ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது!

Go down

சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Empty சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது!

Post by தண்டாயுதபாணி Fri Jan 08, 2010 8:58 am

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள் நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள் நடுவர் மன்றம், ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது அல்ல என்றாலும், இதன் விசாரணையும் கண்டுபிடிப்புக்களுக்கும் பன்னாட்டு அளவில் மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிவற்றை விசாரிக்கப்போகும் இந்த நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் அமர்கிறார்.

சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தினை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும், புகைப்படங்களையும் அளிப்பது மட்டுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நேரில் கண்ட பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபெத், மேற்கு சஹாரா, அர்ஜெண்டினா, எரித்திரியா, பிலப்பைன்ஸ், எல் சல்வடார், ஆஃப்கானிஸ்தான், கிழக்கு திமோர், ஜைர், குவாட்டமாலா, ஆர்மீ‌னிய இனப் படுகொலை, நிகராகுவாவில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல பன்னாட்டுச் சட்ட அத்து மீறல்களை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குரல் கொடுத்தாலும் அதற்கு சிறிலங்கா இணங்கவில்லை என்று கூறி, தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வும், இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளும் மறைக்கும் சாட்சிகளற்ற அந்தப் போரில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை ஆதாரத்துடன் கொண்டு வரும் இந்த முயற்சி மனித உரிமை ஆர்வலர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போர் நடந்த வன்னிப் பகுதியில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நிகழும் போது சிறிலங்கப் படைகளோடு இருந்த ஊடகவியலாளர்கள் தவிர, மற்றபடி நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் தற்போது வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படைகளோடு இருந்த அந்த ஊடகங்களும் சிறிலங்க அரசிற்கு சாதகமாக உண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலையை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டுவரும் பெரும் முயற்சி இதுவாகும்.

டப்ளின் நகரில் நடக்கவுள்ள நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தில் நீதிபதிகளாக அமரவுள்ளவர்க‌ள் பற்றிய விவரங்கள்:

1) ஃபிரான்கோயிஸ் ஹூடார்ட்: அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ விருதளிக்கப்பட்டவர். பொருளாதார பின்னடைவிற்கான ஐ.நா. குழவின் தலைவர், பெல்ஜியம் நாட்டின் லூவைன் பல்கலையின் முன்னாள் பேராசிரியர், உலக சமூக மன்றத்தின் தலைவர்.

2) இராஜேந்திர சச்சார்: டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை தொடர்பான விவரம் அறிய பிரதமரால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர்.

3) நாவல் அல் சாதாவி: எகிப்தின் மனித உரிமைப் போராளி, மருத்துவர், எழுத்தாளர், சமூக சூழல்கள் குறித்து எழுதியமைக்காக எகிப்தில் சிறைப்படுத்தப்பட்டவர்.

4) சுலாக் சிவராக்சா: தாய்லாந்தைச் சேர்ந்த புத்த மத பிரசாகர், எழுத்தாளர், சரியான வாழக்கைப் பாதை என்மு அமைப்பினால் மாற்று நோபல் பரிசு வழங்கப்பட்டவர்.

5) டெனிஸ் ஹாலிடே: ஐ.நா. அவையி்ன் முன்னாள் உதவி செயலராகப் பணியாற்றியவர்.

6) கியானி டாக்னோனி: நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் தலைமைப் பொதுச் செயலர், மிலன்.

7) டேனியல் பியர்ஸ்டீன்: அர்ஜெண்டினாவின் தலைநகரிலுள்ள பியனாஸ் அயர்ஸ் பல்கலையில் இனப் படுகொலை தொடர்பான ஆய்வு மையத்தின் இயக்குனர்.

8) மேரி லாலர்: டப்ளினில் செயல்பட்டுவரும் மனித உரிமை காவலர்களுக்கான பன்னாட்டு அமைப்பின் இயக்குனர்.

9) ஆய்ஸ்டின் டிவெட்டர்: பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பன்னாட்டு நடுவர் மன்ற உறுப்பினர், பன்னாட்டுச் சட்ட நிபுணர்.

10) எரன் கஸ்கின்: இஸ்தான்புல் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைச் சங்கத்தின் துணைத் தலைவர், ஈராக்கின் குர்தீஸ் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர், தற்போது துருக்கியில் செயல்பட்டு வருகிறார். துருக்கி சிறையில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை வெளிக் கொணர்ந்தவர்.

11) ஃபிரான்செஸ்கோ மார்டோன்: இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்., சுற்றுச் சூழல் போராளி.
நன்றி வெப்துனியா


சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum