ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்...

Go down

 பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்... Empty பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்...

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 5:05 pm

உடல் நலம்....

பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்?
மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்...


``தொடர்ந்து தும்மல் வந்துக்கிட்டே இருக்கு டாக்டர், என்ன
செய்யலாம்?" - கேட்கிறார் பேஷன்ட். ``தும்மல் வந்தா தும்மிடுங்க’’

- பதில் சொல்கிறார் மருத்துவர். இது ஒரு ஜோக்.
`இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், ஒருவகையில்
இது உண்மையே’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

`தும்மல் மட்டுமல்ல, இருமல், வாந்தி, ஏப்பம், கொட்டாவி... என நம்
உடல் கோரும் இயற்கை உபாதைகள் எதையுமே அடக்கக் கூடாது’
என்றும் சொல்கிறார்கள்.

ஒரு நல்ல காரியம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது
கூட்டத்தில் ஒருவர் 'ஹச்...' என்று தும்மினால், அவ்வளவுதான்...
'அந்தக் காரியம் விளங்காது, அபசகுனம்' என்பார்கள். பரபரப்பாக
ஒரு மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்.

யாரோ ஒருவர் கொட்டாவிவிட்டால் போதும்... அத்தனை பேரும்
அவரை, ஒரு குற்றவாளியைப்போல் பார்ப்பார்கள். அதனாலேயே
பலரும் கொட்டாவியை அடக்கி, மென்று விழுங்குவதும் உண்டு.

இப்படியான உடல் வெளியிடும் இயற்கைச் செயல்களை அடக்கும்
பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். இந்த அலட்சியத்துக்குக்
காரணம், அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரியாததுதான்.

இதுபோன்ற உடலில் நடக்கும் மாற்றங்களைக் காட்டும் அறிகுறிகளை
அடக்கினால், சாதாரண தலைவலியிலிருந்து, இதயநோய்கள் வரைகூட
ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

``இவற்றை ஏன் அடக்கக் கூடாது, அடக்கினால் என்னென்ன பிரச்னைகள்
ஏற்படும் என்பது குறித்து எல்லோருமே அறிந்துகொள்ளவேண்டியது
அவசியம்’’.

"உடலின் செயல்பாட்டால், இயக்கத்தால் உடலிலிருந்து வெளியேறும்
தும்மல், கொட்டாவி போன்றவற்றை ஆயுர்வேதத்தில் 'உடல் வேகம்'
அல்லது 'இயற்கை வேகம்' என்கிறார்கள். இந்த வேகத்தில் இரண்டு
வகைகள் உள்ளன.

ஒன்று, அடக்கவேண்டிய வேகம்.

மற்றொன்று, அடக்கக் கூடாத வேகம்.

கோபம், ஆக்ரோஷம் போன்ற மன வேகங்களை, `அடக்கவேண்டிய
வேகங்கள்’ என்றும், சிறுநீர், மலம், வாயு, தும்மல், இருமல், ஏப்பம்,
வாந்தி, கொட்டாவி, பசி, தூக்கம், தாகம், கண்ணீர், களைப்பினால்
ஏற்படும் மூச்சிரைப்பு, விந்து வெளியேறுதல் ஆகியவற்றை `அடக்கக்
கூடாத வேகம்’ என்றும் கூறுகிறது ஆயுர்வேதம்.

`அடக்கக் கூடாத வேகங்களை அடக்கினால், அவை ஒவ்வொன்றும்
சாதாரணத் தொந்தரவுகள் முதல் கடுமையான இதய பாதிப்புகள் கூட
ஏற்படலாம்’ என்கிறது ஆயுர்வேதம்.

சிறுநீர், வாயு, மலம்...

நாகரிகமான இந்தக் காலத்தில், பெரும்பாலானோரிடம் இவற்றை
வெளியேற்றுவதில் தயக்கமும் கூச்சமும் இருக்கிறது. உடலிலிருந்து
கழிவுகள் வெளியேறிவிட்டாலே, பல நோய்கள் ஏற்படக்கூடிய
வாய்ப்புகள் குறைந்துவிடும். மலத்தை அடக்கினால் தலைவலி,
கை, கால், இடுப்புப் பகுதியில் வலி உண்டாகும். சிறுநீரை அடக்கினால்,
சிறுநீர் பையில் கற்கள் உண்டாகும். வாயுவை அடக்கினால் வயிற்று
உப்புசம் ஏற்படும்.

ஏப்பம்...


அவசர அவசரமாக உணவைச் சாப்பிடும்போது, கொஞ்சம் காற்றையும்
விழுங்கிவிடுவோம். அப்படி விழுங்கிய காற்றை உணவுக்குழாய் மூலம்
வாய் வழியாக வயிறு வெளியேற்றும் நிகழ்வை, `ஏப்பம்’ என்கிறோம்.

ஏப்பத்தை அடக்கினால், சுவையின்மை ஏற்படும். இதயநோய்கள்
வரலாம்.
-
---------------------------------


Last edited by ayyasamy ram on Tue Apr 28, 2020 5:23 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்... Empty Re: பசி, தாகம், தூக்கம்... கட்டுப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? மருத்துவம் விவரிக்கும் பக்க விளைவுகள்...

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 5:20 pm

கொட்டாவி...

உடல் சோர்வு அடையும்போதும், தூக்கம் வரும்போதும்
உடலுக்கு இயல்பாகவே அதிக ஆக்சிஜன் தேவைப்படும்.
அந்தச் சமயத்தில் அதிக ஆக்சிஜனை உள்ளிழுத்துக்
கொள்ளவதற்காக கொட்டாவி ஏற்படுகிறது.

கொட்டாவியை அடக்கினால், தொடு உணர்வு குறையும்.
நடுக்கம், உதறல், உணர்வின்மை ஏற்படலாம்.
---------------------------

வாந்தி...

உடலுக்கு ஒவ்வாத உணவை வெளியேற்றுவதற்காக வாந்தி
வருகிறது. அதைத் தவிர்க்க முயன்றால் அலர்ஜி, தோல் நோய்கள்
ஏற்படும்.
--------------------------------

பசி...


உடலுக்குத் தேவையான ஆற்றல் குறையும்போது, மூளை நரம்புகள்
ஹார்மோன்களால் தூண்டப்பட்டு பசி ஏற்படும். பசியைத் தவிர்த்தால்
உடல் இளைத்துப்போகும். தலைசுற்றல், மயக்கம் ஏற்படும்.
-------------------------------

இருமல்...

உடலில் நோய்க் கிருமித்தொற்று இருந்தால் இருமல் ஏற்படும். இதை
அடக்கினால், அது மேலும் அதிகரிக்கவே செய்யும். மேலும் இது,
இதய பாதிப்புகளையும் உண்டாக்கலாம்.
--------------------------------------

தூக்கம்...


உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்தும் அறிகுறி தூக்கம்.
அந்தத் தூக்கத்தைத் தவிர்த்தால் உடல் சோர்வு, சோம்பல், கண்களில்
அயற்சி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
----------------------------------------

தும்மல்...


ஒவ்வாத பொருள்கள் நமது உடலுக்குள் நுழையும்போது, அதனை
நமக்கு உணர்த்துவதுதான் தும்மல். இது, நுரையீரலில் மாசு,
அலர்ஜி, தொற்று ஆகியவை இருக்கும் சமயங்களில் ஏற்படும்.
இதைத் தவிர்த்தால் முகவாதம் (Facial Paralysis) ஏற்படலாம்.
------------------------------------

களைப்பால் ஏற்படும் மூச்சிரைப்பு

உடல் களைப்பால் ஏற்படும் மூச்சிரைப்பைத் தடுக்க முயன்றால்,
அது அதிகரிக்கத்தான் செய்யும். இது, இதய பாதிப்புகளுக்கும்
வழிவகுக்கும்.
-----------------------------------------------

தண்ணீர் தாகம்...


உடல் உஷ்ணத்தைத் தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்ப
வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புதமான அலெர்ட்,
தாகம்.

இதை அடக்கினால் நாவறட்சி, உடல் பலவீனம், இதயத்தில் வலி,
காது கேளாமை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்"
-
---------------------------------------

பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum