ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலிகள்

3 posters

Go down

நிராகரிப்பின் வலிகள் Empty நிராகரிப்பின் வலிகள்

Post by சிவா Thu Apr 09, 2009 2:10 am

ரயில் நிலையத்தில் வைத்து வினோத்தை மீண்டும் பார்ப்போம் என்று அதற்கு முந்தின வினாடிவரை சத்தியமாய் எதிர்பார்க்கவே இல்லை நான். கடவுளே... இவன் எப்படி இங்கே வந்தான்? யாரை என் பிறவி முழுக்க காணவே கூடாது என்று பிரார்த் தித்துக் கொண்டிருந்தேனோ அவனை ஏன் மீண்டும் காண வேண்டும் நான்...
எங்கள் இரண்டு பேருக்கும் இடையே முப்பது, நாற்பதடி தூரம்தான் இருந்தது. நிறையப் பேர் இடையிலே நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள். டிக்கெட் வாங்க நின்று கொண்டிருந்த அவன் அத்தனை சீக்கிரம் என்னைப் பார்த்து விட மாட்டான் என்றே தோன்றியது.

ஒரு வேளை பார்த்து விட்டால்? உடம்பு, நான் நினைப்பதற்கு முன்பே பின்னால் இருள் தேடி இரண்டடி உள்நோக்கி நகர்ந்தது. ஏன்? எதற்காக... அவனைப் பார்த்து, பயப்படுகிறேனோ நான்...

அவனுக்கு அருகில் நின்று இளித்து இளித்துப் பேசிக் கொண்டிருப்பது தான் அவனது மனைவியா? பரவாயில்லை. நன்றாய்த்தான் இருக்கிறாள். இன்னும் குழந்தை, குட்டி எதுவும் இல்லை போலிருக் கிறதே.

குழந்தை என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன் என்று வெளியே எடுத்துப் போனாரே எங்கே இவரை இன்னும் காணோம், என்னதான் செய்து கொண்டிருக்கிறார்? ட்ரெயின் வரும் நேரம்.
இவன்கூட இந்த டிரெயினுக்குத்தான் வருகிறான் போல. இன்னும் மூன்று மணி நேரத்திற்கு வேறு எந்த ட்ரெயினும்தான் கிடையாதே. கடவுளே அவனை மட்டும் என்னைப் பார்க்க விட்டு விடாதே.

வினோத் ஓரமாய் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த என்னை கண்டுபிடிக்கத் தெரியாமல் மனைவியோடு கடந்து போனான்.

போகலாமா? என்று குரல் கேட்டது பின்புறம். அவர்தான். BBஎன்ன இத்தனை நேரம்...? என்றேன் சிணுங்கினவாறே. குழந்தையை வாங்க கையை நீட்ட அப்பா பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தந்த திடீர் பாசத்தால் அது வராமல் திரும்பிக் கொண்டது. அவர் சிரித்தார்.

போதுமே, உங்க சிரிப்பு. கூட்டம் அதிக மாகிட்டே போகுது. சீக்கிரம் வாங்க இடம் பிடிப்போம் என்று பெட்டியை எடுத்துக் கொண்டு நான் முன்னே நடக்க அவர் மெதுவா மெதுவா என்றபடியே ஓடி வந்தார்.

அது கொஞ்சம் தொலைவாய்ப் போகும் வண்டி. எனவே அதிகப் பெட்டிகள் இருந்தன அதில். எதில் இருந்தாவது வினோத் குதித்து இறங்கி, ஹேய் ரஞ்சனி... என்று பேச ஆரம்பித்து விடுவானோ என பயமாய் இருந்தது.

நடப்பது நடக்கட்டும் என்று சட்டென்று ஒரு பெட்டியில் ஏறிவிட்டேன்.
வினோத்தானே... இருக்கட்டுமே! அவனும் மனிதன்தான். மிருகம் இல்லை. என்ன பயம் எனக்கு? என்னதான் செய்து விட முடியும் அவனால் என்னை.

பாழாய்ப் போன இந்த ட்ரெயினை எப்போதான் எடுப்பாங்களாம் என்றேன் வெறுப்புடன். நான் சொல்லி முடித்த அடுத்த நொடியே கார்ட் விசில் ஊதிட, ரெயிலின் நீளமான, தொடர்ச்சியான சங்கொலி கேட்டது. மிக மெதுவாய் எறும்பு போல ஊற ஆரம்பித்து அது மெல்ல ஸ்டேசனை விட்டு விலகி வேகம் பிடிக்க ஆரம்பித்தது. நகரங்களின் மிச்சம்... குறைந்து வரும் மனிதர்கள்...

வினோத்தைப் பார்த்து ஆறேழு வருடங்கள் இருக்குமா? ம்... இருக்கலாம் என்றே தோன்றியது. நிறைய மாறி விட்டான்! அவனை எப்போது, எங்கே வைத்து முதல் முதலாய்ப் பார்த்தோம்...?

ரெயில் முன்னோக்கி விரைய எனது எண்ணங்கள் அத்தனையும் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

என் கல்லூரி வாழ்வில் முதல் நாள். கேட் வாசல் தாண்டி ஒரு நாற்பதடி உள்ளே போயிருப்பேன். ஏய் என்ற குரல். என் பின்பக்கம் இருந்தது. என்னையே குறி வைத்து.

திரும்பினால் வம்பு. திரும்பாவிட்டாலும் வம்பு. எனவே திரும்பினேன். அவர்கள் ஐந்தாறு பேராய் மரத்தின் மேலே தொற்றிக் கொண்டு இருந்தார்கள் குரங்குகள் போல. மாணவர்கள் போலவே இல்லை. ரவுடிகள் போன்ற தோற்றம்.
உன் பேர் என்னம்மா கண்ணு?

சொன்னேன். நடுவில் உட்கார்ந்திருந்த ஒரு குண்டு மாணவன் தனது பார்வையால் எனது உடல் முழுக்க தடவிப் பார்த்து விட்டு, உன் சைஸ் என்ன? என்றான்.

கண்களில் நீர் முட்டியது எனக்கு. அழக்கூடாது என்று நினைத்தாலும் என்னையும் மீறி கண்ணீர் வந்து விட்டது.

பார்ரா இதை... செருப்பு நம்பர் கேட்டா சின்னக் குழந்தை மாதிரி அழுது
ஏய் அழாதே. அழுதா எங்களுக்குப் பிடிக்காது. அப்புறம் உன்னை நாங்க லேசிலே விட மாட்டோம், ஆமா என்று சிரித்தான்.

என்ன செய்வது என்று நான் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் அவன் திடீரென்று அங்கு முளைத்தான். விரைந்து வந்து அத்தனை பேரின் காதுகளிலும் எதையோ கிசுகிசுக்க அவர்கள் என்னை வெறுப்பாய்ப் பார்த்தனர்.

போ... போயிடு இங்கேயிருந்து என்று கத்தினார்கள். ஓடியே வந்துவிட்டேன். அவன் என்ன சொன்னான்? ஏன் என்னை விட்டு விட்டார்கள் புரியவில்லை!

இரண்டொரு நாளில் அவனை லைப்ரரியில் வைத்து தற்செயலாய்ப் பார்த்து நன்றி சொன்னேன். என்னைக் காப்பாற்றியதற்காக. அப்படி என்னதான் சொன்னீங்க? விரட்டாத குறையா என்னைத் துரத்திட்டாங்க என்று கேட்டேன்.

வேண்டாங்க. சொன்னா உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்றான்.

பரவாயில்லை சொல்லுங்க என்று கட்டாயப் படுத்தினேன் ஆர்வம் தாங்காமல்.
வந்து... நீங்க என்னோட காதலின்னு பொய் சொல்லி...

எ... என்னது?

மன்னிச்சிடுங்க. உங்களைக் காப்பாத்த வேற வழி தெரியலை எனக்கு. நீங்க
அழுதது ரொம்ப சங்கடமா இருந்ததால அப்படி பொய் சொன்னேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிராகரிப்பின் வலிகள் Empty Re: நிராகரிப்பின் வலிகள்

Post by சிவா Thu Apr 09, 2009 2:11 am

சிரிப்பு வந்து விட்டது எனக்கு. சரி பரவாயில்லை. என்பேர் ரஞ்சனி.

என் பேர் வினோத். இங்கே என்ன புக் வேணும்னு வந்தீங்க? சொல்லுங்க நான் உதவி பண்றேன்

அடுத்து சீனியர்களின் பார்ட்டியில் அவரை எனது தோழிகளுக்கு நான் அறிமுகம் செய்து வைத்தேன். அதற்குள்ளே ஃப்ரெண்ட் பிடிச்சுட்டியா என்று சிரித்தார்கள் அவர்கள்.

ஒரே கல்லூரி என்பதினால் ஏதேனும் காரணங்கள் அமைந்து கொண்டே இருந்தது... வினோத்தை சந்தித்துக் கொண்டே இருக்கும்படியாக. அந்த சந்திப்புகள் எங்களுக்குள் நெருக்கத்தையே உண்டாக்கின.

வினோத் வாய் திறந்து காதல் சொல்வான் என்று எதிர்பார்த்து ஒவ்வொரு சந்திப்பிலும் ஏமாந்து போனேன். சரி நானே அதை ஆரம்பித்து விடலாம் என்று முடிவு செய்து ஒரு நல்ல நாள் குறித்தேன்.

அன்று என் அழைப்பில் கடற்கரை வந்தது வினோத். நான் ஒரு ட்ரிக் செய்து, வினோத்... நான் ஒருத்தரை என் மனசார விரும்பறேன். ஆனா அவர் கிட்டே என்னோட காதலை எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிக்கிறேன். என்ன பண்ண? என்று சொன்னேன்.

வினோத் யோசித்து, பேசாம அவர்கிட்டே உன்னோட லவ்வைப் பத்தி நேரடியாகவே பேசிடு. அதுதான் ரைட் என்றது.

பேசினாலும் புரியாத ஜென்மமா அது இருந்தா?

போடா போடா புண்ணாக்குன்னு சொல்லிடு

போடா போடா புண்ணாக்கு

ஆமா அப்படித்தான் சொல்லணும்

அப்படித்தான் சொல்லி இருக்கேன் நானும்

வினோத் நான் சொல்ல, புரியாமல் ஒரு வினாடி முழித்து பின் புரிந்து திகைத்து யூ மீன்... யூ மீன்... அரற்றியது.

யெஸ் ஐ மீன் இட் என்றேன் உறுதியாக. ஐ லவ் யூ வினோத்

நோ என்று தலையில் அடித்துக் கொண்டது. ரஞ்சனி என்ன இப்படிப் பண்ணிட்டே என்று உளறியது.

என்னாச்சு?

என்னோட அத்தை பெண் மும்பைல இருக்கா. அவளை நான் காதலிச்சுட்டு வர்றேன் ரஞ்சனி. அவளைத்தான் திருமணமும் செய்துக்கப் போறேன் நான் என்றது படபடவென்று. என் முகம் போன போக்கைப் பார்த்து, ஸாரி, ரொம்ப ஸாரி. என்னை மன்னிச்சிடு என்றது.

நான் உடைந்து அழுது ஏன் என்கிட்டே இதை முன்னாடியே சொல்லலை? என்றேன்.

எனக்கென்ன மந்திரமா தெரியும். நீயென்னை என்னைக் காதலிப்பேன்னு
நீ என்னை ஏமாத்திட்டே. நம்ப வைத்துக் கழுத்தறுத்திட்டே. என்னோட மனசைக் கெடுத்திட்டே... கத்தினேன் நான்.

நான் அப்படிப்பட்டவன் இல்லை ரஞ்சனி

என்னோட பேசாதே இனி கதறி அழுதவாறே கடற்கரையிலிருந்து வீடு வந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன். இடிந்து போனேன் என்பதும் சரிதான்.

காதலில் தோற்ற வேதனையை விட அவனது நிராகரிப்பு எனக்குள் ஆறாத ரணத்தை எப்போதும் தணியாத வெப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கடனுக்குத்தான் கழித்தேன் கல்லூரிப் படிப்பை. படிப்பை முடிந்த இரண்டாவது வருடமே இதோ இவருக்கு மனைவியாகி விட்டாயிற்று. நல்ல கணவன்தான்.

அவரது தன்னலமற்ற அன்பில் கரைந்து, என்னை நானே இழந்து, இன்று தேவதை போன்ற ஒரு குழந்தைக்குத் தாயாகி... எப்போதாவது தான் தோன்றும் வினோத்தின் நினைவுகள். தோல்வியின் தழும்பில் இருந்து ரத்தம் வடியும். அந்த நிராகரிப்பின் வலிகள் நெஞ்சில் எரியும். எரிச்சல் தரும்.

தடக் என்று பின்னோக்கி சரிந்தேன்.

என்ன கண் முழிச்சுகிட்டே தூக்கமா? ஊர் வந்ததுகூட தெரியாம கணவரது குரல் என்னைத் தட்டி எழுப்பியது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நான் வாங்கிக் கொள்ள அவர் பெட்டியை எடுத்துக் கொண்டார்.

எதிரே போகும் முதுகுகளில் வினோத் தென்பட வில்லை. அவன் இடையிலேயே ஏதாவது ஒரு ஸ்டேசனில் இறங்கி இருப்பான் என்று தோன்றியது. தொலையட்டும்!

ஸ்டேசன் விட்டு வெளியே வந்து கைப்பிடித்து இழுத்த ஆட்டோக்காரரிடம் பேரம் பேசி ஜெயித்து, பெட்டியை உள்ளே வைத்த என் கணவர் என் பின்னே பார்த்து சட்டென்று என் காதருகே குனிந்து, நான் சொன்னதும் உடனே பார்த்துடாதே. நமக்குப் பின்னாடி உள்ள ஆட்டோவிலே ஏற ஒரு ஜோடி தயாரா நிக்குது! அவங்களை தற்செயலா பார்க்கற மாதிரி நல்லாப் பார்த்துக்கோ. நம்ம வீடு போனதும் அவங்களைப் பத்தி சுவாரசியமான ஒரு தகவல் சொல்றேன், பாரு!

திரும்பிப் பார்த்த எனக்கு பாம்பு கடித்த உணர்வு. அங்கே நின்று கொண்டிருந்து வினோத்தும், அவனது மனைவியுமேதான். பாய்ந்து ஆட்டோவில் ஏறினேன்.

என்ன பார்த்தியா? என்றார் என் கணவர்.

அவங்களைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? என்றேன் புரியாமல்.
சஸ்பென்ஸ் என்று சிரித்தார். வீடு போய் நாம அதைப் பற்றி ரிலாக்ஸாப் பேசலாம் என்று சொல்லி என் பொறுமையை சோதித்தார்.

பத்து நிமிடத்தில் வீடு வந்தது. அப்பாடா என்று ஃபேனைப் போட்டுக் கொண்டு சோபாவில் நிம்மதியாய் சாய்ந்தவர் பேச ஆரம்பித்தார்.

அந்த ஜோடியிலே ஒரு பெண் இருந்தாளே... அவளை ஏற்கனவே தெரியும் எனக்கு. நான் மும்பையிலே வேலை செய்தபோது என்னோட ஆபீஸ்தான், அவளும். என்னோட பக்கத்து சீட்! நல்லாப் பேசுவா. நானும் பேசுவேன். என்கிட்டே இருந்த எது அவளை அசத்தினதோ தெரியலை... திடீர்ன்னு ஒருநாள் என்னைக் காதலிக்கிறதா வந்து சொன்னா...

எ... என்னது?

அதைவிட எனக்கும் அதிர்ச்சி. அவளை உட்கார வெச்சு நிதானமா காதல்ன்றது என்ன, அதோட தன்மை என்ன, உனக்கும், எனக்கும் அது சரிப்பட்டு வருமான்னு எல்லாம் பேசி அவளை யோசிக்க வெச்சேன். பெரிய கதைதான் அது
அப்புறம்?

அப்புறம் என்ன? எதார்த்தம் புரிஞ்சிடுச்சு போல. அன்னைக்கு என்கிட்டே இருந்து விலகினவதான். மாற்றல் வாங்கிட்டு எங்கேயோ போய்... அது இருக்கும் நாலஞ்சு வருசம்! இப்போதான் அவளைப் பார்க்கிறேன்.

எனக்குள் திடீரென்று அந்த சந்தோசம் பரவியது.

எனில் - நிராகரிப்பின் வலிகள் என்னைப் போலவே அவ்விடமும் கூட உண்டா? எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அவரை நான் மிகுந்த ஆசையோடு அணைத்துக் கொள்ள, அவரோ எனது திடீர் மகிழ்ச்சி புரியாமல் விழிக்கத் தொடங்கினார்.

எனக்கு நிம்மதியாக இருந்தது. உள்ளே இருந்த மிருகம் இரை கிடைத்து, பசி அடங்கின சந்தோசத்தில் நாக்கினை நக்கிக் கொண்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிராகரிப்பின் வலிகள் Empty Re: நிராகரிப்பின் வலிகள்

Post by manikandan.dp Tue Jul 30, 2013 12:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

நிராகரிப்பின் வலிகள் Empty Re: நிராகரிப்பின் வலிகள்

Post by மனுபரதன் Tue Jul 30, 2013 8:17 pm

நிராகரிப்பின் வலிகள் என்னைப் போலவே எவ்விடமும் உண்டு....!!மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

நிராகரிப்பின் வலிகள் Empty Re: நிராகரிப்பின் வலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum