ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜையறை பராமரிப்பு!

Go down

பூஜையறை பராமரிப்பு! Empty பூஜையறை பராமரிப்பு!

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:54 pm

பூஜையறை பராமரிப்பு! Ld4613054618493

பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.

* ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.

* பெரிய அகல் விளக்குகள் வாங்கி வைத்து அவற்றில் மெழுகுவர்த்தி, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்றலாம், கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்கலாம்.

* எலுமிச்சம்பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை
பூஜையறையில் போடலாம்.

* சூடான டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.

* கற்பூர பாட்டிலில் நாலைந்து மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

* மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தியும் மயிலிறகிற்கு உண்டு.

* பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்தபின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர்கொண்டு ஒத்தி விளக்கை
அணைக்கலாம்.

* பூஜை செய்த மணமிக்க மலர்களை வீணாக்காமல், அடுத்தநாள் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்து மணமுள்ள சீயக்காயாகப் பயன்படுத்தலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூஜையறை பராமரிப்பு! Empty Re: பூஜையறை பராமரிப்பு!

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:55 pm

மழை நாட்களில், தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கலாம்.

* பூஜையறை கதவுகளில் சிறுசிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும்போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.

* ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நீண்டநேரம் எரிந்து மணம் பரப்பும்.

* வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், இன்னொரு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். திரும்ப வரும்வரை அவையே தெய்வங்களுக்கு
பிரசாதங்கள்!

* காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவதும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.

* வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.

* ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க, பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு சுவாமி படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இந்த மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.

* பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.

* அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும்.

* பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

* வீட்டில் கட்டாயம் குலதெய்வ படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.

;நன்றி- தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum