Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
Page 1 of 1
ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
-
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,
ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க,
சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், முழுமையாக
பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, மூன்று
வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஆண்டு நவ., 21ல்
இதற்கான அடிக்கல் நாட்டினார். மாதவரம் - சோழிங்கநல்லுார்,
மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி
பை -- பாஸ் வரை, மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ
ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இத்திட்ட பணிகளை, வரும், 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு,
பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தானியங்கி ரயில்
டில்லி மெட்ரோவில், மெஜந்தா வழித்தடத்தில், நாட்டிலேயே
முதல் முறையாக தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை,
சமீபத்தில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.அப்போது அவர்,
'நாட்டின் பிற நகரங்களிலும், தானியங்கி மெட்ரோ ரயில் திட்டம்
விரிவுபடுத்தப்படும்' என்றார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது
திட்டத்தில், ஓட்டுனர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில்களை
இயக்க, சி.எம்.ஆர்.எல்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
புதிய அனுபவம்
சென்னையில் தற்போது, மெட்ரோ ரயில், நான்கு பெட்டிகளுடன்
இயக்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்தில், முதல் கட்டமாக மூன்று
பெட்டிகளுடனும், பயணியரின் வரவேற்பையொட்டி, ஆறு
பெட்டிகளுடனும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால், நிலையங்கள், ஆறு பெட்டிகள் நின்று செல்லும் அளவுக்கு
வடிவடிவமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்ட திட்டத்தில், முதல்
கட்டமாக, 25 எண்ணிக்கையில், ஓட்டுனர் இல்லா தானியங்கி மெட்ரோ
ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர்
Re: ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
-
இதில், முதல் கட்டமாக, தானியங்கி முறையில் இயங்கும்
ஆறு ரயில்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரயில்களை
வடிவமைத்து வழங்கும் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்
பணிகளை,சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் துவக்கியுள்ளது.
டில்லியை போல, சென்னை மக்களும், அடுத்த சில ஆண்டுகளில்
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் பயண அனுபவத்தை பெற
முடியும். இது, சென்னை மெட்ரோ ரயில் சேவையை உலக தரத்துக்கு
உயர்த்தும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
மூன்று வழித்தடங்கள்!
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்பட
உள்ள மூன்று வழித்தடங்கள் குறித்த விபரம்:
* மூன்றாவது வழித்தடமாக, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வழித்தடம்
அமைந்துள்ளது. மொத்தம், 45.13 கி.மீ., தொலைவுக்கான
இதில், 19.9 கி.மீ., மேம்பால முறையிலும், 26.72 கி.மீ., சுரங்க முறையிலும்
அமைக்கப்படுகின்றன
* நான்காவது வழித்தடமாக, கலங்கரைவிளக்கம் -- பூந்தமல்லி வழித்தடம்
அமைகிறது.மொத்தம், 26.09 கி.மீ., தொலைவில், 16 கி.மீ., மேம்பால
முறையிலும், 10.07 கி.மீ., சுரங்க முறையிலும் அமைய உள்ளது.
* ஐந்தாவது வழித்தடமாக மாதவரம் -- சோழிங்கநல்லுார் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம், 47 கி.மீ., தொலைவுக்கான இவ்வழித்தடத்தில், 41.17 கி.மீ., மேம்பால
முறையிலும், 5.3 கி.மீ., சுரங்க முறையிலும் அமைக்கப்பட உள்ளது.
Re: ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
31 நகரங்களில் 'சக்சஸ்'
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் போக்குவரத்து,
சென்னைக்கு புதிதாக தோன்றலாம்.
உலக அளவில், 1982 முதல், பல்வேறு நாடுகள், தானியங்கி
ரயில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 31 சர்வதேச நகரங்களில்,
தானியங்கி மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பாட்டில்
உள்ளது. ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், கனடா, சிலி,
மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன.
ரயில் பாதையும், ரயில்களும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து
இயக்கப்படும். செயற்கை கோள் மற்றும் கணினி சிக்னலிங்
முறையில் ரயில்கள் கட்டுப்படுத்தப்படும்.'ரிமோட் கன்ட்ரோல்'
கார்கள் இயக்கப்படுவது போன்ற தொழில்நுட்பத்தின்
அடிப்படையில், ரயில்களுக்கான தொடர்பு ஏற்படுத்தப்படும்.
முதலில் மூன்றாம் நிலை தான்!
ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான வழிமுறைகள்:
* மெட்ரோ ரயில் திட்டத்தில், இயக்குதல், நிறுத்துதல், கதவுகள் திறந்து -
மூடுதல், பிரச்னை ஏற்படும் போது ரயிலை நிறுத்துதல் ஆகிய நான்கு
விஷயங்கள், முக்கிய பணிகளாக உள்ளன.
* இதில், நான்கு பணிகளையும் மனிதர்களை பயன்படுத்தி
செயல்படுத்துவது முதல் நிலை
* ரயிலை இயக்குவது, நிறுத்துவது தானியங்கி முறையிலும்,
கதவுகளை திறப்பது, பிரச்னை ஏற்படும் போது ரயிலை நிறுத்துதல்
ஓட்டுனர் வாயிலாக செயல்படுத்துவ இரண்டாம் நிலை
* ரயிலை இயக்குதல், நிறுத்துதல் தானியங்கி முறையிலும், கதவு திறப்பது,
பிரச்னையின் போது ரயிலை நிறுத்துவதை உதவியாளர் வாயிலாக
செயல்படுத்துவது மூன்றாம் நிலை
* நான்கு பணிளையும் தானியங்கி முறையில் செயல்படுத்துவது
நான்காம் நிலை* நான்காம் நிலை தான், முழுமையான தானியங்கி
நிலையாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
* டில்லியில், ஓட்டுனர் இல்லா ரயில் போக்குவரத்து, முதலில் மூன்றாம்
நிலையில் துவங்க உள்ளது,அதன் பின், இது நான்காம் நிலைக்கு மாற்றப்படும்
* சென்னையிலும், மக்களிடம் அச்சம் ஏற்படக்கூடாது என்பதற்காக,
முதலில் மூன்றாம் நிலையிலும், பின்னர் நான்காம் நிலையிலும் ஓட்டுனர்
இல்லாத ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட உள்ளது.
- நமது நிருபர் -தினமலர்

Similar topics
» 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்
» ஆலந்தூர் - விமான நிலையம் இடையே முதல் கட்ட மெட்ரோ ரயில் சோதனை வெற்றி
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் !
» மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு
» ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|