ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

3 posters

Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by ayyasamy ram Wed May 13, 2020 3:53 pm

வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம் இருக்கிறதோ,
தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ, அப்போது அதே
போன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற மனிதர்களிடம், அவர்கள்
அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது உபயோகமாய்
இருக்கும்.

அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு, வயது ஏற ஏற
அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும். வாழ்க்கை என்பது
வாழும் நாட்களைக் கொண்டு கணக்கிடுவது அல்ல. எத்தனை
தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை பெற்றிருக்கிறோம்
என்பதில்தான் இருக்கிறது.

வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories – வாழ்க்கை என்பது
வெறும் நினைவுகளைக் கொண்டது.

ஓடி ஓடி உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசைபோட்டுப்
பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும்
இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும். அரசன் நினைத்தால்
எத்தனை புலி, சிங்கத்தை வேண்டுமானாலும் கொன்று வந்து
அரண்மனையில் குவிக்க முடியும்.

ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து தானே
வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில், எந்த கோணத்தில்,
எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும் என்று தெரியாத நிலை,
என்றாலும் அத்தகைய அச்சம் நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும்
ஒரு சுகம் இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.
இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்
பொருந்தும்.

‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை
கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.

‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக்
கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.

அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு,
அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.

பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக்
கொண்டிருந்தான்.

தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்கு வெளியிலிருந்த ஓநாய் பார்த்தது.

வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ
பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி,
‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.

அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய்
‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம் புல்
கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு பசியாறுவேன்’
என்றது.

அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும் என்கிறாயே!
என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான் நீ என்றால் நான்
உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று
சொல்லிக் கொண்டே அந்த ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில்
நுழைந்து ஓநாய் பக்கம் போயிற்று.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில்
அகப்பட்டுக் கொள்வார்கள்.
---------------
நன்றி
தன்னம்பிக்கை கட்டுரைகள்


Last edited by ayyasamy ram on Wed May 13, 2020 7:19 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty Re: பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by T.N.Balasubramanian Wed May 13, 2020 5:14 pm

தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ
பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி,
‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.

"வெளிக்கு வெளியிலிருந்த "என்று இருந்திருக்க வேண்டுமோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty Re: பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by T.N.Balasubramanian Wed May 13, 2020 5:15 pm

அனுபவ அறிவுரைகள் பொன்னானது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty Re: பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by ayyasamy ram Wed May 13, 2020 7:20 pm

T.N.Balasubramanian wrote:
தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ
பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி,
‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.

"வெளிக்கு வெளியிலிருந்த "என்று இருந்திருக்க வேண்டுமோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319965
-
ஆமாம்,
திருத்தம் செய்து விட்டேன்.... பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty Re: பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by சிவனாசான் Thu May 14, 2020 5:08 pm

மெய் அறிவு உள்ளவனே பலவான் அறிஞன் . பொய் அறிவு என்றும் பொய் அறிவே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள். Empty Re: பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum