ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை

Go down

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை Empty பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை

Post by ayyasamy ram Wed Jan 13, 2021 9:05 pm

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை 516612
தஞ்சை மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.
அந்த பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றுதான்
தஞ்சை வாசன் என்கிற பெயரும்.

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்
இலக்கிய விழாக்கள் தோரணம் கட்டிய 90-களில்
தஞ்சை சீனிவாசன் என்கிற பெயரில் இந்த கவிஞன்
ராஜாளிப் பறவையைப் போல தனது கவிதைச்
சிறகால் வான் அளந்தான்.

சுறுசுறுவென்று சுழலும் தரைச்சக்கரமாய் தஞ்சை
பூமியெங்கும் சுற்றிச் சுற்றி வந்து கவிதை வார்த்த
இந்தக் கவிஞன்… இயல்பிலேயே நகைச்சுவை
உணர்வும் புதுக்கவிதையின் உச்சம் தொட்டு
சிலிர்க்கும் மொழியழகும் கொண்டவர்.

அந்நாட்களில் அவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து
கொண்டிருந்தார். நண்பர்களுக்கெல்லாம் சாயங்கால
நேர சடையப்ப வள்ளலாவார்.

அவர் வாங்கித் தந்த தேநீரின் இனிப்பு இன்னமும்
நெஞ்சில் இருக்கிறது. தஞ்சை தமிழ்த்தாய் பேரவை,
தஞ்சை பிரகாஷின் இலக்கியச் சங்கமம், சும்மா
இலக்கியப் பேரவை போன்றவற்றில் தன்னை
இணைத்துக்கொண்டு இலக்கியம் விதைத்தவர்.

தஞ்சையில் பேச்சாளர் இரா.செழியன், கவிஞர்கள்
சுகன், வெற்றிப்பேரொளி, கவிஜீவன், புத்தகன்,
விஜயகுமார், ரவிராஜ், சாலியமங்கலம் சபாபதி,
பாபநாசம் மணிமுடி, இளங்கோ, தி
யாக ஜோதி ராமலிங்கம், ஏழைதாசன்
(இன்று பேராசிரியர் மாதவன்) இவர்களோடு தோளோடு
தோள் நின்று தமிழில் பாசப் பாசனம் செய்தார் கவிஞர்
வாசன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தஞ்சையில் இருந்து
புறப்பட்டு திருவாரூருக்கு கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின்
வீட்டுக்கு வந்துவிடுவார். நண்பர்கள் ஜமா கூடிவிடுவோம்.
எழுத்தாளர் ராஜகுரு, எஸ்.ராஜகுமாரன், பையூர்
பாநலவேந்தன், மருதவாணன், கனகராஜன், காட்டூர்
கவிதாசன், பாட்டரசர் பாலைக்கண்ணன், மானா பாஸ்கரன்,
திருவாரூர் குணா, நீதிதாசன் என்று ஆரூர் தமிழ்நாடனின்
வீட்டில் இலக்கிய தடபுடல்தான்.

விடிய விடிய தமிழ் நெய்திருப்போம். மகிழ்ந்திருப்போம்.
இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து திருவாரூரில்
தங்கிவிட்டு பிரியவே மனமின்றி தஞ்சைக்குப் பேருந்து
ஏறுவார். அவருடன் நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் பல
மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறோம்.

அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ்
மாநாட்டில் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து
கவிதைக்கான இரண்டாவது பரிசினைப் பெற்றிருந்தார்
வாசன்.

கர்வமோ, பொறாமையோ இல்லாத அன்பின் நிழலாக
வாழ்ந்தவர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை Empty Re: பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை

Post by ayyasamy ram Wed Jan 13, 2021 9:06 pm

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை
songwriter-amarar-tanjay-vasan-a-bird-of-remembrance

90-களின் பிற்பகுதியில் சென்னை வந்த கவிஞர் வாசன்…
கோடம்பாக்கத்தின் கதவுகளை தனது தங்கத் தமிழால்
தட்ட ஆரம்பித்தார். மெல்லத் திறந்தது அவருக்கான
கதவு. ஆம். ‘ஆஹா’ படத்தில்

'முதன்முதலில் பார்த்தேன்,

காதல் வந்ததே...

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே...

என்னில் இன்று நானே இல்லை,

காதல் போல ஏதும் இல்லை...'


என்ற பாடல்தான் வாசனுக்கு முகவரி தந்த முதல் பாடல்.
இப்போது, 40-ஐ தாண்டிய அனைத்து தமிழர்களின் நேயர்
விருப்பமாக இருக்கும் பாடல் அது. தனது எளிமையான
அழகியல் வரிகளால் 150 பாடல்களுக்கும் மேல் எழுதி
புகழின் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார் வாசன்.

'பூந்தோட்டம்' என்ற படத்தில்…

'சுட்டும் விழிச் சுடர் பார்த்து

மனம் கெட்டதைச் சொல்லட்டுமா...

கொட்டும் பனித் துளி கூட

என்னைச் சுட்டதைச் சொல்லட்டுமா...

கம்பனிடம் கடன் கேட்டுக்

கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா...’ என்றெழுதி
ரசிகர்களைக்
கவர்ந்தார் வாசன்.

அப்போது 'ஆனந்த மழை' என்கிற பெயரில் ஒரு படம்
வெளிவந்தது. இது 'தோழி பிரேமா' என்ற தெலுங்கில்
இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படம்.

இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் நெய்தவர்
வாசன்தான். 'ஆனந்த மழை' படத்தில் வாசன் வைத்த
பாட்டுப் பந்தியின் சுவை புதிதாக இருந்தது.

அப்படத்தில் அவர் எழுதியிருந்த

'உறவொன்று என்னை உரசியதே

உதடுகள் மௌனம் உளறியதே

முதல் மழையின் ஒரு துளி தீண்டி,

உயிர் தரை நனைகிறதே...'

என்ற வரிகளை மொண்டு வந்த அந்தப் பாடல் தமிழ்
ரசிகர்களின் இதயத்தை நனைத்தது.

வேகவேகமாய் வளர்ந்து வந்த… கவிஞர் வாசன் தமிழ்
திரையிசை ரசிகர்களின் நெஞ்சில் சோகம் படரச் செய்து…
கண்ணீர் சிந்த வைத்து உடல்நலக் குறைவால் 1998-ம்
ஆண்டு டிசம்பர் 11 அன்று மரணமடைந்தார்.

வண்ணம் கொண்ட தனது மொழிக் குடையால் தமிழுக்கு
நிழல் விரித்த இந்தக் கவிஞன் காலமானது மின்சாரக்
கவிஞன் பாரதியின் பிறந்த நாள் அன்று என்பது இந்த
சோகத்திலும் உற்றறிய வேண்டிய ஒரு தகவலாகும்.
-
----------------------------------------
- மானா பாஸ்கரன், எழுத்தாளர்.
புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை,
அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
நன்றி- இந்து தமிழ் திசை
\
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum