ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.

3 posters

Go down

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Empty தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.

Post by தண்டாயுதபாணி Fri Jan 08, 2010 1:19 pm

ஐ.நா.:
சிங்கள ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும்,
கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது
போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே என்று ஐ.நா.
தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்தது. ஹிட்லர் காலத்தை
விட மிக மோசமான கொடூரமான இந்த இனப்படுகொலை அனைவரின் உள்ளங்களையும்
பதறடித்தது.

இந்த நிலையி்ல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, அதன்
உண்மைத்தன்மை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த பிலிப்
ஆல்ஸ்டன் விசாரணை நடத்தி வந்தார். பிலிப் ஆல்ஸ்டன், ஐ.நா. மனித உரிமைக்
கவுன்சிலின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், தண்டனைகள் குறித்த
விசாரணையாளராக உள்ளார். தற்போது தனது விசாரணையை முடித்துள்ள ஆல்ஸ்ட்ன்
அறிக்கையை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளார். அதை ஐ.நா. இன்று வெளியிடுகிறது.

தனது விசாரணை அறிக்கை குறித்து ஆல்ஸ்டன் கூறுகையில்,

தமிழர்களை
இலங்கை வீரர்கள் சுட்டுக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே,
நம்பகமானதே. உடனடியாக இதுகுறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட
வேண்டும். இனியும் இதில் காலதாமதம் இருக்கக் கூடாது.

யார் இந்த
விசாரணையை நடத்துவது என்பது குறித்து நான் கூற முடியாது. ஆனால் நிச்சயம்
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் ஆல்ஸ்டன்.

ஈழப்போரின்
இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை
செய்யப்பட்டனர். கொத்து வெடிகுண்டுகளை வீசியும், புல்டோசர்களை ஏற்றியும்
தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஐ.நா.வின் கணிப்புப் படி கடைசிக் கட்டத்தில் 7000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்
போரின்போது இலங்கை ராணுவம் செய்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள்
குறித்தும் செய்திகள் வந்தன. ஆனால் ஐ.நா. உள்பட எந்த உலக அமைப்பும்
இதுகுறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை.

மேலும், சரணடைய வெள்ளைக்
கொடிகளுடன் வந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன்,
புலித்தேவன் உள்ளிட்டோரை மண்டியிட வைத்து இரக்கமின்றி கொன்று குவித்ததாக
செய்திகள் வந்தன. இதற்கு உத்தரவிட்டவர் ராஜபக்சேவின் தம்பியான
கோத்தபயாதான் என்றும் ராணுவத் தளபதியாக இருந்தவரும், இப்போது அதிபர்
பதவிக்காக போட்டியிடுபவருமான பொன்சேகா கூறியதால் மேலும் பரபரப்பு
ஏற்பட்டது.

இந்த சமயத்தில்தான் கடந்த ஆண்டு சானல் 4 டிவியில்
தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாகக் கொல்லும் காட்சிகள் அடங்கிய
வீடியோ வெளியாகியது. இது இலங்கை ராணுவத்தின் கொடூரச் செயல்களின் ஒரு
துளியாக கருதப்படுகிறது.

தனது விசாரணை குறித்து ஆல்ஸ்டன் மேலும்
கூறுகையில், 3 தடயவியல் நிபுணர்களின் உழைப்பின் மூலம் கொடூரக் கொலைகள்
அடங்கிய வீடியோ உண்மையானதே என்பதை கண்டறிந்துள்ளோம்.

இந்த வீடியோ
பொய்யானது, திரிக்கப்பட்டது, புனையப்பட்டது என்று இலங்கைத் தரப்பில்
கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்ன அனைத்துமே உண்மை இல்லை என்பதை எங்களது
விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

இந்த வீடியோ
கடந்த 2009, ஜனவரி மாதம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா மூலம்
இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளும், அதில் இடம்
பெறும் துப்பாக்கிகளும் உண்மையானவையே. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 3
தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்துள்ளனர்.

இந்த வீடியோவில் மிக நெருக்கத்தில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் உண்மையானதே. அதில் எந்த திரிபும் இல்லை.

இருப்பினும்
வீடியோவில் உள்ள சில காட்சிகள் குறித்து புரியவில்லை. ஆனால் இதை வைத்து
இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள
காட்சிகள் அனைத்தும் உண்மையானவையே என்றார்.

ஐ.நா. செய்தித்
தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி இதுகுறித்துக் கூறுகையில், நிச்சயம்
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன்.

சுயேச்சையான,
சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகளை நாம் கண்டறிய
முடியும். மனித உரிமை மீறல்கள், சர்வதே சட்டத்தை மீறிய செயல்களில்
ஈடுபட்டவர்களை கண்டறிந்து நிச்சயம் தண்டிக்க வேண்டும்.

தற்போது இந்த வீடியோ உண்மை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியது அவசியம் என்றார்.

ஆனால்
கடந்த ஆண்டு மே மாதமே ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, போரின் கடைசிக்
கட்டத்தின்போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு
மற்றும் ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது இலங்கை அரசு
பாய்ந்தது. இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே பேசிக் கொண்டிருந்தது.

மனித
உரிமைக் கவுன்சிலில் இருந்த பல நாடுகளும் கூட இலங்கைக்கு சாதகமாகவே
செயல்பட்டன. யாரும் நவி பிள்ளையின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. சபையும் கூட இதை பெரிதுபடுத்தாமல்
அப்படியே அமுக்கி விட்டது.

இந்த நிலையில் தற்போது சேனல் 4 டிவி
வெளியிட்ட வீடியோ உண்மையானதே என்று தெரிய வந்துள்ளதால் இலங்கைக்கு பெரும்
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐ.நா. சபையும் போர்க்குற்ற
விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஆனால் பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.


தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Empty Re: தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.

Post by Tamilzhan Fri Jan 08, 2010 1:31 pm

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. 250809%20001

ஐ.நா. சபை இப்போ உணர்ந்து என்னா புன்னியம் இவர்களை காபாற்ற முடியவில்லையே...? தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Empty Re: தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.

Post by kirupairajah Fri Jan 08, 2010 3:29 pm

தண்டாயுதபாணி wrote:
ஆனால் பான் கி மூனின் தலைமையிலான ஐ.நா. இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.

நிட்சயம் இவன் செய்ய மாட்டான்! இவன் இந்தியாவின் கைகூலி!


தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா. Empty Re: தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.

Post by kirupairajah Fri Jan 08, 2010 7:40 pm