ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரியின் சிங்கோனா துறை

Go down

நீலகிரியின் சிங்கோனா துறை Empty நீலகிரியின் சிங்கோனா துறை

Post by ayyasamy ram Sat 2 May 2020 - 16:19



அந்துமணி (வாரமலர்) அவர்களுக்கு, நீலகிரியிலிருந்து, ராஜ்குமார் எழுதிய
மடல் இது:

எங்கு திரும்பினாலும், 'கொரோனா வைரஸ்' என்று ஒலித்துக் கொண்டே
இருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏதாவது ஒரு வியாதி மனித இனத்தை
பயமுறுத்திக் கொண்டே வந்துள்ளது.

கடந்த, 1820ல் மலேரியா நோய் வந்தபோது, பிரஞ்சு விஞ்ஞானிகளால்,
'கொய்னா' என்ற மருந்து தயாரிக்கப்பட்டு, நோயின் தாக்கம்
குறைக்கப்பட்டது.

ஸ்காட்லாந்து நாட்டில், ஒரு விவசாயியின் மகனாக பிறந்த, மெக்கவார்
என்பவரை, 1848ல், உதகமண்டலத்தில், அன்றைய பிரிட்டீஷ் அரசு
கண்காணிப்பாளராக பணி அமர்த்தியது.

மூலிகை வளமிக்க நீலகிரியை தேர்ந்தெடுத்த பிரிட்டீஷ் இந்திய அரசு,
முதன் முதலாக, சிங்கோனா துறையை, உதகமண்டலம் பூங்காவில்
உருவாக்கியது. அந்த பூங்கா தான், தற்போது, அரசு தாவரவியல்
பூங்காவாக உள்ளது.

வரலாற்று புகழ்பெற்ற இந்த சிங்கோனா துறை, கொய்னா மருந்து
மாத்திரம் அல்ல, பலவித மூலிகைகள், வாசனை திரவியங்கள் என,
கண்டுபிடித்து அசத்தியது.

சிங்கோனா துறை, வனத்துறை ஆகியவற்றுக்கு தனி செயலர்,
அமைச்சர்கள் இருந்தனர். எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது,
தமிழக மக்களுக்கு, இலவசமாக பல்பொடி செய்ய இத்துறைக்கு அனுமதி
அளித்தார். நேர்த்தியான மூலிகை பல்பொடி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு
வழங்கப்பட்டது.

'ஆக்சிமம் கேம்பரா' என்கிற துளசி செடியிலிருந்து, சூடம் தயாரிக்கப்பட்டு,
பழநி, திருப்பதி கோவில்களுக்கு விற்கப்பட்டது. அந்த சூடத்தை
கொளுத்தினால், புகையே இல்லாத பிரகாசமான ஒளி கிடைத்தது.

சின்பிரஸ் என்ற தரை கழுவும் திரவம், சிட்ரிடோரா என்கிற இலையிலிருந்து
தயாரிக்கப்பட்டு, எவ்வித கிருமியும் அண்டாதபடி பாதுகாத்தது.

சிங்கோனா துறையினரால் தயாரிக்கப்பட்ட, யூகலிப்டஸ் எண்ணெய்,
சூட எண்ணெய் பிரசித்தமானது; பாட்டிலை திறந்து வைத்தால்
ஆவியாகிவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது.

நான் கல்லுாரியில் படிக்கும்போது, என் தந்தை, சூட தைலம் வாங்கி
வரச்சொல்வார். வாங்கி வந்தவுடன், ஆசையோடு கை, கால்களில் சூடு
பறக்க தேய்ப்பார்; வலி பறந்து விடும்.

நறுமண தைலங்களான, ரோஸ்மேரி தைலம், சிட்ரிடோரா தைலம்,
லெமன் கிராஸ் தைலம், ஜெரோனிய தைலங்கள், வெளி
மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இந்த அருமையான துறை நலிவடைந்தது; ஏன் நலிவடைந்தது என்பது
புரியாத புதிர். பின்னர், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தோடு இது
இணைக்கப்பட்டது.

சிங்கோனா துறையில் பணியாற்றிய ஊழியர்கள் நடுவட்டம், சேரங்கோடு,
வால்பாறை பகுதிகளில் தேயிலை செடிகளை நட்டு சாதனை புரிந்தனர்.
அவர்களது அயரா உழைப்பு பிரமிக்க தக்கதாக இருந்தது.

தொழிலாளர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போதும் நிரூபித்துக்
கொண்டிருக்கின்றனர்.

சேரங்கோடு பகுதியில், 144 எக்டேர் பரப்பளவு பகுதி நிலம், நன்கு வளர்ந்து,
அதிக மகசூல் தந்து கொண்டிருந்த, சரகத்தில் பணியாற்றும் பாக்கியம்
எனக்கு கிடைத்தது.

சிங்கோனா காலத்தில், மெக்கவார் சிங்கோனா டிவிஷன் என்ற பெயரில்
இருந்தது. அங்குள்ள குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில்,
சிங்கோனா பட்டை துகள்களையும், கட்டி கட்டியாக சூடம் தயாரிக்க
காரணமாக இருந்த துளசி செடியையும் பார்த்து பரவசம் அடைந்தேன்.

'சிங்கோனா மரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளது.
இதை வெட்டி விடாதீர்கள்...' என்று, அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.

என்னோடு பணிபுரிந்த சங்கரதேவனும், தீவிரமாக செயல்பட்டார்.
கடந்த, 2009ல் ஓய்வுபெற்ற நான், பழைய நினைவுகளால் நனைந்து
கொண்டுள்ளேன்.

- இப்படி எழுதியுள்ளார்.
-
--------------------------
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum