ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது

2 posters

Go down

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது Empty புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது

Post by aeroboy2000 Mon Dec 28, 2020 12:10 pm

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது, யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், நாட்டின் எந்த மூலையில் வேண்டிமானாலும் விற்கலாம். இதுக்கு முதலில் விவசாயிக்கு நேரம் வேண்டுமே. ஏன் நேரமில்லை?

விளைவித்தவனே அதாவது உழவனே தான் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் அதை செய்வது மிகவும் கடினம்.
ஆண்டின் 12 மாதங்களும் அவனது தினசரி வாழ்க்கை என்பது மழையையும், வெயிலையும் நம்பி இருக்கு. சுருங்க சொன்னால் இயற்கையை ஒட்டி இருக்கு.

பசு அல்லது எருமை வைத்து இருக்கும் விவசாயி காலை 5 மணிக்குமேல் தூங்க முடியாது. காலையில் எழுந்தது பல் துலக்கவோ அல்லது குளிக்கவோ அல்லது பூசைகள் செய்யவோ முடியாது. கோட்டு சூட்டு எல்லாம் போட முடியாது. பேண்ட் சட்டைகூட போட முடியாது.
நானெல்லாம் காக்கி டவுசர், தோல் செருப்புலைதான் வாழ்க்கை ஓடுது. லுங்கி சட்டையும் ஓகேதான். லுங்கி அடிக்கடி அவிழும். அது வசதியில்லை.

காலையில் எழுந்தவுடன் அவன் பால் எருமை அல்லது பசு இருக்கும் கட்டுத்தரையை சுத்தம் செய்ய வேண்டும். இரவும் முழுவதும் பசு போட்ட சாணம், பசும்புல் எச்சம், இவற்றை ஒரு கூடையில் அள்ளிக் குப்பைக்குழியில் கொண்டு சேர்க்க வேண்டும். பால் கறக்க தேவையான இளஞ்சூடான நீர், பாத்திரம் இவற்றை தயாராக வைத்து இருக்க வேண்டும். அதன் பின்னர் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குள் கையை கழுவிவிட்டு கன்றுகுட்டியை தாய்ப்பசுவின் முன்னால் கட்டிவிட்டு பாலைக் கறக்க வேண்டும். ஒரு பசு/எருமை என்றால் இதற்கு 30 நிமிடம் ஆகும். பால் கறந்து முடித்ததும் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட வேண்டும். பின்னர் பாலை பத்திரப்படுத்த வேண்டும். அடுத்து கொஞ்சம் உணவு அல்லது ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு மாட்டுக்கு புசும்புல் (கடந்த நாள் மாலை வெட்டி வைத்து இருந்தது) கொடுக்க வேண்டும். அடுத்த பசு/எருமைக்கு இதையே செய்ய வேண்டும். இரண்டு பசுக்களை கறந்தால் மணி 6.30 ஆகிடும்.

பாலை தேநீர் கடைக்கு ஊற்றித் திரும்பினால் மணி 7 ஆகிடும். இதையே நாம் நேரடியா வீடு வீட்டுக்கு ஊற்றி வியாபாரம் செய்தால் காலை 4 மணிக்கு எழ வேண்டும். அப்போதுதான் நமது முதல் வாடிக்கையாளருக்கு 6 மணிக்கு பால் கொடுக்க முடியும். இல்லையென்றால் அந்த வீட்டில் இருக்கும் ஆட்கள் 7.00 க்குள் காலையில் குடிக்கும் தேநீர் லேட் ஆகிடும். தனியாரிடம் பால் வாங்கும் பெண்கள் இதை உறுதிப்படுத்தவும். உங்க வீட்டில் எத்தனை மணிக்கு காலை காபி? பட்டுன்னு பதில் சொல்லுங்க. துணிவுடன் சொல்லுங்க.

பால் டீக்கடைகோ அல்லது சொசைட்டிக்கோ ஊற்றினால் 7 மணிக்கு திரும்பிடலாம். வீடு வீட்டுக்கு ஊற்றினால் 8 மணிக்கு முன்னர் எந்த உழவனும் வீடு திரும்ப முடியாது. தனியாரிடம் பால் வாங்கும் பெண்மணிகள் பால்க்காரரிடம் எத்தனை மணிக்கு எழுறீங்கன்னு கேட்டுப்பருங்களேன்.

வீட்டுக்கு வந்த உடனே ஆடுகள் இருந்தால் அவற்றின் பட்டியை அல்லது சாலையை சுத்தம் செய்ய வேண்டும். கையில்தான் அள்ள வேண்டும். முதலில் விலக்குமாறு கொண்டு கூட்டி ஒரு கூடையில் அள்ளி அதைக் குப்பைக்குழியில் போட வேண்டும். அடுத்து அவற்றுக்கு தீனி போட வேண்டும். அதுக்கும் பசிக்கும்ல. அதான். தண்ணீர் தொட்டிகளை நிரப்ப வேண்டும். அப்புறம்தான் நமக்கு சாப்பாடு. நாய் இருந்தா நாம் சாப்பிடும்போதே அதுக்கும் சாப்பாடு போடணும். இது முடிந்தால் காலை மணி 9 ஆகிடும்.

மதியம் 1 மணிக்கு ஆடு மாடுகள் அனைத்தும் தீனி திங்குதா இல்லை என்று ஒரு ரவுண்டு விடணும். இது ரொம்ப முக்கியம்.

குறங்காடு அல்லது பில்லுக்காடு என்று ஆடு மாடுகள் மேய தனியாக காடு இருந்தால் அந்த காட்டுக்கு இவைகளை ஓட்டிக் கொண்டு போகணும். காரில் கொண்டு போய் விட முடியாது. நடந்துதான் போகணும். என் வயக்காட்டுக்கும் பில்லுக்காட்டுக்கும் 4 கிமீ தூரம். கொண்டுபோய் விடுவதோடு நிற்காமல் அங்கு இருக்கும் தண்ணித்தொட்டியை நிரப்ப வேண்டும். இரண்டு பசு/எருமை பத்து செம்மறி ஆடுகள் என்றால் நாளொன்றுக்கு குறைந்தது 200 லிட்டர் தண்ணீர் வேண்டும். இதுக்கும் தண்ணீர் வசதி செய்து இருக்க வேண்டும். இது தனிக்கதை.

வீட்டுக்கு வந்து காலை உணவு முடித்தால் மணி 9 ஆகிடும். 9-4 விவசாய நேரம். இது எந்த மாதம் என்பதைப் பொறுத்து மாறுபடும். தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் விவசாயம் அதிகம் இல்லை. இருக்குற தென்னை மரங்களுக்கு தண்ணீர் விடுவது, வீட்டு பயன்பாட்டுக்கு போட்ட காய்கறித் தோட்டங்களுக்கு நீர் விடுவது என்று பொழுது போயிடும்.

மாலை மூன்று மணிக்கு புண்ணாக்கு, தவிடு எல்லாம் கலந்து மாட்டு தொட்டியில் போட்டு வைக்கணும். ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி தவிட்டு தண்ணி தொட்டி இருக்கணும். கையைவிட்டு நல்லா கலக்கணும். புண்ணாக்கை காலையிலேயே சிலர் போட்டு பகல் முழுவதும் ஊற வைப்பார்கள். அப்பத்தான் நல்லா கரைந்து நல்லா மணமா இருக்கும். பசுவோ எருமையோ நல்லாக்குடிக்கும். அப்புறமா பசும்புல் ஒரு கட்டு உடைச்சு போட்டு வைக்கணும். கட்டுதரையை தயாரா வச்சு இருந்தாத்தான் மாட்ட குறங்காட்டில் இருந்து ஓட்டி வந்த உடனே அதுக்கு கடிக்க, குடிக்க வசதியா இருக்கும்.

ஆடுகளுக்கும் இதேபோல தண்ணீர் தனியா தவிட்டு தண்ணி தனியா என்று தொட்டிகள் தனித்தனியா இருக்கணும். மனிதர்கள் காபி குடிச்சாலும் தாகத்துக்கு தண்ணீர் குடிக்கிற மாதிரிதான். ஆடு மாடுகளை தனித்தனியாக வைக்க வேண்டும். இல்லைன்னா பசுவா இருந்தாலும் ஆடு பசுவின் தீனியை கடிக்கப் போனா பசு ஆட்டை கொம்பில் குத்தி தூக்கிடும்.

மாலை 4 மணி என்றால் மாலை நேரத்தில் பால் கறக்க தயார் ஆகணும். குறங்காட்டில் இருந்து ஆடு மாடுகளை மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைக்கணும். முதலில் கன்றுகளை பசு/எருமையின் முன்னர் கட்டி வைத்து விட வேண்டும். பகல் முழுவதும் கன்றுகள் பசுவுடனே இருந்தால் மாலை நேரத்தில் அதிகம் பால் இருக்காது. எங்க வீட்டில் மாலையில் பால் வீட்டுக்கும் மட்டும்தான் கறப்போம். ஆனால் பலர் விற்பனைக்கு கறப்பார்கள். காலையில் பால் கறக்கும்போது சொன்னதே மீண்டும். கறந்த பாலை டீக்கடைக்கு ஊத்தினால் 6 மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம். வீடு வீட்டுக்கு ஊத்தினால் 7 மணி ஆகிடும். வந்த உடனே மீண்டும் ஒருமுறை ஆடு மாடுகளை பார்வையிட வேண்டும்.

இது ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும். ஆண்டுப் பிறப்பு, தீபாவளி, என்று எந்த பண்டிகையும் இல்லை. பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் குறித்து தனிப்பதிவு தேவை.

8 மணிக்கு சாப்பாடு. அப்புறம் தூக்கம்.

அடடே, பல் தேய்க்க, குளிக்க மறந்துட்டோம். ஆடு மாடெல்லாம் பல்லா தேய்க்குது? 😂

ஆனால் ஆனி மாதம் என்றால் குப்பைக்குழியை தோண்டி எடுத்து உலர்த்தணும். ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மக்கிய குப்பை தேவை. இது என் கணக்கு. அடுத்து அனைத்து விதைகளையும் தயாரா வைச்சு இருக்கணும். உழவுக்கு டிராக்டருக்கு சொல்லி வைக்கணும். விவசாயக் கருவிகளை சாணை பிடித்து கைப்பிடியெல்லாம் சீர் செய்து தயாரா இருக்கணும். உலர்ந்த எருவுடன் (குப்பைக்குழியில் இருந்து எடுத்து உலர்த்தியது) ஒரு டன்னுக்கு 100 கிலோ மண்புழு உரம் சேர்க்க வேண்டும். இதை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

அடுத்து இந்த ஆண்டு என்ன பயிர் செய்யப் போகிறோம் என்ற திட்டம் இருக்க வேண்டும். எத்தனை செண்ட் கடலை, எத்தனை செண்ட் மிளகாய், எத்தனை செண்ட் காய்கறிகள் என்று தெளிவாக திட்டம் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பெய்த முதல் மழையைக் கணக்கில் வைத்து மிளகாய் நாற்றுக்களை தயார் செய்ய வேண்டும். சரியாக 30-40 நாட்களில் மிளகாய் நாற்றுகள் நடவுக்கு தயார் ஆயிடும். மழைபெய்தவுடன் வாடகைக்கு சொன்ன டிராக்டர் கொண்டு உழவேண்டும். பாத்தி அமைக்க வேண்டும். நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுக்கணும். கூலி ஆள் பிடிக்கணும், உரம் போடணும், மருந்தடிக்கணும் அறுவடை செய்யணும், உரம் போடணும், மருந்தடிக்கணும், இப்படி ஆக முதல் டிசம்பர் வரை மிளகாய்க்கு மட்டுமே செய்யவேண்டியவை ஏராளம். நிலக்கடலையும் போட்டால் அது வேலையை அதிகப்படுத்தும். தக்காளி, கத்தரிக்காய், எள், உளுந்து, இப்படி பலவற்றையும் பயிர் செய்தால்தான் வருமானம் அதிகமாகும். வேலைபளு கூடும். ஆடு மாடுகளுக்கு விடுமுறை கிடையாது. அவற்றையும் சேர்த்துக் கவனிக்க வேண்டும். ஆக முதல் டிசம்பர் வரை பம்பரமாய் சுழல வேண்டும். இல்லையென்றால் விதைத்த எதுவும் வீடு வந்து சேராது.

இப்ப சொல்லுங்க சிறு குறு விவசாயி விளைவித்தவற்றை 20 கிமீ தொலைவுக்கு மேல் எப்படி எடுத்து சென்று விற்க முடியும்? சந்தையில் எவ்வளவு நேரம் காத்திருந்து விற்க முடியும்? கத்தரிக்காய் தக்காளி எல்லாம் இரண்டு வருடங்களுக்கு அப்படியேவா இருக்கும்? செடிகளில் இருந்து பறித்த 24 மணி நேரம் கழித்து தக்காளி தோல் சுருங்க தொடங்கிவிடும். தோல் சுருங்கினா யார் வாங்குவாங்க? அவன் ஆடு மாடுகளை பார்ப்பானா? குடும்பத்தை கவனிப்பனா? இணையம் வழியாக விற்பானா? பொருட்களை கிடங்கில் வைத்து சேமித்து நல்ல விலைக்கு விற்க காத்திருப்பானா? சேமிப்பு கிடங்குகள் தமிழ் நாட்டில் இருப்பவை எத்தனை என்று தேடுங்கள். விவரம் தங்களுக்கே புரியும். அதனால்தான் வியாபாரிகளிடம் அல்லது தனியார் கடைகளில் கொட்டிவிட்டி மாட்டுக்கு புண்ணாக்கு ஊற வைக்க இடுப்பில் கட்டிய வேட்டி கழண்டு விழுவதுகூட தெரியாமல் பலர் ஓடிக்கிட்டு இருக்காங்க.

ஒரு எருமை/ பசு வைத்து இருந்தாலே நாளொன்றுக்கு காலை 2 மணி நேரம் மாலை இரண்டு மணி நேரம் மொத்தம் 4 மணி நேரம் செலவிட வேண்டும். இரண்டு எருமை/பசுக்கள் என்றால் அது 6 மணி நேரத்தை எடுத்துவிடும். தூங்க 6 மணி நேரம். குளிக்க, பல் தேய்க்க, சாப்பிட, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் ஆக 12 மணி நேரம் போயாச்சு. ஆடுகள் இருந்தால் ஒரு மணி நேரம் கூட்டுங்க. 13 மணி நேரம் போயாச்சு. மிச்சம் இருப்பது 11 மணி நேரம். இதில் 10-2 மணி வரை வெயிலில் எந்த வேலையும் செய்ய முடியாது. வயக்காட்டில் ஏர் கண்டிசன் இல்லை சாமியோவ். மிச்சம் இருப்பது 5 மணி நேரம். அதுவும் தை (பாதி) முதல் வைகாசி வரையே. மழை பெய்து மிளகாயோ கடலையோ போட்டுவிட்டால் ஆனி முதல் மார்கழி வரை இந்த 5’மணி நேரத்தில்தான் விவசாயம் செய்யவேண்டும்.

இது தெரியாமல் விவசாயி தான் விளைவித்தவற்றுக்கு தானே விலையை முடிவு செய்ய புதிய வேளாண்மை சட்டம் அனுமதிக்கிறது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், நாட்டின் எந்த மூலையிலும் விற்கலாம் என்று ஒரு குரூப் வாழைப்பழ காமெடியில் அதானே இது என்று செந்தில் சொன்னதுபோல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காங்க.

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது Empty Re: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது

Post by Guest Mon Dec 28, 2020 12:27 pm

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது 3838410834 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது 103459460 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது 1571444738 விவசாயிகளின் உண்மை நிலை பற்றி அரசுகளுக்கு ஒன்றும் தெரியாது.அவற்றை தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள்.ஆட்சியில் உள்ள விவசாயிக்கும் தெரியாதா என்ன?ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்?

வேளான் சட்டங்கள் இணையத்தில் முழுவடிவம் இருக்கிறது. சிலவற்றை ஏற்றுக் கொண்டாலும்,பல விவசாயிகள் தலையில் அடிப்பதை உணர முடிகிறது.விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் எனச் சொல்லிக் கொண்டு யாருக்கோ ஆதரவாக கொண்டு வந்ததாக தெரிகிறது.

நல்ல பதிவு.நன்றி. ஆனாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நெஞ்சு பொறுக்குதில்லையே !!! wrote:
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது Empty Re: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது

Post by ayyasamy ram Mon Dec 28, 2020 3:03 pm

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது Empty Re: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் சிலாகித்துச் சொல்லுவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அறிவித்தார் மோடி
»  தமிழகம் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: புதிய வேளாண் துறை செயலர் ராமமோகன ராவ்
» டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை - ஜெயலலிதா
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» எவரெஸ்டில் ஏறிய முதல் மனிதர் குறித்து புதிய சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum