ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
ayyasamy ram
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
mohamed nizamudeen
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
VENKUSADAS
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 

Top posting users this month
heezulia
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
ayyasamy ram
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
mohamed nizamudeen
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 
VENKUSADAS
நீத்தார் வழிபாடு Poll_c10நீத்தார் வழிபாடு Poll_m10நீத்தார் வழிபாடு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீத்தார் வழிபாடு

Go down

நீத்தார் வழிபாடு Empty நீத்தார் வழிபாடு

Post by சிவா Sun Aug 08, 2021 9:56 am

இறந்தவரை நினைவு கூறல் என்பது உலகில் ஆசியாவில் அதுவும் இந்தியா மற்றும் சீனாவில் வழிபடுவது மட்டுமே வழமை

சீனர் போன்ற கிழக்காசிய இனம் 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை எல்லாம் உண்டு

இந்த நீத்தார் வழிபாடு தென்புலத்தார் எனும் தமிழக இந்துக்களிடம் அதிகம் இருந்தது, வாழ்வின் மிகபெரும் கடமையாக அதை கருதினர்

தென்புலம் என்றால் தென்னிந்தியா அல்ல, இமயமலைக்கு தெற்கே இருக்கும் பாரத கண்டம் என பொருள், சனாதான தர்மம் பின்பற்றும் இந்த பூமி அதை சிறப்பாக செய்தத

தமிழ் இந்துக்கள் வாழ்வில் அந்த நீத்தார் வழிபாடு கலந்திருந்ததை புறனாற்று பாடல் இப்படி சொல்கின்றது

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்" என்பது தெளிவாக சொல்கின்ன்றது

வள்ளுவனும் அதை தெளிவாக சொல்கின்றான் இப்படியாக‌

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.."

இன்னும் ஏகபட்ட பண்டைய இலக்கியம் மற்றும் நீதி நூல்களில் , பக்தி இலக்கியங்களில் அதன் அடையாளங்களை காணமுடியும்

அது இந்துக்களின் அடையாளம் என்பதால் தமிழரிடம் தொடர்ந்தது

இன்றைய நாளில் அந்த வழக்கபடி முன்னோர்களை வணங்கி நினைவுகூறுவார்கள், அதை கூர்ந்து கவனித்தால் பல அற்புதமான விஷயம் இருப்பதை காணமுடியும்

அதிகாலை எழுந்து விரதம் இருப்பார்கள், முதலில் காக்கைகு சோறு வார்ப்பார்கள், தங்கள் முன்னோர்களே காக்கை உருவில் வருவதாக ஐதீகம்.

காகம் பித்ருக்களின் வடிவம் என்பது இந்துக்கள் நம்பிக்கை, மனிதனை அண்டிவாழும் பறவை என்பதாலும் கூடி உண்ணும் அப்பறவையில் பல தத்துவங்கள் இருக்கலாம் என்பதாலும் அச்சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கலாம்

தன் இனத்தை எல்லாம் கூடிஉண்ண செய்யும் அப்பறவையில் தன் இனத்துக்காக உழைத்து சோறிட்ட முன்னோர்களை அவர்கள் கண்டிருக்கலாம்

அதன் பின் முன்னோர்களுக்கு பிடித்த ஆடையினை எடுத்து வைத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துவைத்து மறக்காமல் விளக்கேற்றுவார்கள்

எவ்வளவு அருமையான ஏற்பாடு?
முன்னோர்கள் நமக்கு உடை தந்தவர்கள், சுவையான உணவினை பாசமாய் தந்தவர்கள் என நினைவுகூறும் அற்புதமான நன்றிகடன் அது

அதை பார்த்து பார்த்து அதில் மூழ்க செய்யும் நுட்பம் அது, மனமார அதில் கலந்துவிடும் ஏற்பாடு அது

இன்னும் சிலர் முன்னோர்கள் கட்டி வைத்த கட்டங்கள் வீடுகள் அவர்கள் வளர்த்த செடிகொடிகளை எல்லாம் தொட்டு வணங்குவார்களாம், சிலருக்கு அச்சம்பிரதாயம் உண்டென்பார்கள்

ஆம் முன்னோர்கள் விட்டு சென்ற சுவர்களை தொட்டாலே ஒருவித ஏகாந்தமும் நினைவும் வரும்.
அதன் பின் மறக்காமல் நீர் நிலைகளுக்கு செல்வார்கள்

அது ஏரி,குளம், ஆற்றங்கரை அல்லது கடற்கரை என செல்வார்கள்

அங்கு பிண்டம் வைத்து வணங்குவது அவர்கள் நம்பிக்கை எனினும் அதிலுள்ள தத்துவம் அந்த இடத்தில் அவர்கள் முன்னோடு நடமாடி இருப்பார்கள், குளித்திருப்பார்கள், அந்த குளகரையில் ஒன்றாக உண்டிருப்பார்கள்

அந்த நீர்நிலையில் அவர்கள் கலந்து தங்களோடு இருப்பதாக கருதி அவர்களுக்கும் உணவளிப்பதாக அந்த பிண்டத்தை கரைப்பார்கள்

ஏரியோ குளமோ அவர்கள் முன்னோர் கட்டியதாக இருக்கும், அவர்கள் உழைத்ததாக இருக்கும். ஆறு அவர்கள் வம்சத்துக்கு வாழ்வளித்த இடமாக‌ இருக்கும்

அங்கு செல்வது சால சிறந்தது, நினைவாலயம் அவைகள்

சிலர் கடலுக்கு செல்வார்கள், கடல் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் கடவுளுக்கு சமம், கடவுளில் கலந்துவிட்ட முன்னோரை கடற்கரையில் நின்று நினைத்தால் மனம் ஒருவித நிறைவடையும்

இந்துக்களின் ஆடி அமாவாசையின் ஒவ்வொரு ஏற்பாடும் மகா உன்னதமானது, அர்த்தம் மிகுந்தது.

ஏன் அமாவாசையினை தேர்ந்தெடுத்தார்கள் எல்லா விஷயமும் இல்லாத ஒன்றில் இருந்தே தொடங்கும். நாங்கள் சூனியம் நீங்கள் ஒளிதர வாருங்கள் என அழைக்க அந்த இருட்டு நாளை தேர்ந்தெத்டுத்தார்கள்

இன்னொரு கோணமும் உண்டு அது சாத்தியமான உண்மை.

நிலா காலண்டர் உள்ள அக்காலத்தில் அதுவே மாத தொடக்கம், அதுவும் ஆடி அமாவாசை என்பது விவசாய பணிகளுக்கான தொடக்க நாள்

அன்று தங்களுக்கு நிலமும் வயலும் குளமும் கால்வாயும் உருவாக்கி தந்த முன்னோரை மனமார வணங்கினார்கள்.

நன்றியினை பெரிதாக கொண்ட தென்புல சமூகம் தன் முன்னோர்களை எண்ணி செய்த பெரும் ஏற்பாடு இது , உலகின் மற்ற இனங்களை விட இந்த இந்துமதம் நீத்தார் கடனில் தனித்து நின்றது

அந்த மாபெரும் நன்றிவிழாவின் தொடர்ச்சியே இந்த ஆடி அமாவாசை

அந்நாளில் வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைக்கும் என நம்பாதவன் கூட அப்படி செய்தால் ஏற்படும் மன‌ நிறைவினை மறுக்க முடியாது

முன்னோர்களின் சொத்து எப்படி வழிவழி வருகின்றதோ அப்படியே அவர்கள் செய்யும் நல்ல காரியங்களின் ஆசியும் அவர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சி சாபமாக வருகின்றது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை

இதில் பகுத்தறிவாளர் ஒரு கேள்வி எழுப்புவர் நல்லதோ கெட்டதோ செய்தவனையன்றி அவன் வம்சத்தை தொடர்வானேன்? எல்லாம் கட்டுகதை என்பார்கள்

அவர்கள் அப்படித்தான்

ஒருவனுக்கு முன்னோர் சொத்து வழிவழியாக வந்தால் அதைகொண்டு அவர்கள் பெயரில் நற்காரியம் செய்தல் வேண்டும்

முன்னோர் செய்த பாவம் ஒருவனை தொடர்வதாக கருதினால் அதற்கு நிவாரணமாக தாழ கிடப்பவருக்கு சில உதவிகளை செய்து வாழவைக்க வேண்டும்

யாரையோ அழித்து முன்னோர் செய்த பாவம் அவன் வம்சாவழி யாரையோ வாழவைக்கும் பொழுது சரியாகின்றது

ஆண்டவனின் கணக்கு மிக துல்லியமாகின்றது

இன்று அயோக்கியர்கள் கையில் சேரும் சொத்து பல ஆயிரம் கோடிகளுக்கான சொத்து எதற்கு சேருகிறதென்று நமக்கு தெரியாது

ஆனால் அவன் சந்ததியில் ஒருவன் அந்த செல்வத்தால் 4 பேரை வாழவைப்பான் என்பது ஆண்டவனுக்கே தெரியும்

இன்றுநடக்கும் அநியாயங்களின் கொடுமை கடவுளில்லைஎன தலையாட்ட சொல்லலாம் , ஆனால் நாளை அந்த அநியாயக்காரரின் வாரிசுகள் பின்னாளில் பலகாரியங்களை செய்யும்பொழுது ஆண்டவன் கணக்கு சரியாகும் என்பது தெரியும்

இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டா விஷயங்கள், புரிந்து கொள்ள முடியா சூட்சுமங்கள்

ஒவ்வொருவனின் முன்னோரும் தன் வம்சத்துக்கு ஒருவித காரியங்களை கடவுள் விருப்படிசெய்ய இங்கு வருகின்றான்

அதை செய்துமுடித்துவிட்டு காலம் முடிந்து கிளம்புகின்றான்

அதன் காரிய காரணங்களை அவனும் அறியமாட்டான், அதை தெரிந்துகொள்ளும் அறிவும் அவனுக்கு இல்லை
ஆனால் அவன் வந்து சென்றதின் பலன் என்ன என்பது இப்பொழுது வாழும் தலைமுறைக்கே தெரியும்

அதனால் குறிப்பிட்ட நாளில் தன் குலம் உதித்த காரணமும் அது செய்த நற்காரியங்களையும் தான் இந்த உலகுக்கும் உறவுக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய காரியம் சாப நிவர்த்தி போன்றவற்றை செய்ய சிந்திது பார்க்க செய்யும் நாளே ஆடி அமாவாசை

இந்த நாள் சொல்லும் தத்துவம் அதுவே

சீன கலாச்சார வழி வழிபாடு உள்ளிட்ட‌ பண்டை மதங்களில் முன்னோர் வழிபாடுஉண்டெனினும் மதங்களுக்கு தாயான இந்துமதம் அதை மிக தெளிவாக தனக்கே உரித்தான எளிமையுடன் அழுத்தமான தத்துவத்துடன் சொல்கின்றது

தென்புலத்தார் எனும் இந்தியர்கள் அதில் பெருமை அடையலாம்

அவரவர் முன்னோரை இந்நாளில் கூர்ந்து கவனித்து நினையுங்கள், அவர்கள் நினைவுகளில் மூழ்குங்கள்
அது வாழ்வினை திரும்பி பார்க்க வைக்கும், முன்னோர்களின் நினைவுகள் நமக்கு ஏகபட்ட பாடங்களை சொல்லும்

இன்று அவர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பினால் அது கிடைக்கும், இல்லை குறைந்த பட்சம் மனநிம்மதியும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளின் பட்டியலும் மனதில் அப்படியே வந்து அமரும்

மிக அர்த்தம் பொதிந்த முன்னோர் நினைவுநாளை ஏற்படுத்திய இந்து தர்மத்தையும், அதை அடியொற்றி நடக்கும் இந்துக்களையும் தூர இருந்து பார்க்கும்பொழுது மனம் மகிழ்த்தான் செய்கின்றது

அவர்களின் முன்னோர்கள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், முன்னோர்களின் கனவு இவர்கள் மூலம் நிறைவேறட்டும், உலகம் செழிக்கட்டும்

சனாதான தர்மம் நிலைக்கட்டும்

ஸ்டான்லி ராஜன் - முகநூல் பதிவு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum