ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணற்றில் அகப்பட்ட திருடன்

2 posters

Go down

கிணற்றில் அகப்பட்ட திருடன் Empty கிணற்றில் அகப்பட்ட திருடன்

Post by ayyasamy ram Tue 23 Feb 2021 - 17:10

கிணற்றில் அகப்பட்ட திருடன் 609734
-
விவசாயி சோமன் புத்திசாலி. அவர் திருவிழாவுக்குச்
சென்று திரும்பும்போது இரவு மிகவும் தாமதமாகிவிட்டது.
அவரது வீட்டின் சமையலறைக் கதவு திறந்துகிடந்தது.
அதிர்ச்சியடைந்துவிட்டார்.

ஜன்னல் வழியே உள்ளே பார்த்தார். ஒரு திருடன்.

‘இப்போது வீட்டுக்குள் போகக் கூடாது. திருடனிடம்
ஆயுதம் இருக்கலாம். அவனைத் தந்திரமாகத்தான் பிடிக்க
வேண்டும்’ என்று நினைத்தார் சோமன்.

அவர் ஓசை எழுப்பாமல் வீட்டின் மேற்கூரை மீது ஏறினார்.
ஓட்டைப் பிரித்து உள்ளே தலை நீட்டித் திருடனை அழைத்தார்:
“ஓ, நண்பனே!”

திடுக்கிட்டு மேலே பார்த்தான் திருடன். சோமன் சொன்னார்:
“பயப்படாதே, நானும் திருடன்தான். இந்த வீட்டின்
உரிமையாளர் பயணம் சென்றிருக்கிறார். நமக்கு இது நல்ல
வாய்ப்புதான்!”

திருடனுக்குக் கோபம் வந்தது.

“நான் இந்த வீட்டை நீண்ட நாட்களாகப் பார்த்து வைத்து
இப்போதுதான் திருட வருகிறேன். நீ என்னுடன் போட்டிக்கு
வந்துவிட்டாயா? போ, வேறு எங்காவது போய்த் திருடு.”

“நான் போகிறேன். ஆனால், இந்த வீட்டுக்காரர் எங்கே தங்கம்
புதைத்து வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!”

திருடன் பதற்றத்துடன் சொன்னான்: “போகாதே, நண்பனே.
அந்தத் தங்கத்தில் எனக்கும் பங்கு தந்தால், நானே தோண்டி
எடுத்துக் கொடுக்கிறேன்!”

“அப்படி என்றால் வெளியே வா. வீட்டுக்காரர் தங்கத்தை
எல்லாம் இரும்புப் பெட்டியில் போட்டு, வீட்டின் பின்பக்கம்
இருக்கும் தோட்டத்தில்தான் புதைத்திருக்கிறார்!”

இருவரும் தோட்டத்துக்குச் சென்றார்கள். ஒரு மண்வெட்டியை
எடுத்து திருடனிடம் கொடுத்த சோமன், ஓர் இடத்தைக் காட்டிச்
சொன்னார்:

“இந்த இடத்தில்தான் அந்தப் பெட்டி புதைக்கப்பட்டிருக்கிறது!”

திருடன் நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.

வெகுநேரம் தோண்டித் தோண்டி, அந்த இடம் மிகவும்
ஆழமான குழியாகப் போய்விட்டது. வெட்டிய மண்ணை எல்லாம்
கயிறு கட்டிய வாளியில் போடச் செய்து, இழுத்து மேலே குவித்தார்
சோமன்.

பெட்டி ஒன்றும் காணாமல் திருடன் எரிச்சலடைந்தான்.
அப்போது சோமன் சொன்னார்: “வீட்டுக்காரர் இன்னும் ஆழத்தில்
பெட்டியைப் புதைத்திருக்கிறார். அது இந்த இடத்தில்தான்
இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ மேலும் ஆழமாகத்
தோண்ட வேண்டும்!”

அவரை நம்பிய திருடன் உற்சாகத்துடன் மேலும் ஆழமாகத்
தோண்டினான். இடைவிடாமல் தோண்டிக்கொண்டே இருந்தான்.
பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது.

முற்றிலும் களைத்துத் துவண்டுபோன திருடன் குழிக்குள் இருந்து
சொன்னான்: “ஐயோ... இனிமேலும் என்னால் தோண்ட முடியாது!
தோண்டித் தோண்டி குழியில் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.
நீங்கள் சொன்ன பெட்டி எங்கே?”

அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தார் சோமன். திருடன் திகைத்து
நின்றான்.

“இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று நான்
விரும்பினேன். அது இன்று நடந்துவிட்டது! இந்த வீட்டுக்கும்
நிலத்துக்கும் உரிமையாளன் நான்தான்!”

உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்றான் திருடன். ஆனால்,
அவன் பெரிய குழிக்குள் அல்லவா இருக்கிறான். மற்றொருவர்
உதவி இல்லாமல் மேலே வர முடியாதே!

சோமன் ஊர்க்காரர்களின் உதவியுடன் திருடனைக் குழிக்குள்
இருந்து மீட்டார். பிறகு அவன் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.
-
நன்றி யூமா வாசுகி
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82816
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிணற்றில் அகப்பட்ட திருடன் Empty Re: கிணற்றில் அகப்பட்ட திருடன்

Post by T.N.Balasubramanian Tue 23 Feb 2021 - 22:42

அருமையான கதை.
சமயோஜித புத்திக்காரர் வீட்டுக்காரர் . கிணற்றில் அகப்பட்ட திருடன் 103459460 கிணற்றில் அகப்பட்ட திருடன் 3838410834


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிணற்றில் அகப்பட்ட திருடன் Empty Re: கிணற்றில் அகப்பட்ட திருடன்

Post by ayyasamy ram Tue 23 Feb 2021 - 23:40

திருட வந்தவர்களை கொல்லைப்புற கிணற்றில்
நகைப்பெட்டி போடப்பட்டுள்ளதாக நம்ப வைத்து
திருடர்கள், விடியும் வரை கிணற்று நீரை இறைக்கும்படி
செய்து விடுவான் தெனாலிராமன்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82816
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிணற்றில் அகப்பட்ட திருடன் Empty Re: கிணற்றில் அகப்பட்ட திருடன்

Post by Guest Wed 24 Feb 2021 - 1:56

ஓ,இவர்தான் அந்த சோமனா?
avatar
Guest
Guest


Back to top Go down

கிணற்றில் அகப்பட்ட திருடன் Empty Re: கிணற்றில் அகப்பட்ட திருடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum