ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,

Go down

சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க., Empty சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,

Post by ayyasamy ram Sun Jun 28, 2020 5:52 am


கோவை :
வரும், 2021, மே மாதம் நடைபெற உள்ள,தமிழக சட்டசபை தேர்தலுக்கு,
அ.தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது.'கொரோனா'
வைரஸ் பரவல் தடுப்பு பணியை ஆய்வு செய்யும் போர்வையில்,
மாவட்டம் வாரியாக செல்ல துவங்கியுள்ள, முதல்வர் பழனிசாமி,
மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை
வேகப்படுத்தி வருகிறார்.

ஏனெனில், தற்போதைய அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2021,
மே மாதம் முடிகிறது. மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்பதால்,
இன்னும், 10 மாதங்களே இருக்கின்றன.

2021, ஜன.,யில், புதிய வாக்காளர் பட்டியல் தயாராகி விடும்.
தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியிட்டால், பிப்ரவரியில்
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

அதன் பின், எவ்வித அறிவிப்பும் வெளியிட முடியாது.
அதிகாரிகளும், தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து
விடுவர்.அதன் காரணமாக, அ.தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டுள்ள
மிகப்பெரிய திட்டங்களை, வரும் டிச.,க்குள் துவக்கி, அனைத்து
தரப்பு மக்களையும் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

அதற்காக, 'கொரோனா' வைரஸ் தடுப்புப் பணிகளை ஆய்வு
செய்வதுபோல், மாவட்டம் வாரியாக, ஆய்வை துவக்கியிருக்கிறார்,
முதல்வர் பழனிசாமி.சமீபத்தில் கோவையிலும், திருச்சியிலும்
,'கொரோனா' தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர்,
விவசாயிகள் சங்க பிரமுகர்களை அழைத்து, வேளாண்மை சிறக்க,
தமிழக அரசு செய்துள்ள பணிகள், இனி செயல்படுத்த உள்ள
திட்டங்களை பட்டியலிட்டார்.

நொய்யல் ஆறு நீர் வழித்தடங்கள், குளங்களை சீரமைக்க,
230 கோடி ரூபாய் ஒதுக்கி, பணியை துவக்கியிருப்பதை,
தவறாமல் சுட்டிக் காட்டினார்.மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு,
கரூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அவிநாசி -
அத்திக்கடவு திட்டம், 2021, டிசம்பரில் முடியும் என உறுதி கூறிய
அவர், விடுபட்ட பகுதிகளை சேர்த்து, இரண்டாவது திட்டம்
செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருவதாக, உறுதியளித்தார்.

இது, விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டல விவசாயிகளை, தங்கள் பக்கம் ஈர்க்க, இவ்விரு
'மெகா' திட்டங்களும் போதுமென நினைக்கிறார்.

அதன் பின், மகளிர் சுய உதவி குழுவினரை அழைத்து,
தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். கடைசியாக,
தொழில்துறையினரை சந்தித்தார். சிறு, குறு நிறுவனங்களுக்கு
வழங்கிய கடனுதவி, மூன்று மாதம் மின் கட்டணம் தள்ளுபடி
உள்ளிட்டவற்றை விளக்கிய முதல்வர், தொழில்துறையினர்
கோரிக்கையை பொறுமையாக கேட்டறிந்தார்.

முன்னதாக, கோவை மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு
திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு, துவக்கி வைத்தார். தற்போது
நடந்து வரும் பணிகளை, பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேர்தலுக்கு அச்சாரமாக, இப்போதே பணிகளை வேகப்படுத்தி,
பிள்ளையார் சுழி இட்டுச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.,வினரிடம் கேட்டபோது,
'கொரோனா தடுப்புப் பணி இன்னும் சில மாதங்கள் தொடரும்
போலிருக்கிறது. 2021 துவங்கி விட்டால், கட்சியை பலப்படுத்தி,
தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதற்கு முன், அரசின் சாதனை
திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம்;
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன செய்திருக்கிறோம்
என்பதை, மக்களிடம் கொண்டு செல்ல, இப்போதே பணிகளை
வேகப்படுத்தி வருகிறார். ஆட்சிக்காலம் முடிவதற்குள் பல்வேறு
பணிகள் முடிவுற்று, பயன்பாட்டுக்கு வந்து விடும்.

இது, மக்கள் மத்தியில், தமிழக அரசுக்கு நற்பெயரை பெற்றுத்
தரும் என, முதல்வர் நம்புகிறார். தேர்தல் சமயத்தில், மக்களுக்கு
எடுத்துச் சொல்லவும் வாய்ப்பாக இருக்குமென நினைக்கிறார்'
என்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum