ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடிப்புகள்

Go down

கண்டுபிடிப்புகள் Empty கண்டுபிடிப்புகள்

Post by Guest Sat May 22, 2021 8:39 pm

ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் சுலபமாக்க சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத் தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் .

கண்டுபிடிப்புகள் Img_4e03e372f407bd38346239502e529d1e582853

இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார். இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் தேதியன்று காலமானார்.
(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

கண்டுபிடிப்புகள் Empty Re: கண்டுபிடிப்புகள்

Post by Guest Sat May 22, 2021 8:42 pm

நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி, ஸ்டெதஸ்கோப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனை!

கண்டுபிடிப்புகள் 5544-Figure1

என்ன பிரச்னை என்று புரிந்துகொள்ள முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டிய மாதிரிதான். ஸ்டெதஸ்கோப் விஷயத்தில் மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவி செய்தது இந்த பாதிக்கிணறு ஃபார்முலாதான்.

இதயத்துடிப்பு, நுரையீரலின் அசைவுகள் போன்றவை ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் காரணிகளாக இருப்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள், நோயாளியின் மார்புப் பகுதியில் காது கொடுத்துக் கேட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள்.

18ம் நூற்றாண்டு வரை இதுதான் நடைமுறையில் இருந்தது. 1816ல், கிரேக்க மருத்துவரான ரெனி லேனக், சிகிச்சைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பரிசோதித்தபோது இந்த முறையை மாற்றினார்.

ஒரு காகித அட்டையை சுருட்டி நெஞ்சில் வைத்து அதன் மறுமுனையைக் காதில் வைத்துக் கேட்டபோது, உள்ளுறுப்புகளின் சத்தம் கேட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஒரு சிறுவன் காகிதத்தை சுருட்டி வைத்து ஒரு பக்கம் ‘ஹோ’வென சத்தமிட, அதன் மறுபகுதியில் அந்த சத்தத்தைக் கேட்டு இன்னொரு குட்டிப் பையன் சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார்

லேனக். உடனே சுறுசுறுப்பானது லேனக்கின் மூளை. ஸ்டெதஸ்கோப்புக்குப் பிள்ளையார் சுழி விழுந்தது இங்கேதான்.

மர உருளையையும், மறுபக்கத்தில் காதில் கேட்கும் வகையில் டிரம்பெட் இசைக்கருவி வடிவத்திலும் இணைத்து ஒரு கருவியை உருவாக்கினார். இதுதான் ஸ்டெதஸ்கோப்பின் முதல் மாடல்.

இது கிட்டத்தட்ட நம்மூர் நாதஸ்வரம் வடிவத்தில்தான் இருந்தது. இதன் மூலம் நோயாளிகளின் மார்பில் காதை வைத்துக் கேட்பதில் இருந்த சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைத்தது.

‘நெஞ்சுப் பகுதியை பரிசோதனை செய்யும் கருவி’ என்ற அர்த்தத்தில் ஸ்டெதஸ்கோப் என்ற பெயர் சூட்டினார் லேனக். கிரேக்கத்தில் ‘ஸ்டெதேஸ்’ என்ற வார்த்தை மார்பையும், கோப் என்ற வார்த்தை பரிசோதனையையும் குறிக்கிறது.

லேனக்கின் கண்டுபிடிப்பைப் பார்த்து, மற்ற மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ‘இரண்டு காது இருக்கும்போது ஒரு காதில்தான் கேட்டாக வேண்டுமா’ என்று யோசித்த அயர்லாந்து மருத்துவர் ஆர்தர் லியர்ட், இரண்டு பக்கமும் காதில் கேட்கிற வகையில் அதை மாற்றி வடிவமைத்தார்.

இதற்கும் அமோக வரவேற்பு. ஃபைனல் டச் கொடுத்தார் அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் சமான். இப்போது மருத்துவர்கள் கோட்டுக்கு மேல் ஸ்டைலாகப் போட்டுக் கொண்டிருக்கும் நவீன ஸ்டெதஸ்கோப்பை வடிவமைத்தது அவர்தான்.
(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

கண்டுபிடிப்புகள் Empty Re: கண்டுபிடிப்புகள்

Post by T.N.Balasubramanian Sat May 22, 2021 9:28 pm

லப் டப் ......கருவி .......நல்ல தகவல்.

கண்டுபிடிப்புகள் 1571444738 கண்டுபிடிப்புகள் 3838410834 கண்டுபிடிப்புகள் 103459460


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கண்டுபிடிப்புகள் Empty Re: கண்டுபிடிப்புகள்

Post by T.N.Balasubramanian Sat May 22, 2021 9:41 pm

ATM என்பதின் விரிவாக்கம் கேட்டபோது அநேகர் எனி டைம் மணி (எந்த நேரத்திலும் பணம்)
என்றே கூறினார்கள். ATM என்று சொன்ன போது ஒ..... ஏடி எம் மெஷினை தானே கேட்கின்றீர்கள் என்றனர் சிலர்.
ATM விரிவாக்கம்.automated tellar machine தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கண்டுபிடிப்புகள் Empty Re: கண்டுபிடிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum