ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

Go down

மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ ! Empty மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

Post by தாமு Sat Jan 09, 2010 4:50 am

சந்தி உற்சாகமாக இருந்தாள். மாலை நேர சன்னலின் வழியே வழக்கமான சூரியன் இன்று ரொம்பவே அழகாய்த் தெரிந்தான். காரணம் அருகில் கணவன் ரமேஷ்.

வசந்திக்கு இது இரண்டாவது ஹனிமூன். முதல் கணவன் சங்கருடன் ஆறு மாதங்கள் படாத பாடுபட்டு இப்போது தான் விடுதலை. எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதற்கெடுத்தாலும் சண்டை என கவலையில் போனது அவளுடைய முதல் வாழ்க்கை. விவாகரத்து வாங்கி எல்லாவற்றையும் முடித்து வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இப்போது புதிய வாழ்க்கை, புதிய கனவுகள் என அவளுடைய சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன.

திடீரென வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. முதல் கணவனிடமிருந்து. தான் தவறு செய்தது போல மறுமுனையில் சங்கர் கண்ணீர் விட்டான். இவளைப் பிரிந்து வாழ முடியாது என புலம்பினான். அவனுடைய குரல் அவளை அசைத்தது. அவளுடைய உற்சாகமெல்லாம் வடிந்து போக சட்டென அமைதியானாள்.

“யார் போன்ல” ரமேஷ் கேட்டான்.
“அ..அவர் தான்… சங்கர்” குரல் தடுமாறியது, கண்கள் கலங்கின.

“ஓஹோ… பழைய புருஷன் ஞாபகம் அழ வைக்குதோ ? அப்புறம் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டே” ரமேஷின் குரலில் கோபம் குதித்தது.

அந்த ரம்மியமான மாலைப் பொழுது வசந்தியின் புதிய வாழ்க்கையில் ஒரு கீறலாய் விழுந்து விட்டது. ரமேஷின் தேவையற்ற சந்தேகப் பார்வையும் வசந்தியின் மீது விழ அவளுடைய புதிய திருமண வாழ்க்கையும் நொண்டியடிக்க ஆரம்பித்தது.

“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதெல்லாம் ரொம்பவே பழசாகிப் போச்சு. “உள்ளார்ந்த நேசம் இல்லையேல் டைவர்ஸ்” என்பது தான் இப்போதைய வாழ்க்கை.

மண முறிவுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒரு கோணத்தில் மண முறிவுகள் பலவீனமான குடும்ப உறவின் வெளிப்பாடுகள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், அகந்தை களைதல் எனும் பல விஷயங்களில் நிகழும் தோல்வி. அர்ப்பணித்தல் இல்லாததன் அடையாளம்.

இன்னொரு கோணத்தில் மணமுறிவுகள் தைரியத்தின் சின்னங்களாகவும் பார்க்கலாம். இது ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள். சமூகத்தின் பல துறைகளில் பட்டையைக் கிளப்பும் பெண்கள் வீடுகளில் அங்கீகாரம் கிடைக்காவிடில் என்ன செய்வது ?. குடும்பம் என்பது முதலாளி தொழிலாளி சமாச்சாரமல்ல. கணவன் மனைவி உறவு என்பது சர்வாதிகார – அடிமை உறவு நிலையுமல்ல. எனவே உண்மையான புரிதல் இல்லையா ? பிரிதலே நல்லது என பெண்களும் பேச ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் சமூகம் தனது வழக்கமான புராணத்தைத் தான் பாடிக் கொண்டிருக்கிறது. ரொம்பவே நாசூக்காக, ஹைடெக் வாசனையுடன். “பொண்ணு சரியில்லே” என்பது தான் பெரும்பாலான டைவர்ஸ்களின் முனகல்கள். இதில் எவ்வளவு சதவீதம் உண்மை என்பது கணவர்களின் மனசாட்சி சொல்லும். சமூகத்தின் நரம்புகளில் இன்னும் ஆணாதிக்க ரத்தம் தான் வேகமாகப் பாய்கிறது என்பதன் உதாரணம் இது. ஆண்களின் இயலாமையை மறைக்க பெண்களின் நடத்தை மேல் ஒரு சந்தேகத்தைப் போட்டு விட்டால் போதுமே !

சிலர் திருட்டுக் காதலுக்காக அழகான குடும்ப வாழ்க்கையை சிதைக்க நினைப்பார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். மறு மணங்கள் மரணங்களினாலோ, சரி செய்ய முடியாத சிக்கல்களாலோ நிகழலாம். ஆனால் திருட்டுத் தனமான ஆசைகளுக்காக சிதைவது அவலம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் இத்தகைய சூழல் ஏற்பட்டால் அது குழந்தைகளின் அமைதியான வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடும். கூடவே அந்த குற்ற உணர்வு உங்களையும் துரத்தித் துரத்தி நிம்மதியற்ற எல்லைக்குள் தள்ளி விடும்.

மணமுறிவு எனும் முடிவை யாரும் ஒரு நிமிடத்தில் எடுத்து விடுவதில்லை. ஆற அமர யோசித்து வேறு வழியில்லையேல் மட்டுமே எடுக்கின்றனர். ஆனால் அதன் பின் நடக்கும் இரண்டாவது திருமணங்கள் பல வேளைகளில் பெண்களை ரொம்பவே நிலைகுலைய வைத்து விடுகிறது. ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள், சிக்கல்களுக்கிடையே காலம் தள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடுகிறது. அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். மறுமணம் ரொம்ப நல்ல விஷயம். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுத்தபின் பெண்கள் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு ரொம்பவே அவசியம். மண முறிவு தரும் மனக் காயங்களும், சமூக சிக்கல்களும் அதீத கனம் வாய்ந்தவை.


இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.


  1. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் மிச்சம் மீதிகளை செட்டில் செய்வது தான். உங்கள் கணவரைப் பிரிந்து வாழ முடியுமா என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் உறுத்தாமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். மன ரீதியாக முடிவெடுத்துவிட்டீர்களெனில் பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது சட்ட ரீதியான, குடும்ப ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளையும் நிகழ்த்தி விடுங்கள். உங்கள் புதிய வாழ்க்கை “ரொம்பப் புதிதாய்” இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.



  1. எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்” எனும் சிந்தனையைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். கடந்த திருமண பந்தம் எப்படிச் சென்றது என்பதை மிக மிக அமைதியாக ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் தரப்பில் என்னென்ன பிழைகள் இருந்தன என்பதை கொஞ்சமும் தயவு தாட்சண்யமில்லாமல், பாரபட்சமில்லாமல் அலசுங்கள். அந்த பிழைகளை அடுத்த முறை செய்யப் போவதில்லை எனும் முடிவை எடுங்கள். இது மிகவும் முக்கியம்.



  1. “என்னம்மா இப்படி ஆயிடுச்சே” என குசலம் விசாரிக்க வரும் பழைய உறவின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விலக்கி விடுங்கள். நீங்கள் புதைத்துப் போட்டவற்றை தோண்டி எடுத்து வேடிக்கை காட்ட பலரும் விரும்புவார்கள். உங்கள் புதிய வாழ்க்கையின் தோல்வி பழைய உறவுகளுக்கு ரொம்பவே உங்கள் பழைய சிந்தனைகளையும், வலிகளையும் கிளறும் எந்த உறவையும் அனுமதிக்காதீர்கள்.



  1. முதல் திருமணத்தில் நீங்கள் இழந்ததாய் நினைத்ததைப் பெறப் போகும் வாழ்க்கை தான் இரண்டாவது திருமணம். “இருந்ததும் போச்சே” எனும் நிலை வரவே கூடாது என்பதில் கவனம் தேவை. அதற்காக உங்கள் வருங்காலக் கணவரைப் பற்றி முழுமையாய் கொள்ளுங்கள். அவசரம் கூடவே கூடாது. அவருடைய கடந்த காலம், குடும்பம், சூழல், சிந்தனைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது என்று சற்றே சந்தேகம் எழுந்தாலும் விட்டு விடுங்கள். முழுமையான நம்பிக்கை, சந்தேகமற்ற மனம் இரண்டும் மிக மிக முக்கியம்.



  1. உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய விருப்பங்கள், செயல்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், உரையாடல் வகைகள், மதம், குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பலவற்றைக் குறித்த தெளிவும் ரொம்ப அவசியம்.திருமணம் ஏன் தோல்வியடைந்தது. எவையெல்லாம் உங்களைக் காயப்படுத்தும், எவையெல்லாம் உங்களை மகிழ்விக்கும், எவையெல்லாம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்பதையெல்லாம் பேசுங்கள். திருமணத்துக்குப் பின் விரும்பத் தகாத ரகசியங்கள் வெளியாவது குடும்ப உறவைப் பாதிக்கும்.



  1. என்னதான் உலகம் பற்றித் தெரிந்த அறிவுள்ளவராய் இருந்தாலும் ஒரு கவுன்சிலிங் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சிந்தனைகள் சரிதானா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேனும் இது உதவும். எனவே நல்ல மேரேஜ் கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டு தெளிவு பெறுங்கள். நீங்களும் உங்கள் வருங்காலக் கணவருமாக திருமணத்துக்கு முந்தைய “பிரீ மேரிடல்” கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டால் சூப்பர்.



  1. புதிய திருமணம் செய்து கொண்டால் ஒரு புதிய இடத்துக்குப் போங்கள். புது வீடு, புதிய அக்கம் பக்கம், புதிய சூழல் என அமைவது ரொம்ப நல்லது. பழைய சிந்தனைகளும், கசப்புகளும் உங்களை கலவரப்படுத்தாமல் இருக்க இது உதவும்.




  1. அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். புதிய பொழுது போக்குகள், புதிய பழக்கங்கள் என உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் உற்சாகமற்றவராகவோ, குற்ற உணர்வுடையவராகவோ உங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.



  1. சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால் சிந்தியுங்கள். அவை உங்களால் முடியும் என்றால் ஆனந்தமாய் ஒத்துக் கொள்ளுங்கள். முடியாதவற்றை முடியும் என்று சொல்லி பிரச்சினையில் உழல வேண்டாம்.

10. முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தைகளின் நலனின் அக்கறை கொள்பவர் கணவராக வருவது முக்கியம். கணவரின் குடும்பத்தினரின் மனநிலையும் இதில் ரொம்ப அவசியம். பழைய குடும்ப வாழ்க்கையில் குழந்தையின் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம். உங்களுடைய திருமண தேடுதல்கள் குழந்தைகளின் மனநிலையையோ, எதிர்காலத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

11. மறுமணங்களில் உள்ள ஒரு சிக்கல் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் எழும். குழந்தைகளுக்கா கணவனுக்கா ? மனைவி தனக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமென்பது கணவனின் விருப்பமாய் இருக்கும். பிள்ளைகளோ தங்களுக்கே அம்மா முக்கியத்துவம் தரவேண்டும் என ஆசைப்படுவார்கள். இதில் அழகான பேலன்ஸ் செய்ய முடிந்தால் வாழ்க்கை நலமாகும்.

12. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த செய்தி எல்லாம் கொஞ்சகாலம் தான். அப்புறம் போரடித்துப் போய் அந்த வாய்களெல்லாம் புதுசாக வேறு அவலை மெல்லக் கிளம்பிவிடும்.
இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம் என்கின்றன சர்வதேசப் புள்ளி விவரங்கள். எனவே இரட்டைக் கவனம் ரொம்பவே அவசியம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum