ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்

Go down

  சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள் Empty சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்

Post by Guest Wed Mar 31, 2021 4:10 pm

1.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ’ஷோட்ஸ்’ டிக்டொக் கிற்கு மாற்றானது.
  சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள் YouTube-shortslogo-250x250

2.நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம்.

3.'காபி' Coffee என்ற சொல் ஒரு அரபு வார்த்தையிலிருந்து உருவானது.

4.ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்ற  சூரிய மணிகாட்டி  இந்தியாவில் இருக்கிறது.

5.தேவ விரதன் ,இராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம்.

6. தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்.தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் ,ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவர்.

7.தனிமைக்கான - (Minister of Loneliness) அமைச்சர் ஒருவரை பெப்ரவரி மாதம் ஜப்பான் நியமித்தது.

. 8.Howdy Modi  என்ற நிகழ்ச்சி இந்தியாவில் டில்லியில் நடத்தப்பட்டது.

9.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் பாலிவூட் இந்திப் படம் ரன் - Daud-ஆகும்.

10.1950 ஜனவரி 26 இல் நடந்த முதல் குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வெளிநாட்டவர் பாகிஸ்தானை சேர்ந்த மொகமது ஜின்னா.

11.லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் மறைந்தார்.

12. GOAT என்ற குறுஞ்சொல் இணையத்தில் ஆடு என்பதற்காக பாவிக்கப்படுகிறது.

13.ஒவ்வொருவருக்கும் தேடல் முடிவுகள் எங்கிருந்தாலும் ஒன்றாக இருக்கும்.

14.நான்கு சிங்கங்களைக் கொண்ட இந்திய தேசிய சின்னத்தில் (National Emblem ) பொறிக்கப்பட்ட ‘சத்யமேவ ஜயதே ’ (தமிழில்: வாய்மையே வெல்லும்)  என்ற வாக்கியம் பகவத் கீதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
  சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள் National_Emblem_India

15.இந்திய மக்களவை உறுப்பினராக இருப்பதற்கு குறைந்தது 20 வயதாக இருக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

  சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள் Empty Re: சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்

Post by Guest Wed Mar 31, 2021 11:38 pm

1.தவறு. ஷோட்ஸ் என்பது இந்தியாவில் யு டுயுப் அறிமுகப்படுத்திய குறுங்காணொலி சேவையாகும். ஆனால் இது டிக் டொக்கிற்கு மாற்றானது அல்ல.டிக் டொக் போல் செயல்படக் கூடிய சோர்ட்ஸ் தற்போது பேட்டா வடிவில் உள்ள குறுங்காணொலி சேவையாகும்.இனிவரும் காலத்தில் செயல்படலாம்?
  சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள் Shorts_umKqIri

2.தவறு. ஆப்பிள் வைட்டமின் சி நார்ச்சத்து - fiber -நிரம்பி இருந்தாலும் அவை மட்டும் போதாது.

3.உண்மை.qahwah என்ற திராட்சை ரசம்-wine-அரபு மொழிச் சொல்லில் இருந்து துருக்கி-ஒல்லாந்து-ஆங்கில மொழிக்கு தாவியது.

4.சரியானது. ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்பது, புவியின் அச்சுக்கு இணையாகச் செம்பக்கம் கொண்ட பிரம்மாண்ட செங்கோண முக்கோணவடிவக் கோல் அமைக்கப்பட்டதொரு பகலிரவு சமன்கொண்ட சூரிய மணிகாட்டி ஆகும். இதில் கோலுக்கு இருபுறமும் நிலநடுக்கோட்டின் தளத்திற்கு இணையானதாகவுள்ள ஒரு வட்டக் காற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது, நேரத்தை அரைநொடித் துல்லியமாகக் கணிப்பதற்கும், சூரியன் மற்றும் வான்சார் பொருட்களின் சரிவைக் கணக்கிடவும் அமைக்கப்பட்ட கருவியாகும்.
இந்தியாவில், 18 ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரில் ஜெய் சிங் அரசரால் ஐந்து ஜந்தர் மந்தர்கள் கட்டப்பட்டன. அவை புதுதில்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசியில் அமைந்துள்ளன.
இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகும்.

5.தவறு.
துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் சாந்தனு.சாந்தனுவிற்கும் கங்கைக்கும்  எட்டாவதாக பிறந்தவர் தேவவிரதன்..பிதாமகன்,கங்கைபுத்திரன் எனவும் அழைக்கப்பட்ட இவர் மகா பாரதத்தில் பீஷ்மர் ஆவர்.

6.தவறு. கள்ளக்குறிச்சியை சேர்ந்த , தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்.தர்மலிங்கத்தின் மகன், டி.உதயகுமார் ,2010 இல் இந்திய ரூபாய் குறியீட்டு வடிவத்தை உருவமைத்தவர்.இந்த வடிவமைப்பு இந்திய மூவர்ண கொடியை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

7.சரியானது.கோவிட்டுக்கான தனிமையைப் போக்கவும் தற்கொலைகளை தடுக்கவும் ஜப்பான் பிரதமர் Yoshihide Suga ,  Tetsushi Sakamoto ஐ தனிமைக்கான அமைச்சரகாக -Minister of Loneliness - பெப்ரவரி 12,2021 இல் நியமித்தார்
2018 இல் பிரிட்டிஷ் பிரதமர்  Theresa May முதன்முதலாக தனிமை,முதுமை,நோய் காரணமானவர்களுக்காக தனிமைக்கான அமைச்சரை ( Minister of Loneliness )நியமித்தார்.

8.தவறு. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஹூஸ்டன் நகரில் 2019 செப்டெம்பர் 21/22 இல் நடந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட பிரதமர் மோதிக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ஆகும். இதுபோன்ற பிரதமர்களுக்கான வரவேற்பு 1949 இல் நேருவுக்கும்,2009 இல் மன்மோஹன் சிங்கிற்கும் நடந்தது என்றாலும்,அந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்க அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை.Howdy Modi இல் அப்போதய அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார்.

9.தவறு. 1995 இல் வெளிவந்த ரங்கீலா

10. தவறு இந்தோனேசிய அதிபர் சுகர்னோவும் அவர் மனைவியும் கலந்து கொண்ட அந்த நிகழ்வு டில்லியில் உள்ள Irwin Amphitheatre, இப்போதய Major Dhyan Chand Stadium இல் நடந்தது.


11.தவறு.அன்று அது உண்மை..அன்றைய சோவியத் ஒன்றியம் இன்றைய உஸ்பெகிஸ்தான்,இந்திய-பாக் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லால் பகதூர் சாஸ்திரியும் முகமது ஐயுப் பானும் ( Mohammed Ayub Khan) அப்போதய சோவியத் அதிபர் அலெக்சி கொசிஜின் (Alexei Kosygin)முன்னிலையில் தாஷ்கண்ட் போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்குப் பின் கைசாத்திட்ட பின்னர் ,அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.
இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.
எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.

12.தவறு. GOAT என்ற குறுஞ்சொல் “greatest of all time” எல்லாரையும் விட எப்போதும் சிறந்தவர் என்பதைக் குறிக்கும்.இந்த வழக்கு முன்னர் பாவிக்கப்பட்டாலும் 1971 இல் குத்துச்சண்டை வீரர் மொகமது அலி தன்னை சிறந்த வீரர் என அடிக்கடி சொல்லிக் கொண்டதன் நினைவாக அலியின் மனைவி Lonnie Ali, 1992 இல் பாவித்து விரிவு படுத்திக் கொண்டார். அப்போது விளையாட்டுக்காக பாவிக்கப்பட்டாலும் பின்னர் இணையத்தில் உரையாடல் என எல்லா இடங்களிலும் இச்சொல்லை பாவிக்கத் தொடங்கினார்கள்.

13.தவறு.
இருக்கும் இடத்தை வைத்து தேடல் முடிவுகள் வேறுபடும்.கணினி /திறன்பேசி என எந்த பொறி மூலம் எங்கிருந்து தேடினாலும் -இணையத்தில் தேடும் போது தேடல் முடிவுகள் வேறுபடும். இணைப்பைக் கொடுக்கும் ஐபி முகவரி மூலம் (Internet protocol (IP) address ) இருப்பிடத்தைக் கண்டறிவதன் மூலம் தேடல் முடிவு இடத்திற்கு இடம் வேறாக இருக்கும்.
பாவிக்கும் உலாவி, தேடுபொறி, அடிக்கடி தேடும் தேடல் வரலாறு இவற்றைக் கொண்டு தேடல் முடிவுகள் வேறுபடுவதற்கு அதன் அல்கோரிதம் காரணமாக இருக்கிறது.
கணினி/திறன்பேசி எதுவாக இருப்பினும் வீட்டில் இருந்து தேடும் போதும் வேலை செய்யும் இடங்கள் போன்ற வேறு இடங்களில் இருந்து தேடும் போது தேடல் முடிவுகள் வேறுபடும்.

14.தவறு.
சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்)  என்ற வாக்கியம் அதர்வண வேதத்தை சார்ந்த முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.முண்டம் என்பது தலையைக் குறிக்கும்.தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் அல்லது தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதால் இப்பெயர் வரக் காரணமாயிற்று. அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசம் இதுவாகும்.

15.தவறு. மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பதுடன் வயது 25  அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம்.மக்களவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சபையாகும்.

(அமேசன்/பிளிப்கார்ட் / விக்கிபீடியா)
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum