ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Tue May 19, 2020 4:58 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Sun Jul 12, 2020 8:26 pm

’மாட்டுக்கார வேலன்’ 50 வயது; மறக்கமுடியாத ‘ஒருபக்கம் பாக்குறா’!
-
மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி 535101
எம்ஜிஆர் காலத்துக்கு முன்பே டபுள் ஆக்‌டிங் வந்துவிட்டது.
சொல்லப்போனால், எம்.கே.ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’
படம், பின்னாளில் எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’
என்று எடுக்கப்பட்டது.

ஆனால் இன்றைக்கு வரை, தமிழ் சினிமாவுக்கும் சரி, டபுள்
ஆக்டிங் படங்களுக்கும் சரி... முக்கியமாக பார்முலா ஒன்று
இருக்கிறது. அதுதான் எம்ஜிஆர் பார்முலா.

எத்தனையோ படங்களில், எம்ஜிஆர் இரட்டை வேடங்களில்
நடித்திருக்கிறார். ‘குடியிருந்தகோயில்’, ‘எங்கவீட்டுபிள்ளை’,
’நாடோடி மன்னன்’ என பல படங்கள், எம்ஜிஆருக்கு மிகப்
பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

பொதுவாகவே, எந்தவொரு நடிகருக்கும் டபுள் ஆக்டிங் படம்
என்பது, எப்படியாவது ஒருவகையில் கைகொடுத்துவிடும்.
சிவாஜி, ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, கமல், ரஜினி
என பலருக்கும் டபுள் ஆக்டிங், பல ஹிட்டுகளைக்
கொடுத்திருக்கிறது.

ஆக, டபுள் ஆக்டிங் என்பது முதலுக்கு மோசமில்லாத
விஷயமாகத்தான் சினிமாவில் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்து,
கலெக்‌ஷன் அள்ளிய படமாக ‘மாட்டுக்கார வேலன்’ அமைந்தது.
மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம்
‘மாட்டுக்கார வேலன்’.எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன்,
சோ, விகே.ராமசாமி, வரலட்சுமி முதலானோர் நடித்திருந்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Sun Jul 12, 2020 8:26 pm



இரண்டு எம்ஜிஆர். ஒரு எம்ஜிஆருக்கு ஜெயலலிதா. இன்னொரு
எம்ஜிஆருக்கு லட்சுமி. ஒரு எம்ஜிஆர் அப்பாவி என்றால்,
இன்னொருவர் வீரன். ஒருவர் கெட்டவர் என்றால் இன்னொருவர்
நல்லவர்.

அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு எம்ஜிஆர் படித்தவர்;
வக்கீல். இன்னொரு எம்ஜிஆர் படிக்காதவர்; மாடு மேய்ப்பவர்.
அவ்வளவுதான். இதுபோதாதா... இதை வைத்துக்கொண்டு
அட்டகாசமான எவர்கிரீன் படமாக அமைத்துவிடுவாரே இயக்குநர்
ப.நீலகண்டன்.

எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டனின் மிகப்
பிரமாண்டமான வெற்றிப்படமாக ‘மாட்டுக்கார வேலன்’
படமும் அமைந்தது. பெரிய வக்கீல் வி.கே.ராமசாமியிடம் வக்கீல்
எம்ஜிஆர் சேர நினைப்பார். அவரையே தன் மகள் ஜெயலலிதாவுக்கு
திருமணம் செய்துவைக்க நினைப்பார் வி.கே.ராமசாமி.

இந்த சமயத்தில், கிராமத்தில் உள்ள சொத்து சம்பந்தமான
பிரச்சினை மாட்டுக்கார எம்ஜிஆருக்கு. அதற்குக் காரணம்
அசோகன். அவருடைய மகன் சோ. மகள் லட்சுமி. பிரச்சினை
சம்பந்தமாக வக்கீலைப் பார்க்க வருவார் வேலன் எம்ஜிஆர்.

ஆனால் அவர்தான் மாப்பிள்ளை வக்கீல் என்று தடபுடல்
வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும் செய்ய... இப்படியொரு
திருப்பம் இங்கே!

மாட்டுக்கார வேலன் எம்ஜிஆருக்கும் லட்சுமிக்கும் சண்டை.
பிறகு வக்கீல் எம்ஜிஆரைப் பார்க்கும் போது, டீஸ் செய்வார்.
பிறகு வேலன் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா மீது காதல்.
லட்சுமி மீது வக்கீல் எம்ஜிஆருக்கு லவ்வு. இதில் பழிவாங்கல்,
தந்தையைக் கொன்றது, அதற்கு ஆதாரமாக இருக்கும் டைரி,
அதைக் கண்டுபிடிக்க முனைவது, அசோகனின் சூழ்ச்சிகளை
முறியடிப்பது, கடைசியில் அந்தக் கூட்டத்தை நிர்மூலமாக்குவது,
அசோகனை போலீசில் சிக்கவைப்பது என பக்கா பேக்கேஜில்
ஃபேமிலி டிராமாவாகவும் ஆக்‌ஷன் த்ரில்லராகவும்
கொடுத்திருப்பார் இயக்குநர்.

‘சத்தியம் நீயே தருமத்தாயே’, ‘பூவைத்த பூவைக்கு’,
‘ஒருபக்கம் பாக்குறா’,’பட்டிக்காடா பட்டணமா’,
’தொட்டுக்கொள்ளவா நெஞ்சைத் தொடுத்துக் கொள்ளவா’
என எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.

இதில், ‘சத்தியம் நீயே’ பாடல் இன்றைக்கும் கட்சிக்
கூட்டங்களிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் நினைவுநாளின் போதும்
ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ‘ஒருபக்கம் பாக்குறா’
பாடல், எம்ஜிஆரின் வித்தியாசமான பாடல்களில் ஒன்றாகி
விட்டது.

ஜெயலலிதாவின் நடிப்பும் லட்சுமியும் நடிப்பும் பேசப்பட்டது.
சோவின் காமெடியும் சச்சுவின் காமெடியும் ரசிக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் படம் வெளியான போது, எம்ஜிஆரின் மிக
உயரமான கட் அவுட்டை, மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள்.

எழுபதுகளில், கே.வி.மகாதேவனுக்கு படங்கள் குறையத்
தொடங்கின. ஆனாலும் ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு
கே.வி.மகாதேவன் இசையமைத்தார். எல்லாப் பாடல்களும்
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

ஏ.எல்.நாராயணனின் வசனங்கள், கைத்தட்டல்களை அள்ளின.
1970ம் ஆண்டு, பொங்கலுக்கு வெளியானது ‘மாட்டுக்கார வேலன்’.
எம்ஜிஆரின் படங்களின் மிகப்பிரமாண்ட வெற்றி வரிசையில்,
இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்தது.

70ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது ‘மாட்டுக்கார வேலன்’.
இந்தப் பொங்கலுடன் மாட்டுக்கார வேலன் வெளியாகி
50 வருடங்களாகின்றன.

ஆனால் இன்னும் நூறாண்டுகளானாலும் சக்ஸஸ் ஃபார்முலா
லிஸ்ட்டில் ‘சத்தியம் நீயே தருமத்தாயே’ என்று கம்பீரமாக
பாட்டுப்பாடி, தனி ராஜபாட்டை போட்டுக்கொண்டிருக்கும்.
அதுதான் எம்ஜிஆர் பார்முலா; அதுதான் டபுள் ஆக்டிங் பார்முலா!
-
--------------------------------
நன்ற- இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

காட்டுக் குருவி ஒண்ணு காத்தாடப் போகுதுன்னு"
என்று ஆரம்பித்து "வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே"
என்று தொடர்ந்து செல்லும் அழகான கிராமியப் பாடல்.

திரைப்படம்: அன்பளிப்பு (1969); பாடியவர்கள்:
டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா; பாடலாசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்; இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவாஜியின் "அன்பளிப்பு" திரைப்படமும் எம்.ஜி.ஆரின்
"மாட்டுக்கார வேலன்" திரைப்படமும் ஒரே சமயத்தில்
வெளிவந்ததாகவும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் கேட்கப்படும் :
"வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே" என்ற கேள்விக்கு
பதிலாக "வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்" என்று
வருவதை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மாட்டுக்கார வேலன்
படத்தை பார்க்க அன்பளிப்பு பட கதாநாயகியே போனதாக
கிண்டல் அடித்ததாக அந்தக் காலத்தில் பேச்சு அடிபட்டது.
-
----------------------
நன்றி-முகநூல்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Fri Jul 24, 2020 4:08 pm

சத்தியம் நீயே தரும தாயே
-
படம் - மாட்டுகார வேலன்
இசை - கே.வி.மகாதேவன்
பாடல் -
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்

-
-------------------------

ட்ரிய்யோ *ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே

காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...


சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே



தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Fri Jul 24, 2020 4:12 pm

படம்- மாட்டுக்கார வேலன்
இசை - கே.வி.மகாதேவன்
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்

-
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா

அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!


காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது


ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by ayyasamy ram Fri Jul 24, 2020 4:14 pm


பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா

-
படம்- மாட்டுக்கார வேலன்
இசை - கே.வி.மகாதேவன்
பாடியவர் -எல்.ஆர்.ஈஸ்வர, பி,சுசீலா
& டி.எம்.சௌந்தரராஜன்

-
----------------------------

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா

ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் லவ் யூ

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் லவ் யூ

முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை
என்ன பிள்ளைத் தமிழா
முத்துச் சிமிழா
வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை
என்ன பிள்ளைத் தமிழா

கண் பட்டு ஆஹா
உங்கள் கை பட்டு ஓஹோ
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
கண் பட்டு உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு

ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் லவ் யூ

பச்சை வாழை மரத்துக்கு
சேலை கட்டிப் போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து
கன்னி வைத்தப் பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
ஆஹா அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் ஹோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்துச் சொல்ல முடியும்

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ

பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன்
காதல் வழக்கு பள்ளிக் கணக்கு
கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன்
காதல் வழக்கு
போடுங்கள் ஆஹா
கூண்டில் ஏற்றுங்கள்
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்தது
வெற்றி பெறுங்கள்

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்துக்
கை கொடுக்கும் ஜாலமோ அது காட்டும் ஜாடை என்ன
தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாய் இருக்குதிந்த உவமை ஓஹோ
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை ஓஹோஹோ
நன்றாய் இருக்குதிந்த உவமை
இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை

பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி Empty Re: மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum