ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராறு படைவீட்டின் | தமிழ் பக்தி பாடல்

Go down

ஓராறு படைவீட்டின் | தமிழ் பக்தி பாடல் Empty ஓராறு படைவீட்டின் | தமிழ் பக்தி பாடல்

Post by ayyasamy ram Sat Feb 27, 2021 8:43 am



ஆல்பம் : சரவணா சன்னதி
பாடியவர் : P சுசீலா
இசை : சுரும்பின்
இயற்றியவர் : தமிழ் நம்பி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

-
பாடல் வரிகள்:
--------------------

ஓராறு படைவீட்டின் மேன்மை போற்றி
உயிரான முருகா உன் பெருமை போற்றி
மாறாத நலம்கூட்டும் அருமை போற்றி
மலைமேவும் குமரா நீ போற்றி போற்றி
-
வேலோடு கொடிச்சேவல் மயிலும் போற்றி
விளையாடும் குன்றங்கள் யாவும் போற்றி
நூலாகும் உன்பாடல் பலவும் போற்றி
நோய்தீர்க்கும் வெண்நீறு போற்றி போற்றி
-
ஆவினன்குடி குடிவாழும் அண்ணல் போற்றி
அய்யா உன் மயிலாடும் குன்றம் போற்றி
பழனியெனும் தென்பொதினி மழையும் போற்றி
பழம் நீயே தண்டபாணி போற்றி போற்றி
-
சரவணமே நாணல்தான் பொய்கை போற்றி
சக்திவேல் அறம்காத்த மேன்மை போற்றி
ஏரகம் சுவாமிமலை ஏந்தல் போற்றி
இளங்குமரன் சேயோனே போற்றி போற்றி
-
குடைக்கூத்து ஆடிய என் செல்வம் போற்றி
குமரவேல் முருகவேல் அண்ணல் போற்றி
துடிக்கூத்து ஆடிய உன் காட்சி போற்றி
தூயோனே செவ்வேலே போற்றி போற்றி
-
வேற்படையை கொண்டாய் நின் வீரம் போற்றி
வெற்றிதரும் தங்கவேல் மின்னல் போற்றி
சேவற்கொடியோன் எனும் செம்மல் போற்றி
சேந்தன் எனும் முருகா நீ போற்றி போற்றி
-
அவ்வையார் பசிதீர்த்த தாய்மை போற்றி
அவர்பாடல் உவர்க்கேற்றத் தன்மை போற்றி
அருணகிரிக்கருள் செய்த அரசு போற்றி
அவர் தந்தத் திருப்புகழும் போற்றி போற்றி
-
முறைகண்ட நக்கீரர் உறவு போற்றி
முருகாற்றுப்படை நூலின் கருவும் போற்றி
அரும்பழநி கூத்தர்தம் பாடல் போற்றி
அன்புநிறை பெருமானே போற்றி போற்றி
-
அருள் குமரகுருபரத்து அத்தன் போற்றி
அவர் பேசி பாடிய உன் அருளும் போற்றி
தவமுனிவர் கச்சியப்பர் சொந்தம் போற்றி
தணிகை புராணமதும் போற்றி போற்றி
-
போரூரின் சிதம்பரர்தம் பெயரும் போற்றி
பொறுப்புடன் அவர்தந்த நூல்கள் போற்றி
அண்ணாமலை படைத்த சிந்து போற்றி
அருள் பாம்பன் அடிகள் சீர் போற்றி போற்றி
-
வள்ளலாரின் கண்ணாடி காட்சி போற்றி
வளமோங்கும் அருட்பாவின் இனிமை போற்றி
வண்ணச்சரபம் அவரின் வாழ்வும் போற்றி
வழங்கிய உன் புகழ் நூல்கள் போற்றி போற்றி
-
கச்சியப்ப சிவாச்சார்ய புலமை போற்றி
கந்தபுராணம் தந்த சிறப்பும் போற்றி
காவடியைத் தொடங்கி வாய்த்த இடும்பன் போற்றி
காலடியில் இடம்தந்தாய் போற்றி போற்றி
-
நெற்றிக்கண் கருவான நிலவு போற்றி
நெடுந்தீயில் உருவான அமுது போற்றி
பொற்றாமரைத் தொட்டில் ஆறும் போற்றி
பொய்கையும் சரவணமும் போற்றி போற்றி
-
கார்திகையாம் பெண்டிர்தம் பிள்ளை போற்றி
கனிவேண்டி சினம்கொண்ட கருத்தும் போற்றி
மயிள்மீது வலம்வந்த இளமை போற்றி
மருதப்பா குமரப்பா போற்றி போற்றி
-
வேடனும் நீ கிழவனும் நீ காதல் போற்றி
வேங்கை மரம் எனவந்த கோலம் போற்றி
கோடுடையான் கரிமுகனின் இளவல் போற்றி
குலம் காக்கும் நெடும் வேலும் போற்றி போற்றி
-
நான்முகனை சிறையிட்ட அறிவு போற்றி
நல்லாருக்குத் துணைநிற்கும் தெளிவு போற்றி
ஆண்மைக்கோர் பின்தோளின் வலிமை போற்றி
அகத்தியருக்கு தமிழ் தந்தாய் போற்றி போற்றி
-
மறந்தாரை மறவாத மாண்பு போற்றி
துறந்தார்க்கும் துணையான தூய்மை போற்றி
சிறந்தோங்கும் குங்குமமும் நீறும் போற்றி
சிவசக்தி அருட்செல்வம் போற்றி போற்றி
-
மார்பணியும் குறிஞ்சிப்பூ மாலை போற்றி
மணம்வீசும் நறுமலர்கள் யாவும் போற்றி
நீகொண்டத் திருத்தேர்கள் வலமும் போற்றி
நிகரேது அருளாட்சி போற்றி போற்றி
-
பாலூற்றி நீராட்டும் பதிகள் போற்றி
பழச்சாறும் தேன்வெள்ளம் பெருகும் போற்றி
நாள்தோறும் வரும் தொண்டர் கூட்டம் போற்றி
நாடிவரும் காவடிகள் போற்றி போற்றி
-
கற்பூரம் தரும்தூய சுடரும் போற்றி
கமழ்கின்ற சந்தனத்தின் மனமும் போற்றி
பொற்பாத நிழல் கூட்டும் குளுமை போற்றி
பொன்மேனித் திருக்காட்சி போற்றி போற்றி
-
தீராத வினைதீர்க்கும் நீறு போற்றி
தேடிவரும் பதினாறு பேறு போற்றி
ஏரகமும் வடிவேலும் குன்றும் போற்றி
எந்நாளும் நின்பாதம் போற்றி போற்றி
-
ஆறாகும் படைவீட்டின் அழகு போற்றி
அமர்கின்ற குன்றங்கள் யாவும் போற்றி
நீவாழும் நல்லாரின் நெஞ்சம் போற்றி
நிலைகொண்ட ஆறெழுத்து போற்றி போற்றி
-
வெள்ளிவேல் முத்துவேல் கூர்மை போற்றி
வெற்றிவேல் பழனிவேல் நேர்மை போற்றி
வீரவேல் தணிகைவேல் சீர்மை போற்றி
வீரம்மிகும் வைரவேல் போற்றி போற்றி
-
வேலய்யா முருகையா பாதம் போற்றி
வினைதீர்க்கும் குமரையா நாளும் போற்றி
ஓங்கார மந்திரத்தின் உயர்வு போற்றி
ஓம் முருகா ஓம் முருகா போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி
---------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓராறு படைவீட்டின் | தமிழ் பக்தி பாடல் Empty Re: ஓராறு படைவீட்டின் | தமிழ் பக்தி பாடல்

Post by ayyasamy ram Sat Feb 27, 2021 8:44 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum