ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
ayyasamy ram
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
mini
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
mohamed nizamudeen
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Go down

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Empty உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Post by ayyasamy ram Fri Feb 21, 2020 9:21 pm

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Tamil_News_large_2485857
-
'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால்
போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில்
பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய
கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை
நம்பி இருக்கின்றன.

பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால்
கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன.
அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு
அளிக்கும் பணியை செய்து வருகிறார்
டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...

எவ்வளவு ஆண்டுகளாக பசுக்களை பராமரிக்கிறீர்கள்?


பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில்,
45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.

டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?


எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில்,
எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு
வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு.
பின், மருத்துவம் படித்தேன்.

ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா
பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார்.
அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது.

ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க
வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று,
பசுக்களை வளர்த்து வருகிறேன்.
-
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Gallerye_205554230_2485857
-
பசுக்களை எங்கு பராமரிக்கிறீர்கள்?

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில்
உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின்,
'இந்திய கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு
வருகிறது.

இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால்
ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம்.

அவற்றில், 1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள்
உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.

பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக்
கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா
குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து,
மாடுகளைகாப்பாற்றினர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Empty Re: உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Post by ayyasamy ram Fri Feb 21, 2020 9:22 pm


கொஞ்சம் விளக்கமாக...

சென்னை, மயிலாப்பூரில் இருந்து, மாடுகள் காப்பகத்தை
மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நீலாங்கரையில்
இடம் தந்தனர். அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய சூழல்
ஏற்பட்ட போது, இங்கும் நிலம் கொடுத்து உதவியவர்கள்,
அவர்கள் தான். இவற்றை பராமரிக்க, 64 பணியாளர்கள்
உள்ளனர்.

உங்கள் காப்பகத்தின் நிலை?


மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம்
கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய்
வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட
அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம்
ரூபாய் வரைசெலவாகிறது.

இவ்வளவு தொகையை செலவு செய்ய உங்களால் எப்படி
முடிகிறது?


ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது.
ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச்
சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு
விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன்.

அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்'
என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்
பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள்
வழங்கிவருகின்றனர்.

பசுக்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?


தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின்
சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும்
குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.

அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில்,
சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள்,
எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்'
அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால்
பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன்,
கால்நடைகள் இங்கு வருகின்றன.

அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று
ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா,
அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை
வழங்க பரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி,
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை
காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட,
மருத்துவ உதவி தேவைப்படும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Empty Re: உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Post by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm


இவ்வளவு சிரமங்களுக்கும், உங்களின் ஆன்மிகப்
பற்று தான் காரணமா?


இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை.
முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன்.
ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது
கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது
தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.

ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு
ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி,
எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே,
வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான
உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும்
சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என்,
ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.

இதில் பொதுமக்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது?


சென்னையில் இருந்தபோது, ஆன்மிகப் பற்றுள்ளோர்,
பிறந்த நாள், திருமண நாள், புதுமனைப் புகுவிழா
உள்ளிட்டவற்றுக்கு, கோ பூஜை செய்வர். அப்போது,
பசுக்களுக்குத் தேவையான தீவனம் அல்லது ஒரு மாத
தீவனத்துக்கான தொகையை கொடுப்பர்.

பசு பராமரிப்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவு உள்ளது?


இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள்
இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண
சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு
பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி,
பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி
வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம்
கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற
நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன.

அது, இப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கை தான், இந்த
கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது.
சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது
நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்
ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர்,
இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி,
கமலா ராமமூர்த்தியை, தொடர்பு கொள்ளலாம்.
-
------------------------------
நன்றி-தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Empty Re: உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum