ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Poll_c10வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Poll_m10வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு

Go down

வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Empty வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு

Post by ayyasamy ram Sat Nov 07, 2020 4:43 pm

வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Tamil_News_large_2647231
-
வாஷிங்டன் :
உலகம் முழுதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர் தேர்தலில்,
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், வெற்றியின் விளிம்பில்
உள்ளார். தபால் ஓட்டுகளில் பெரும்பாலானவை, பிடனுக்கு ஆதரவாக
பதிவாகியிருந்ததால், டொனால்டு டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த, 3ல் நடந்தது. குடியரசுக் கட்சி
சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார்.
ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77,
போட்டியிட்டார்.

தாமதம்

தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, தொடர்ந்து நடந்து
வருகிறது. மொத்தம் உள்ள, 50 மாகாணங்களில், 46ல், முடிவுகள்
அறிவிக்கப்பட்டு விட்டன. பதிவான ஓட்டுகளின் அடிப்படையில்,
'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணங்களின் வாக்காளர் குழுவினர்
தான், அதிபரை தேர்வு செய்ய முடியும்.

அமெரிக்காவின் அதிபராக வேண்டுமெனில், மொத்தம் உள்ள, 538 எலக்டோரல்
காலேஜ் உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, ஜோ பிடனுக்கு, 253 உறுப்பினர்களின்
ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு, 213 பேரின் ஆதரவும் கிடைத்தது.

ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட நான்கு மாகாணங்களில்,
ஓட்டு எண்ணும் பணி, நேற்றும் தொடர்ந்தது. பெரும்பாலான ஓட்டு கள்,
'இ - மெயில்' வாயிலாக பதிவாகியிருந்ததால், அவற்றை, சரிபார்த்து,
உறுதிப்படுத்தி எண்ண வேண்டியிருந்தது. இதனால், ஓட்டுகள் எண்ணும்
பணியில், மிகுந்த தாமதம் ஏற்பட்டது.

ஜார்ஜியா மாகாணத்தில், டிரம்பை விட, பல ஆயிரம் ஓட்டுக்கள்
பின்தங்கியிருந்த, ஜோ பிடன், நேற்றிரவு நிலவரப்படி, டிரம்பை விட அதிக
ஓட்டுக்களுடன் முன்னேறியிருந்தார்.

இதற்கு, ஜோ பிடனுக்கு ஆதரவாக, தபால் ஓட்டுக்கள் அதிக அளவில்
விழுந்ததே காரணம்.இதனால், ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா,
வடக்கு கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் ஏதாவது ஒன்றில் அதிக
ஓட்டுகள் கிடைத்தாலும் போதும்.

அதிபர் ஆவதற்கு தேவையான, 270 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின்
ஆதரவை, ஜோ பிடன் சுலபமாக பெற்று விடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பென்சில்வேனியா, நவேடா ஆகிய மாகாணங்களிலும்,
டிரம்பை விட, ஜோ பிடன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில்
உள்ளதாக, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, நேற்று இரவு செய்தி வெளியிட்டது.

இதனால், ஜோ பிடன், வெற்றி உறுதியாகி விட்டதாக தகவல் வெளியானது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு Empty Re: வெற்றியின் விளிம்பில் பிடன்: டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு

Post by ayyasamy ram Sat Nov 07, 2020 4:43 pm



தேர்தல் நிலவரம் குறித்து, ஜோ பிடன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஓட்டு எண்ணிக்கை நிலவரம் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ஓட்டுக்களும்
எண்ணி முடிக்கப்பட்ட பின், அதிபர் பதவிக்கு நானும், துணை அதிபர் பதவிக்கு
கமலா ஹாரிசும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவோம் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. அதுவரை, மக்கள் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, நேற்று வெள்ளை மாளிகையில், டிரம்ப் கூறியதாவது:
தபால் ஓட்டுக்களில் மிகப் பெரிய அளவிற்கு தில்லுமுல்லு நடந்து உள்ளது.
ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். ஜனநாயக கட்சி என்ற பெயர் வைத்து,
ஜனநாயகத்தையே திருடுகின்றனர். முக்கியமான இந்த தேர்தலில், ஓட்டுக்களை
திருடி ஊழல் புரிவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

விரக்தி

ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவோம். சட்டப்படி பதிவான
ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, ''இன்றல்ல, என்றுமே நம் ஜனநாயகத்தை,
யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது,'' என, ஜோ பிடன், 'டுவிட்டரில்' பதிலடி
கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க பத்திரிகைகள், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு
நடந்துள்ளதாக, டிரம்ப் பொய் பேசுவதாக கூறியுள்ளன. இரண்டு கட்சிகளின்
பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கும் ஓட்டு
எண்ணிக்கையில் ஊழல் நடப்பதாக டிரம்ப் கூறுவது, அவர் தோல்வியின்
விரக்தியில் இருப்பதை காட்டுவதாக தெரிவித்து உள்ளன.

வழக்கு தள்ளுபடி

ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு
நடப்பதால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என, டிரம்ப் ஆதரவு
வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது,
செல்லாத ஓட்டுக்கள் சேர்க்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

'இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை' என கூறி, மிச்சிகன், ஜார்ஜியா
மாகாண நீதிமன்றங்கள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளன.

120 ஆண்டுகளுக்குப் பின்...

அமெரிக்காவில், 1900ல் நடந்த அதிபர் தேர்தலில், அதிகபட்சமாக,
73.7 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இதற்கு அடுத்தபடியாக,
120 ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய தேர்தலில் தான், மிக அதிகமாக,
66.9 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த, 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், 56 சதவீதம்; 2008ம் ஆண்டில், 58 சதவீத
ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.மாகாணங்களை பொறுத்தவரை, ஜனநாயகக்
கட்சி வெற்றி பெற்ற மின்னசோட்டா, 79.2 சதவீத ஓட்டுக்களுடன் முதலிடத்தை
பிடித்துள்ளது.

குடியரசுக் கட்சி வென்ற, மெய்னி மாகாணம், 78.6 சதவீத ஓட்டுப் பதிவுடன்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு அதிபர் தேர்தலில் ஓட்டளிக்கத்
தகுதியான, 23.90 கோடி பேரில், 16 கோடி பேர், ஓட்டு போட்டுள்ளனர்.
-
----------------------------
நன்றி-தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum