ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்…

Go down

அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்… Empty அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்…

Post by ayyasamy ram Tue Jun 09, 2020 7:04 am

அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்… Vikatan%2F2020-06%2Fbc7234f9-9327-4318-9fa0-aeabc78085c2%2F51_h
-
எனக்கு வேண்டியது ராம தரிசனமே!’’ என்றார் துளசிதாசர்

ராமனை தரிசிப்பதையே லட்சியமாகக் கொண்டு துளசிதாசர்
தவ வாழ்க்கை மேற்கொண் டிருந்த கால கட்டம். பன்னிரண்டு
ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள், துளசிதாசரின் முன் பூதம்
ஒன்று தோன்றியது.

‘இறைவனை தரிசிக்க தவம் இருந்தால், பூதம் தோன்றுகிறதே!’
என்று கலங்கினார் அவர்.

அதைப் புரிந்துகொண்ட பூதம், ‘`ஸ்வாமி, நான் அந்த மரத்தடியில்
வசிக்கிறேன். ஆறு, கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள
தண்ணீரைக் குடித்தும் தணியாத எனது தாகத்தை, தாங்கள்
மரத்தடியில் ஊற்றி வந்த தண்ணீர் தணித்தது.
உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்?’’ என்றது.

‘`எனக்கு வேண்டியது ராம தரிசனமே!’’ என்றார் துளசிதாசர்.

உடனே பூதம், ‘`அருகில் உள்ள ஊரில் ஒருவர் ராமாயணம் உபன்யாசம்
செய்து வருகிறார். அதைக் கேட்க அனுமன் முதிய வேதியர் வடிவில்
வந்து செல்கிறார். அவரை தரிசித்தால் உங்களது விருப்பம் நிறைவேறும்!’’
என்றது.

பெரிதும் மகிழ்ந்த துளசிதாசர். அனுமனை அடையாளம் கண்டு ஓடோடிச்
சென்று திருவடிகளைப் பிடித்துக்கொண்டு, ‘`ராமனை தரிசிக்க தாங்களே
அருள வேண்டும்!’’ என்றார்.

ஆனால் வேதியரோ அவரிடமிருந்து நழுவி னார். துளசிதாசர் பின்தொடர்ந்து
சென்று வேண்டினார். ஆனால், வேதியராக வந்த அனுமன் அங்கிருந்து
மறைந்தார். இப்படி, தினமும் அனுமன் வயது முதிர்ந்த வேதியராக வருவதும்
துளசிதாசருக்கு பிடிகொடுக்காமல் மறைந்து போவதும் வழக்கமானது.
எனினும், துளசிதாசர் மனம் தளரவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்… Empty Re: அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்…

Post by ayyasamy ram Tue Jun 09, 2020 7:04 am

அனுமனைக் கட்டினால் ராமன் வருவான்… Vikatan%2F2020-06%2F81492a94-0d6f-4668-8f9f-f303369e7391%2F51
-
ஒரு நாள், வேதியரை வசமாகப் பிடித்துக் கொண்ட துளசிதாசர், அவரது கையையும் சேர்த்துக் கட்டிவிட்டார். துளசிதாசரின் வைராக் கியத்தைக் கண்டு உவகை அடைந்த அனுமன், அவருக்கு சுயரூபத்தில் தரிசனம் தந்தார். அத்துடன், அவருக்கு ராம தரிசனம் கிடைக்கச் செய்வதாகவும் கூறி மறைந்தார்.

அனுமன் மூலம் துளசிதாசரது விருப்பத்தை அறிந்த ராமர், அவரைச் சோதிக்க விரும்பினார். மறு நாள், துளசிதாசர் தியானத்தில் இருந்த வேளையில், கிழப் பக்கிரியாக அவர் முன் தோன்றினார் ராமன். இதையறியாத துளசிதாசர் தியானத்திலேயே லயித்திருந் தார். இதைக் கண்ட ராமன் அங்கிருந்து மறைந்தார். துளசிதாசர் கண் விழித்த போது, எதிரில் அனுமன் நின்று கொண்டிருந்தார்.

`‘சுவாமி! இன்னும் ராமன் காட்சி தர வில்லையே…!’’ என்று வருந்தினார் துளசிதாசர்.

உடனே அனுமன், ‘`நான் ஏமாற்றவில்லை. கிழப் பக்கிரியாக உன் முன் காட்சி தந்த ராமரை நீதான் கண்டுகொள்ளவில்லை!’’ என்றார்.

தனது செயலுக்காக மிகவும் வருந்திய துளசிதாசர் தவத்தில் ஆழ்ந்தார். மாலைப் பொழுதானது.

திடீரென்று அந்த இடத்தில் நறுமணம் பரவியது. தீபச் சுடர்கள் கூடுதல் ஒளியுடன் பிரகாசித்தன. எதிர்பார்த்த அற்புதமும் அங்கு நிகழ்ந்தது! ஆம், ஒரு மணமகன் போன்று… சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் புடைசூழ வந்தார் ராமன். துளசிதாசர், கண்களில் நீர் மல்க, ‘ஆனந்தம்… பரமானந்தம்’ என்று பரவசப்பட்டார். ‘`சுவாமி என்னை ஆட்கொள்ளுங்கள்!’’ என வேண்டினார்.

அதற்கு ராமன், ‘`துளசி! பூவுலகில் உனக்கென்று சில கடமைகள் உள்ளன. அனுமனின் ஆசியுடன் தொடர்ந்து பக்திப் பணியாற்றி இறுதியில் முக்தி பெறுவாய்!’’ என்று அருளி மறைந்தார்.
-------------
– தீபா பாலச்சந்தர், மதுரை-16
நன்றி -சக்தி விகடன் டீம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum