ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!

Go down

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Empty பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:50 pm

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Tamil_Daily_News_201__214458644390107

பங்குனி உத்திர தினத்தில் திருமணம் ஆகாத ஆண்கள்,
பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வேண்டிக்
கொண்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்று
சொல்கிறது சாஸ்திரம்.

ஏனென்றால் நாம் வழிப்படும் பெரும்பான்மையான
தெய்வங்களுக்கு இந்த நாளில் தான் திருமணம் நடை
பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி,
முருகன் தெய்வயானை, நாராயணன் மகாலட்சுமி,
பிரம்மா சரஸ்வதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமர் சீதை,
போன்ற பல தெய்வங்களுக்கு திருமணம் நடந்த நாள்தான்
இந்த பங்குனி உத்திர திருநாள்.

இப்படியிருக்க இந்த நாளை ‘கல்யாண விரத’ நாள் என்றும்
சிலர் கூறுவார்கள். திருமணமாகாதவர்கள் இந்த விரதத்தை
எப்படி கடைபிடிப்பது? உலகம் இன்றைக்கு இருக்கும்
சூழ்நிலையில், பிணிகளைத் தீர்க்கும் முருகப் பெருமானை
மனதார, முறைப்படி எப்படி வேண்டிக் கொள்வது? என்பதை
தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

வழக்கம்போல் பண்டிகை என்றால் முந்தைய நாளே நம் வீடு,
பூஜை அறை அனைத்தையும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள
வேண்டும்.

அடுத்த நாள் காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு,
முடிந்தால் முருகப்பெருமானுக்கு என்ன பூ கிடைக்கிறதோ
அதை சூட்டி, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு,
திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும் பெண்களாக
இருந்தாலும் நல்ல வரன் அமைய வேண்டும் என்று மனதார
வேண்டிக்கொண்டு, உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப
விரதம் இருக்க வேண்டும்.

திருமணமாகாத இளம் வயதில் இருக்கும் ஆண், பெண்கள்
முடிந்தவரை மாலை நேரம் வரை எந்த உணவும் உண்ணாமல்
விரதமிருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Empty Re: பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:52 pm

பங்குனி உத்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு
முருகப்பெருமானுக்கு சக்கரை பொங்கலோ அல்லது
கோதுமை அப்பமோ அல்லது உங்களால் முடிந்த ஏதாவது
ஒரு இனிப்பு வகை பலகாரத்தை நைவேதனமாகப் படைத்து,
தீப தூப ஆராதனை செய்து அந்த பிரசாதத்தை நீங்களும்
உண்டு, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இந்த முறை திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும்.

இன்றைக்கு நம்முடைய உலகமே வைரஸ் பிரச்சனையில்
மாட்டிக்கொண்டு, எப்படி மீள்வது என்று தெரியாமல் இக்கட்டான
சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்
வந்திருக்கும் இந்த பங்குனி உத்திர திருநாளில், முருகப்
பெருமானை நம் முன்னோர்கள் கூறிய சிறப்பான ஒரு முறையில்
வழிபட்டால் பிரச்சனைகள் விரைவாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கொரானா வைரசுக்காக சொல்லப்பட்ட பரிகாரம் அல்ல.
‘கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களிலிருந்து கூட, முருகப்பெருமான்
நம்மை காத்திடுவார். கண்ணுக்கு தெரியாத இந்த கிருமியிடம்
இருந்து நம்மை காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும்
பிரத்தியேகமான வேண்டுதல் தான் இது.’

முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகனுக்கே உரியதான
‘ஓம் சரவணபவ நட்சத்திர கோலத்தை’ பச்சரிசி மாவால் போட்டுக்
கொள்ளுங்கள். அதன்பின்பு, 6 மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி,
அந்த தீபங்களை, நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் 6 கட்டங்களிலும் வைத்துவிடுங்கள். கோளத்தின் நடுப்பகுதியில் இருக்கும் ‘ஓம்’
என்னும் மந்திரத்தின் மேல் சிறிதளவு பச்சரிசி பரப்பி வைத்துக்
கொள்ளுங்கள்.

ஒரு கைப்பிடியளவு பச்சரிசி வைத்தால் போதும். அதன் மேல் ஒ
ரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பார்த்து கோலம் போட்டுக் கொள்ளவும்.

அந்த காலங்களில் எல்லாம் தீராத நோய்கள் வந்தால் ஒரு ரூபாய்
நாணயத்தை முடிந்து வைத்து, தெய்வத்தை வேண்டிக் கொண்டால்
பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும் என்று சொல்லுவார்கள்.

அதன்படி தான் இன்று நம் உலகிற்கே வந்திருக்கும் இந்த வைரஸ்
பிரச்சினை தீர வேண்டும் என்று, மனதார வேண்டிக்கொண்டு
அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முருகப் பெருமானை வழிபட போகின்றோம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Empty Re: பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:53 pm

அதன்பின்பு முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நைய்வேதியம் வைத்து, தீப, தூப ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்தப் பூஜையை வீட்டிலிருக்கும் யார் வேண்டுமென்றாலும் செய்து வேண்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் கோலத்தில் வைத்திருக்கும் பச்சரிசியை எடுத்து, அரைத்து தினம்தோறும் வாசலில் கோலம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சரிசியின்மேல் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை, மஞ்சள் துணியில் முடிந்து, உங்களது பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எப்போது கோயிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கின்றதோ, அந்தநாளில் அந்த ஒரு ரூபாயை எடுத்து முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நம்முடைய ஒவ்வொருவரின் வீட்டிலும் இந்த பங்குனி உத்திரத்தை முருகப்பெருமானை வீட்டிலிருந்தே இந்த முறைப்படி வழிபடுவோம். எல்லோருக்கும் விடிவுகாலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Empty Re: பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum