ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்!

Go down

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! Empty லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்!

Post by ayyasamy ram Sat May 09, 2020 12:13 pm

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! 2
-

ஜே.ஜே.ப்ரட்ரிக் - ஜாய்

இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக், தமிழ்சினிமாவின் வருங்கால ந
ட்சத்திரம். மிக இளைஞர். ‘பொன்மகள் வந்தாள்’ என
ஜோதிகாவின் நடிப்பில் சூரியாவின் தயாரிப்பில் உருவான
படத்தின் இயக்குநர்.

அவரது மனைவியும் பிரபல காஸ்ட்யூம் டிசைனருமான
ஜாய் கிரிஸ்ல்டா போடும் டிவிட்டர் முகநூல் பதிவுகள்
இணைய உலகில் லைக்குகளை அள்ளிக் குவிப்பவை.
புது தம்பதிகளின் புத்தம்புது லவ் ஸ்டோரி.

ஜே.ஜே.ப்ரட்ரிக்

அன்பு, காதல்னா அது அம்மாதான். நான் அப்படித்தான்
அதைப் பார்ப்பேன். நான் மென்மையா எல்லோரிடமும்
அன்பா நடந்துக்குவேன்.

பழகுற எல்லோரிடமும் அக்கறை காட்டுவேன். அதனால்
அட்வான்டேஜ் எடுத்துக்கிறவங்க அதிகம். ஆனாலும்
அதை நான் கைவிட்டதில்லை.

காதலைவிடவும் சந்தோஷமான விஷயத்தை கடவுள்
இன்னும் இந்த பூமிக்கு கொடுக்கலை. கடவுளுக்கு நன்றி.
காதலுக்கு நன்றி. இன்னைக்கு இருக்கிற உலகத்துல
5 நிமிஷம் யார்கிட்டேயும் பேச நேரமில்லை.

என்னை கல்யாணம் பண்ணும் போது ஜாய் 25 படங்களுக்கு
மேல் காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்ணி முடிச்சிருந்தாங்க.
அப்படியே அந்த வேலையையும் விருதுகளையும் புகழையும்
விட்டுட்டு கணவன் குழந்தைன்னு இருந்துட்டாங்க.

நான் அப்படிச் செய்யச் சொல்லி சொன்னதில்லை. எப்ப
அதைப் பத்தி விசாரிச்சாலும் என் தலையை கோதிட்டு அடுத்த
வேலையை பார்க்கப் போயிட்டே இருப்பாங்க.

தனக்கான ரசனை, விருப்பம், உணர்வுகள்னு இருக்கிற இடத்தில
எல்லாத்தையும் எங்களுக்காக விட்டுக் கொடுக்குறது எவ்வளவு
பெரிய விஷயம்!
ஜாய் என்னோட சக பயணி. சதா புன்னகையோட கூட நடக்குற
தோழி.

அப்பாவும் அம்மாவும் செதுக்கியது போக என்னைத் தட்டித்
தட்டி அன்பான மனிதனாக்கியது ஜாய்தான்.
‘நீ சீக்கிரம் ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்டா’
என்று வெறியூட்டி உழைக்க வைத்ததுதான் இன்னைக்கு
‘பொன்மகள் வந்தாள்’ வரைக்கும் கூட்டிகிட்டு வந்திருக்கு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! Empty Re: லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்!

Post by ayyasamy ram Sat May 09, 2020 12:13 pm


சர்ச்சில் மணி அடிக்கும் போது மாடத்தில் இருந்து ஜிவ்வென்று
சிதறிப் பறக்கும் புறாக்களைப்போல அன்பும் பரவசமுமானது
எங்கள் காதல்.

ஜாய்-யை ‘என்றென்றும் புன்னகை’ ஆபீஸில் பார்த்தேன்.

எங்க அம்மாகிட்ட பார்த்த குணங்கள் அப்படியே இருக்கு.
எங்க அம்மா பெயர் கூட ஜாய்தான். ரெண்டு வருஷம் போல
அறிமுகம் தொடருது. பார்த்து சிரித்து உதவி பழகினோம்.
எனக்காக ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் மெழுகேற்றினாள்
ஜாய். அக்கறையா நட்பா பிரியமா அதையும் தாண்டி காதலா..
இதற்கு என்னதான் பெயர்? எங்களுக்கே தெரியவில்லை.

நட்புக்கும் காதலுக்கும் நடுவே காலமுள் ஆடிய காலம் அது.
ஒரு நாள் கார் ஓட்டும் போது போனில் வருகிறாள் ஜாய்.
‘என்ன இப்படி இருக்கோமே, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’
எனக் கேட்டுவிட்டேன். உடனே ‘நான் ரெடி’ எனச் சொல்லி
விடுகிறாள் ஜாய்.

பெரிதாக திட்டமிடவில்லை. கேண்டில் லைட் டின்னர் வைத்து
வெட்கம் பூசி காதலைச் சொல்லவில்லை. எல்லாமே நல்லபடியாக
நடந்தது. இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை. அக்காதான் எனக்கு எ
ப்பவும் தூது. என் மேல் உயிர் கொண்டவள் அக்கா.

ஊருக்கு கூட்டிப் போனால் அம்மாவுக்கும் ரொம்பப் பிடித்து
விட்டது. ‘அப்பாகிட்ட பேசுறேன்’னு அம்மா சொல்றாங்க.

அப்பாவை நான் தேவதைன்னு சொல்வேன். எனக்கு பெரிய
பெரிய விஷயங்களைப் பண்ணிக் கொடுத்திருக்கார். எனக்கு
வேண்டியதையெல்லாம் கேட்காம கொடுத்திருக்கார்.
சந்தேகப்படாமல் என்னை எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல்
வளர்த்திருக்கார். யார் மீதும் எனக்கும் புகார் இல்லை.
திருமணத்தில் போய் நிறைவாய் முடிந்தது எங்கள் காதல்.

ஜாய் நம்பிக்கையைத் தவிர எதையும் விதைத்ததில்லை.
இதுவரை எதற்காகவும் முடியாது என ஒருமுறை கூடச்
சொன்னதில்லை. எனக்கு சினிமாதான் சார் லைஃப்! ரெண்டு
கிளாஸ் டீ இருந்தா விடிய விடிய சினிமா பத்தி பேசிக்கிட்டே
இருப்பேன்.

அதுவே பெரிய சந்தோஷம்னு வாழ்றவன் நான். அதை அப்படியே
ஜாய் புரிந்திருக்கிறாள். இத்தனை கோடி மக்களை இம்ப்ரஸ்
பண்ற ஒரு பெரிய மீடியாவில் இருக்கோம்னு புரியவைத்து
ஊக்கம் கொடுத்ததும் அவள்தான்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! Empty Re: லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்!

Post by ayyasamy ram Sat May 09, 2020 12:13 pm

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! 2a
ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவள் தருகிற ஆச்சரியங்கள்
அதிகம். சினிமாவில் அவார்டு வாங்குறதை அவங்க நிறுத்திட்டு
இனிமேல் வாங்குனா அது உன்னோடதாக இருக்கட்டும்னு
சொன்ன பொண்ணு.

நான் பொண்ணா இருந்திருந்தால் இவ்வளவு மனசு வருமான்னு
எனக்குத் தெரியாது. இந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைக்
கூட அப்பாவுக்கும் ஜாய்க்கும்தான் சமர்ப்பணம் பண்றேன்.
அவள் நினைத்திருந்தால் என்னை யார்கிட்டயும் போயி உட்கார
வெச்சு கதை சொல்ல வைக்க முடியும்.

ஆனால், சினிமாவில் உன் திறமையோட வெளிச்சத்தில்
வந்தால்தான் அடுத்தடுத்து நல்லதுன்னு தட்டிக்கொடுத்து
சொன்ன பொண்ணு.

நானாக முயற்சி பண்ணி ஜோதிகா மேடத்துக்கு கதை சொல்லி
அவங்க இம்ப்ரெஸ் ஆகி இந்தப் படம் முடிவாச்சி. அவங்க செக்
கொடுத்ததை கொண்டுபோயி ஜாய்கிட்ட கொடுத்தேன்.

அவங்ககிட்ட பெருகிவந்த கண்ணீர் இருக்கே… அது காவியத்
தருணம். 25 நிமிஷத்துக்கு மேல என்னை கட்டிப் பிடிச்சு
அழுதுகிட்டே இருக்காங்க. பின்னாடி அலைபேசியில அப்பாகிட்ட
சொல்லிட்டு அப்படியே தொடருது.

எப்படி லவ் பண்ணும் போது மனைவியைப் பார்த்தேனோ
அப்படியே இருக்கேன். சூர்யா - ஜோதிகா ரெண்டு பேரையும்
பக்கத்தில இருந்து பார்க்கிறேன். எவ்வளவு பெரிய இடத்தில்
இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது வந்து ஜோதிகா மேடத்துக்கு
தமிழ் கற்றுக்கொடுக்கிறதும், ஷூட்டிங் டைமில் குழந்தைகளைப்
பார்த்துக்கிறதும் மனைவி சாப்பிட்டாங்களான்னு விசாரிச்சு
அறியறதும் அவ்வளவு இயல்பா அருமையா நடக்குது.

ஒபாமாவைப் பாருங்கள், மனைவியை எந்த சமயத்திலும்
விடாமல் உடன் அழைச்சுட்டுப் போற அழகு… இந்த மாதிரி
கணங்களில்தான் உறவு என்றைக்கும் கைவிடப்படாமல் அழகா
இருக்குன்னு தோணுது.  

ஜாய் மாதிரி ஒரு பெண் கூட இருந்தால் ஒரு பறவையைப்போல
நீங்க சிறகடிச்சு பறக்க ஆரம்பிப்பீங்க. உங்களுக்கான புதிய
திசையை நீல வானமே காண்பிக்கும்.

ஜாய் கிரிஸ்ல்டா:

முதலில் சாதாரணமா நட்புடன் பேச ஆரம்பிச்சு அப்படியே
முகநூலில் பேச்சு நடந்துகிட்டே இருக்கு. ரொம்ப தன்மையானவரா
இருந்தார். எங்க அப்பா நாலு வருஷத்துக்கு முன்னாடி
காலமாயிட்டார். அவர் இல்லாத தனிமை கொடுமை. அந்த சமயம்
ப்ரட்ரிக் கொடுத்தது அப்படியே அப்பா மாதிரியான கவனிப்பு...
அக்கறை. எந்த ஒரு கணமும் விட்டுப் பிரியாத ப்ரியம். எனக்கு
எல்லாமே அமைஞ்சது.

Love is all about Sacrifice ன்னு சொல்வாங்க.
இந்த உலகத்தின் ஒரே உண்மை அதுதான். உறவுகளில் ஒரு
பொதுவான ஹார்மனி இருக்கணும். அது எனக்கும் அவருக்கும்
இருந்தது. உண்மையைச் சொன்னால் என்னைப் பத்தி நினைச்சே
இரண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.
எனக்கு ப்ரட்ரிக், குழந்தை ஜேடன் தவிர தனியான வேறு உலகம்
இல்லை.

நம்மோடு வாழ்க்கையை பகிர்கிறவர் சரியானவராக இருப்பவரா
அல்லது கருணை உள்ளவராக இருப்பவரான்னு தேர்ந்தெடுக்கச்
சொன்னால் நான் கருணை உள்ளவரை தேர்ந்தெடுப்பேன்.
ப்ரட்ரிக் அப்படிப்பட்டவர். எங்களின் காதலின் ஆரம்ப வசீகரம்
அச்சுக் குலையாமல் அப்படியே இருக்கிறது.

நான் தாயுமானவன், தந்தையானவன்னு அவர் தன் செயல்களில்
காட்டிக்கொண்டே இருப்பதும், அதை நான் மீண்டும் மீண்டும்
கேட்க தவிப்பதும்தான் காதல். நம்பிக்கையூட்டும் காதல் நம்மை
அவர்களிடம் இழக்க வைக்கும். அவர்களுக்காகவே நம் மீதமுள்ள
முழு வாழ்க்கையும்னு நினைக்க வைக்கும். என் ப்ரட்ரிக்
எனக்கானவராக இருப்பது என் வெற்றி. இது காதலின் இன்னொரு
வகையல்ல. இதுதான் காதல்!
-
---------------------------
செய்தி: நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்! Empty Re: லவ் ஸ் டோரி-இது காதலின் இன்னொரு வகையல்ல... இதுதான் காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum