டு வங்கியாகத்தான் இருக்கிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by aanmeegam Sat Aug 14, 2021 9:32 pm

T.N.Balasubramanian wrote:

எப்போது காவிரி நீர் நமக்கு ஒழுங்காக வருகிறதோ,
எப்போது முல்லை பெரியாறில் குழப்பங்கள் இல்லையோ 
எப்போது கோதாவரி -கிருஷ்ணா நீர் நமக்கு வருகிறதோ 
அப்போதுதான் திராவிட ஒன்றிய நாடு --அந்த நாலு மாநிலத்தவரும் திராவிடர்கள்.

அது எப்பிடி சாத்தியம் இல்லையோ,

 நாம் தமிழர்கள் என்று பெருமை கொண்டு, தமிழ் கலாச்சாரத்தை பேணுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1349905

நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் கூறியதற்கு நன்றி ஐயா. நாம் திராவிடர்கள் அல்ல 1571444738
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by ராஜா Sat Aug 14, 2021 10:28 pm

ஆம் , நம்மை நாம் தமிழர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

சிவா, T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by T.N.Balasubramanian Sun Aug 15, 2021 2:57 pm

ராஜா wrote:ஆம் , நம்மை நாம் தமிழர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1349973

நாம் தமிழர் என்றால் ஏதோ ஒரு கட்சி சார்பு அங்கத்தினன் மாதிரி உள்ளது.
"நாம் எல்லோரும் தமிழர் " என்று  சொன்னால் நன்றாக இருக்குமல்லவா?



@ராஜா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by சிவா Sat Aug 21, 2021 7:55 pm

மராத்தியை தாய்மொழியாகக் கொண்டவன் மராத்தி
குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவன் குஜராத்தி
பெங்காலியை தாய்மொழியாகக் கொண்டவன் பெங்காலி
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவன் தெலுங்கன்
கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவன் கன்னடன்
மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவன் மலையாளி
தமிழை தாய்மொழியாகக் கொண்டவன் திராவிடன்


நாம் திராவிடர்கள் அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by aanmeegam Sat Aug 21, 2021 8:58 pm

சிவா wrote:
தமிழை தாய்மொழியாகக் கொண்டவன் திராவிடன்
மேற்கோள் செய்த பதிவு: 1350438
அநியாயம் அநியாயம் கூடாது
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாம் திராவிடர்கள் அல்ல Empty Re: நாம் திராவிடர்கள் அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum