ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப் பேச்சு

Go down

வலைப் பேச்சு Empty வலைப் பேச்சு

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 8:13 am

வலைப் பேச்சு 22
-
இறையருள் பெற்ற செவ்வியல் பாடகர்கள் தனி ரகம்.
இசைக்கலையில் தேர்ச்சி பெற்றபின் உத்தியையும்
உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து திறமைக்கு
நியாயம் செய்பவர்கள் அவர்கள்.  

ஆனால், பின்னணிப் பாடகர்கள் வேறு ரகம். செவ்வியல்
இசைக்குரிய அதே வீரியம் அங்கு தேவைப்படுகிறது.
அதே சமயம் வேறொருவராக மாறிக் கூடுபாய்ந்தவர்களின்
கதையைச் சொல்லும் சவாலும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு நடிகனைப் போல் நீங்கள் காதல் செய்ய வேண்டும்,
சல்லாபிக்க வேண்டும், சிரிக்க வேண்டும், அழ வேண்டும்,
சண்டை போட வேண்டும், வெறுக்க வேண்டும், வேறு எந்த
உணர்ச்சியையும் ஒரு பொத்தானை அழுத்தினால்
நடப்பதைப் போல வெளிப்படுத்த வேண்டும்.

சில சமயம் அந்த உணர்ச்சிகளை மிகைப்படுத்த வேண்டும்.
சில சமயம் மிக நுட்பமாகக் குறைக்க வேண்டும்.
இது அத்தனையையும் கண்ணுக்குத் தெரியாத குரல் என்ற
ஒற்றை ஊடகத்தை மட்டுமே கொண்டு செய்ய வேண்டும்!

இந்தச் சகலகலா வல்லமையின் மொத்தப் பிரதிநிதியாய்
முதலும் கடைசியுமாய் எனக்குத் தோன்றுபவர்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே.
-
-----------------------Vignesh Subramanian -
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப் பேச்சு Empty Re: வலைப் பேச்சு

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 8:29 am

வலைப் பேச்சு 22b

எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று
என்பது விளங்கிவிட்டது.

என்னதான் இசை மயக்கம் இருப்பினும் இது அதனையும்
தாண்டிய அன்பாகத் தெரிகிறதே. வெறும் இசைத்
துய்ப்பின்பாற்பட்ட அன்பு என்று இதனைச் சுருக்க இயலாதே.
அனைத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பு இருக்க வேண்டுமே.
அது என்ன?

இப்பிறவியில் நம் செவிபட்டு உணர்வில் தைத்த சொற்களைத்
தொடர்ந்து கூறிக்கொண்டே (பாடிக்கொண்டே) இருந்தவர்களில்
அவருக்கே முதலிடம்.

தாய் தந்தை உள்ளிட்ட பிற உறவுகள்கூட ஒரு கட்டத்தில்
நம்முடன் சொல்லாடுவதைக் குறைத்துக் கொள்கின்றனர்.
அவர் எப்போதும் குறைத்துக் கொள்ளவில்லை. இவ்வாழ்வில்
மற்றவர்கள் நம்மிடம் பல பத்தாயிரம் சொற்களால் உறவாடினர்
என்றால் எஸ்பிபி நம்மோடு அதனைவிடவும் மிகுதியான
சொற்களால் உள்ளம் புகுந்தார்.

அது எண்ணிக்கையாலும் மிகுதி; எண்ணத்தாலும் நெருக்கம்.
அவர் நம் காலத்தின் குரல், நம் சொற்களின் தலைவன்,
உடனிருந்த தொடர்ச்சியான தோழமை, செவிகளை நிரப்பிய
சொற்றுளிகளால் ஆன மொழியூற்று.
-
--------------------Magudeswaran Govindarajan -
வலைப்பேச்சு- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப் பேச்சு Empty Re: வலைப் பேச்சு

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 8:29 am






எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என்
காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ
தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை.

ஆனால், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள்
தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிங்கள
சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத்
தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான்.

எம்ஜிஆர் ரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி.
எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது.

‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கி வைத்த வாத்தியார்
‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு
நவரச நாடகம்’, ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என
ஒவ்வொரு படத்திலும் எஸ்.பி.பி.யைத் தன்னுடனேயே
அழைத்து வந்தார்.

நடிகர் திலகத்துக்கு எஸ்.பி.பி. பாடியது மட்டும் குறைச்சலா
என்ன! ‘பொட்டு வைத்த முகமோ’ பாடி ஐம்பது
வருடமிருக்குமா? இன்றுவரை பாரிஸில் நடக்கும் எந்த
இலக்கியக் கூட்டத்தின் பின்னிரவும் இந்தப் பாடலைப்
பாடாமல் முடிவதில்லையே.

‘மணியோசை கேட்டு எழுந்து’ என்றொரு பாடல். இருமிக்
கொண்டே பாடுவார். என் பள்ளிக் காலத்தில் அந்தப் பாடல்
மிகப் பிரபலம். கேட்டு பித்துப் பிடித்திருந்தோம்.

பொடியன்கள் லவ் லெட்டரில் கூட இந்தப் பாடலை
எழுதுவார்கள். இசைஞானியோடு அவர் சேர்ந்த
பாடல்களைப் பற்றி நான் என்ன சொல்வது!
எதைச் சொல்வது! ‘அந்தி மழை பொழிகிறது’ கேட்ட
போதுதானே காதலிக்கவே ஆசை வந்தது.

டி.ராஜேந்தர் இசையில் அவர் பாடிய பாடல்கள் அப்போது
எங்கள் சுவாசமல்லவா. ‘வசந்தம் பாடி வர’ என மயங்கியும்,
‘நானும் உந்தன் உறவை’ எனக் கலங்கியும் திரிந்தோமே.
‘வாசமில்லா மலரிது’வை தொடங்கும் போது எஸ்.பி.பி.
சிரிக்கும் கசப்பான சிரிப்பே ‘ஒருதலைராகம்’ படத்தின்
மொத்தக் கதையையும் சொல்லிவிடுமே!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அவர் பாடிய
‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்கு தேசிய விருது என்ற
செய்தி வெளியாகியபோது அவர் பாரிஸில் பாடிக்
கொண்டிருந்தார். ‘அதாண்டா இதாண்டா’ பாடலை அவர்
முழங்கிய போது பார்வையாளர் வரிசையிலிருந்த சிலர்
மீது அருள் வந்து ரஜினிபோல கைகளை விசுக்கிக்
கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கி
விட்டார்கள்.

அப்போது பாட்டின் நடையை எஸ்.பி.பி. மாற்றிவிட்டார்.
பாரிஸ் ரஜினிகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அவர் பாடினார்.
அன்று என்னவொரு கொண்டாட்டம்! நான்கு வருடங்களுக்கு
முன்பு கோவா விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

எதிர்வரிசையில் பாடும் நிலா நின்றிருந்தார். அவரிடம்
போய் பேசவெல்லாம் விரும்பவில்லை. அவரைப் பார்த்துக்
கொண்டிருந்தாலே போதுமானது என்பதால் பார்த்துக்
கொண்டேயிருந்தேன்.

ஒரு சிறுமி அவரை நெருங்கி அவரது காலைத் தொட்டு
ஆசீர்வாதம் பெற்றாள். நான் தூர நின்றே மனதால்
வணங்கினேன். அது என் பண்பாட்டை வணங்குதல்
போன்றது.

இன்று லக்ஸம்பேர்க்கிலிருந்து ரயிலில் பாரிஸுக்குத்
திரும்பிக்கொண்டிருந்த போது அவரது மறைவுச் செய்தி
கிட்டியது. கிட்டத்தட்ட 12 மணி நேரங்கள் கடந்திருக்கும்
இவ்வேளையில் என்னால் எழுதாமல் இதைக் கடக்க
முடியாது என்றே தோன்றுகிறது.

ளனெனில் நான் இழந்திருப்பது ஒரு வாழ்க்கை முறையை.
ஒரு பண்பாட்டை.

அஞ்சலி! அஞ்சலி! அஞ்சலி!
-----------------
Shoba Sakthi -
வலைப்பேச்சு- குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப் பேச்சு Empty Re: வலைப் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum