ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன்

Go down

'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன் Empty 'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன்

Post by ayyasamy ram Tue Nov 03, 2020 7:24 pm

'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன் 597816
-
என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம்.
முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்
ஓய்வு பெறுகிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள்
வீரர் ஷேன் வாட்ஸன் இன்று அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெளியேறியவுடன்
அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன்
ஓய்வு அறிவிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

ஆஸ்திரேலியாவுக்கு வாட்ஸன் சென்றபின் அறிவிப்பார்
என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ மூலம் தனது
ஓய்வை வாட்ஸன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வாட்ஸன் லீக்
போட்டிகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் விளையாடி
வந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஐபிஎல் மட்டுமின்றி
ஆஸி.யில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஸனின்
ஆட்டத்தைக் காண முடியாது.

டி20 ஸ்டார்ஸ் எனும் யூடியூப் சேனலில் வாட்ஸன் அளித்த
பேட்டியில், “நான் 5 வயதில் டெஸ்ட் போட்டியைக் காணும்
போது, என் அம்மாவிடம் நான் ஆஸ்திரேலிய அணிக்காக
விளையாட வேண்டும் என்று கூறினேன்.
அது என் கனவாக இருந்தது.

ஆனால், இப்போது அதிகாரபூர்வமாக அனைத்துவிதமான
கிரிக்கெட்டிலிருந்தும் நான் விடைபெறுகிறேன். என்னுடைய
கனவுகளுடன் வாழ்ந்ததால் நான் மிகப்பெரிய
அதிர்ஷ்டக்காரன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன் Empty Re: 'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன்

Post by ayyasamy ram Tue Nov 03, 2020 7:24 pm

'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன் 1604393289756
-


கடந்த மாதம் 29-ம் தேதி கொல்கத்தா, சிஎஸ்கே
அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் முடிந்தவுடனே
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று
முடிவு எடுத்துவிட்டேன்.

இப்போதுதான் சரியான நேரம் என உணர்கிறேன்.
நான் மிகவும் நேசிக்கும் சிஎஸ்கே அணியுடன் கடைசியாக
கிரிக்கெட் விளையாடினேன். கடந்த 3 ஆண்டுகளாக என்
மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.

பல காயங்கள், ஓய்வுகள் பின்னடைவுகளுக்குப் பின்,
39 வயதில் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிக்கிறேன்.
இந்த சகாப்தம் அடுத்துவரும் காலங்களில் மிகவும் கடினமாக
இருக்கும். ஆனாலும் முயல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் இடம்
பெற்று வரும் வாட்ஸன் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல
முக்கியக் காரணமாக அமைந்தார்.

2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு
எதிராக சதம் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார்.
2019 ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக இறுதிப்போட்டி
வரை சிஎஸ்கே அணி நகர வாட்ஸன் பங்களிப்பு முக்கியக்
காரணமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களும்,
2019இல் 398 ரன்களும் வாட்ஸன் சேர்த்தார்.
ஆனால், 2020 ஆம் ஆண்டு சீஸன் சிஎஸ்கே அணிக்கே சோகமாக
முடிந்த நிலையில் அதில் 11 இன்னிங்ஸில் 299 ரன்கள் மட்டுமே
வாட்ஸனால் சேர்க்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் சிறந்த
ஆல்ரவுண்டராக வாட்ஸன் வலம் வந்துள்ளார்.
இதுவரை 145 போட்டிகளில் 3,874 ரன்கள் சேர்த்துள்ள வாட்ஸன்
பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ்,
ஆர்சிபி அணிகளில் விளையாடியுள்ளார். இதில் சிஎஸ்கே
அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் தொடர் நாயகன்
விருதையும் வாட்ஸன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷாஹித் அப்ரிதி ஓய்வு
»  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : மகேந்திர சிங் தோனி அறிவிப்பு
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன்: முதல்வர் அறிவித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum