ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இசை கருவிகளில் ஸ்ருதி இருப்பதில்லை! 'புல்புல் தாரா' கலைஞர் ஜவஹர் வருத்தம்

Go down

புதிய இசை கருவிகளில் ஸ்ருதி இருப்பதில்லை! 'புல்புல் தாரா' கலைஞர் ஜவஹர் வருத்தம் Empty புதிய இசை கருவிகளில் ஸ்ருதி இருப்பதில்லை! 'புல்புல் தாரா' கலைஞர் ஜவஹர் வருத்தம்

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 6:15 pm

புதிய இசை கருவிகளில் ஸ்ருதி இருப்பதில்லை! 'புல்புல் தாரா' கலைஞர் ஜவஹர் வருத்தம் Tamil_News_large_2497617

தமிழ் சினிமாவில், 1950 -- 1965 கால கட்டத்தில், 'புல்புல் தாரா' எனும் இசைக்கருவியின் பங்களிப்பு இல்லாமல், பாடல்கள் இருக்காது. சிறிய அளவிலான கீ போர்டில், கம்பியை வைத்து இசைப்பது போன்ற கட்டமைப்பில் இருக்கும் இக்கருவியை, தற்போது வாசிப்பவர்கள் மிக அரிது.

இந்த புல்புல் தாரா இசைக் கருவியை, 50 ஆண்டுகளாக மேடைகளில் இசைத்து வருபவர் கே.ஜி.ஜவஹர், 65. சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தோம். நம்மிடம் பேச துவங்குவதற்கு முன், 'புல்புல் தாரா இசைக்கருவியில், சிறிது நேரம் இசையை கேளுங்கள்' எனக்கூறி, 'நான் ஆணையிட்டால்... அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...' போன்ற, எம்.ஜி.ஆர்., பாடல்களை இசைத்துக் காண்பித்தார்.

தேசிய கீதத்தை, இக்கருவியில் இசைப்பது குறித்து, நமக்கு கற்றுக் கொடுத்து வியக்க செய்தார்.
அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களை பற்றி?

சொந்த ஊர் திருநெல்வேலி. கனரா வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சாலிகிராமத்தில், 25 ஆண்டுகளாக வசிக்கிறேன். பத்திரிகை துறையில் ஆர்வம் அதிகம். பல தலைவர்களை
நேர்காணல் செய்து உள்ளேன். பல கதைகள், கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

'புல்புல் தாரா' இசைக்க ஆர்வம் வந்தது எப்படி?

அந்த காலத்தில், அனைவர் வீட்டிலும் காணும் பொருளாக புல்புல் தாரா இருந்தது. என்
வீட்டிலும் இருந்தது. நான் இளம் வயதில் இருந்து, இந்த இசைக்கருவியை பயன்படுத்த துவங்கினேன். எனக்கு, இசையில் முறையான பயிற்சி இல்லை.

புல்புல் தாரா வாசிக்க, தானாகவே கற்றுக் கொண்டேன். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கும்
என்னால் கற்பிக்க முடியும். மலிவானதாக இருந்ததால், புல்புல் தாராவை, 'ஏழை மனிதனின் வீணை' என, அழைப்பர்.

எத்தனை ஆண்டுகளாகபுல்புல் தாரா இசைக்கருவியுடன் பயணிக்கிறீர்கள்?

கடந்த, 50 ஆண்டுகளாக, 300க்கும் மேற்பட்ட மேடைகளில், புல்புல் தாரா இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களிலும் இசைத்துள்ளேன்.ஒரு முறை, தேசிய அளவில் வங்கிகள் இடையேயான இசை போட்டியில், புல்புல் தாரா இசைத்து, முதல் பரிசு வென்றேன். வீணைக்கு இரண்டாவது பரிசு தான் கிடைத்தது.

விரும்பி அழைத்தால், நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். 2008 -- 09ம் ஆண்டிற்கான, 'புல்புல் தாரா கலைஞர்' என, தமிழக அரசின், 'கலை நன்மணி' விருதை பெற்றுள்ளேன்.

தமிழ் சினிமாக்களில்,புல்புல் தாரா இசைக்கருவி பயன்பாடு எப்படி?

பழைய தமிழ் படங்களில், புல்புல் தாரா இசை கருவி இன்றி பாடல்கள் கிடையாது. 1952ல்,
பராசக்தி; 1954ல், அந்த நாள்உள்ளிட்ட பழைய படங்களின் பாடல்களில், இந்த இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா வாய்ப்புகள் உள்ளதா?

சில வாரங்களுக்கு முன், இயக்குனர் பாக்யராஜ், என்னை அழைத்து, ஒரு பாடலை கொடுத்து புல்புல் தாராவில் இசைத்து தர கேட்டார். இசை அமைத்து அனுப்பியுள்ளேன். நான் எதிர்பார்க்காத புகழை, அது எனக்கு பெற்றுக் கொடுத்தது. என் குழந்தை போல், இந்த இசைக்கருவியை பாதுகாத்து வருகிறேன்.

அரிதான இந்த இசைக்கருவியின் தற்போதைய நிலை?

இந்த இசை கருவி, தற்போது கிடைப்பது அரிது. புதிதாக வரும் கருவிகளில், ஸ்ருதி
இருப்பதில்லை. என்னிடம் இருக்கும் கருவியில் உள்ள கம்பியை மாற்றி, 30 ஆண்டுகள் ஆகின்றன. இதன் கம்பிகள், தற்போது கிடைப்பதில்லை. இளைஞர்களிடம், இப்படி ஒரு இசைக்கருவி இருந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

- நமது நிருபர் --தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83454
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» Android கருவிகளில் பயன்படுத்தக்கூடிய BBC - இன் புதிய அப்பிளிக்கேஷன்!
» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
» பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர்
» அன்பு சகோதரர் திரு ஜவஹர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» "தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum