ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செய்திகள்  Empty செய்திகள்

Post by சிவனாசான் Mon Jun 01, 2020 7:07 pm

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், டில்லி அரசுக்கு வருமானம் நின்று விட்டது. கையில் பணம் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. பேரிடர் நிவாரண நிதியின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, டில்லிக்கு கிடைக்கவில்லை. சம்பளம் மற்றும் அலுவலக செலவுகளுக்கு மட்டும், மாதம், 3,500 கோடி ரூபாய், டில்லி அரசுக்கு தேவை. அதனால், மத்திய அரசு, டில்லிக்கு, 5,000 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி >டெல்லி துணை முதல்வர் முதல்வர்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் Mon Jun 01, 2020 7:11 pm

மதுரை சலூன் கடைக்காரர் மோகன் மகள் >ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள, 5 லட்சம் ரூபாயில், நிவாரணம் வழங்குங்கள்' என்றாள்.மகள் விருப்பப்படி செல்லுார், மேலமடை, தாசில்தார் நகர், ஒத்தக்கடை, மதிச்சியம், கருப்பாயூரணி பகுதிகளில், 1,500 குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம். சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். நேற்று, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியதை அறிந்து நெகிழ்ச்சியுற்றேன். பா.ஜ., மாநில தலைவர் முருகனும், போன் மூலம் வாழ்த்தினார். சினிமா இயக்குனர் பார்த்திபன், தன் நண்பர்களை அனுப்பிகவுரவித்தார். என் மகள், நேத்ரா கல்வி செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.மோகன் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் Mon Jun 01, 2020 7:17 pm

புதுடில்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.டில்லி பாக். தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாக்.கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் Mon Jun 01, 2020 7:21 pm

புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை' என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம் கார்டு' வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by T.N.Balasubramanian Mon Jun 01, 2020 9:23 pm

அருமையான பதிவு செய்திகள். செய்திகள்  3838410834 செய்திகள்  103459460 செய்திகள்  1571444738

செய்திகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by ayyasamy ram Mon Jun 01, 2020 9:48 pm


18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம்


புதுடெல்லி,

18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம்
தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.

ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3,
மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும்
ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை
4 மணி வரை நடைபெறும் என்றும் அதேபோல் ஜூன்.19 ஆம்
தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்படும் என்றும்
தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by ayyasamy ram Mon Jun 01, 2020 9:50 pm

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு
-


சென்னை,

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை
முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது
வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்
நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி
மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும்,
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள்
பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு
பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை
நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.

இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை
திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித
பயம் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில்
அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன
என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த
மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்
என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும்
ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும்
பள்ளிகல்வி​த்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப
பள்ளிகல்வி​த்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
--

தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by ayyasamy ram Mon Jun 01, 2020 9:55 pm

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
-
சென்னை,

சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம்
ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர்
மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட
ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.


ஜாமீன் காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி
சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
--
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் Tue Jun 02, 2020 9:26 am

சென்னை : பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by சிவனாசான் Tue Jun 02, 2020 9:29 am

பாம்பறியும் பாம்பின் கால் .யாவருக்கும் தன் முதுகை பார்க்க முடியாது @பார்க்க முடியாது ..நல்லவன் கண்ணுக்கு நல்லது மட்டுமே தெரியும் . என்பார்கள் ....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள்  Empty Re: செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum