ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Today at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Today at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Today at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Today at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Today at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Today at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Today at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Today at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Today at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Today at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Today at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....

2 posters

Go down

நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா.... Empty நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....

Post by krishnaamma Mon Mar 01, 2021 6:39 pm

நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா.... 76GZ0AUpQkapD2qnHAiV+download

"சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" பெரியவாளிடம் ஒரு சாமான்யன்

"ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" -(தொடர்ந்து நிர்ஜல உபவாசம் அனுஷ்டித்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-18-05-2017 தேதியிட்ட குமுதம் பக்தி

ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.

ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர். அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.

அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி,

"சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" அப்படின்னு சொன்னான்.

அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா.

"ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான் . சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" அப்படின்னு சொல்லிட்டு அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால் குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.

அதுவும் எப்படித் தெரியுமா?

ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம்.மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம். அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.

ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.

ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிக்கறதைப் பார்த்துட்டு "இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவஸ்யமா?" அப்படின்னு கேட்டார் சீடர் ஒருத்தர்.

அதற்கு பரமாசார்யா என்ன சொன்னார் தெரியுமா?

"இத்தனை ஆசாரத்தை அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே" அப்படின்னுதான்.

லோகத்துக்கெல்லாம் படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்கமுடியாம அன்னபூரணிகிட்டே பிட்சை எடுத்ததா புராணம் சொல்றது. ஆனா, பரமாசார்யா, அந்த அன்னபூரணி தானாவே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம்னுட்டு உபவாசம் இருக்கிறதுக்கு ஆசைப்பட்டார்ங்கறச்சே அவரோட பெருமையை என்னன்னு சொல்றது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா.... Empty Re: நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....

Post by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm

:வணக்கம்: :வணக்கம்:


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum