ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:21 am

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Img_61786234173941


காலையில் எழுந்ததும் பசுவை பார்த்தால் நாள்
முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக
வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக்
கண்டால் வெற்றி கிடைக்கும். பசுவைப் பார்த்தாலே
பாவம் தீரும்.

ஒரே நிமிடத்தில்...

நாடு முழுவதும் புனிதமான கோயில்கள்
நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க நம் வாழ்நாள்
போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய உண்டு.

இவற்றில் நீராடவும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே
வழி பசுவை வணங்குவது தான். பசுவின் உடம்பில்
முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய
தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன.
பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த
புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:22 am


பசுவை பூஜிப்பது ஏன்


தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு
நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

உயிரோடு இருக்கும் வரை பால் கொடுத்து உதவும் பசு தான்
அது. அன்பும், சாந்தமும் கொண்ட பசுவைக் கண்டால்
நம் தாய் போல அன்பும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும்.
வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத
சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என அடிவயிற்றில் இருந்து
குரல் எழுப்பும்.

குழந்தையாக இருந்த போது மட்டுமே தாய் பாலுாட்டுகிறாள்.
ஆனால் பசுவோ நம் வாழ்நாள் முழுக்க பால் தருகிறது,
பசுவின் குளம்படி பட்ட புழுதியை 'கோதுாளி' என்பர்.
பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும்.
அது நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும்.
புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும். மாடுகளுக்கு
கீரை கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது.

சிவபெருமானை 'அபிஷேகப் பிரியர்' என்பர்.
ருத்ர சமகம் என்னும் மந்திரம் ஜபித்து, பசுவின் கொம்பு
வழியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.

இதில் பால் மட்டுமின்றி 'பஞ்ச கவ்யம்' என்னும் பால், தயிர்,
நெய், பசு மூத்திரம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் கொம்பு
மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால்
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை தினமும்
நடத்தப்படுகிறது. நாடு செழிக்க பசுக்களை நேசிப்போம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:22 am


பாதத்தை சுவைக்கும் பசு:

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, பிருந்தாவனத்தில்
பசுக்களை மேய்த்தும், குழலுாதியும் லீலைகள் செய்ததாக
பாகவத புராணம் கூறுகிறது.

அவரது குழலோசை கேட்டு பசுக்கள் தங்களை மறந்து நின்றன.
குழலுாதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை
ஒன்றும் விளங்கும்.

அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும்.
இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும்.
இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக்
கொள்வதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:23 am


நிறத்துக்கு ஏற்ப குணமிருக்கு!


பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக
தேன்விருந்து என்னும் நுாலில் வாரியார் குறிப்பிடுகிறார்.
தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது.
வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா
எனக் குறிப்பிடுவர்.

கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால்
மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால்
பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல
குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம்
கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும்.
கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு
குடிக்கக் கூடாது.

பாலுக்கு இல்லை விரதம்: சத்வம், ராஜஸம், தாமசம் என்ற
மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு,
சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம்.
பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது
ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் துாங்கி
வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம்.
இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம்.

நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால்
குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால்,
அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப்
பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு
பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.


தங்கச்சி பசு


லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா' என்று
பெயர் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலில் அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது
'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும், 'ஆ' என்றாலும்
'பசு' என்று பொருள்படும்

அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு
வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து
சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.

-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:24 am

கொட்டிலில் 'கோடி''

கொட்டிலுக்கு வடமொழியில் 'கோஷ்டம்' என்று பெயர்.
'கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான ஸ்தலம்
வேறில்லை' என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம்
ஜபித்தால், அதன் சக்தி கோடி மடங்காக பெருகும்.

மந்திரப்பாட்டு:


சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு
தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம்
உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல
சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம்
கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப்
போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார்.
இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ
எடுபடாது.

ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும்,
தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by ayyasamy ram Thu Jan 16, 2020 7:24 am



பெண்களே.... மனசு வையுங்க!


பால் கொடுக்கும் கறவை காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு
சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர்.
வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர்.

இதனால் பெரும் பாவம் உண்டாகும் என சாஸ்திரம்
கூறுகிறது. பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க
முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில்
இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச்
சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம்.

வீடுகளில் இதனைச் சேகரிக்கும் பணியில் சமூகசேவை
நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும்.
இதன் மூலம் கோபால கிருஷ்ணனின் அருளால் வளமான
வாழ்வு பெறலாம்.

மரம் போல மாடும் இருக்கணும்!

பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக
மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும்.
ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக
விளங்குகிறது. அந்தக் காலத்தில் வீடு முழுவதும் வீட்டில்
தரையை மெழுகுவர்.

வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த தண்ணீரையே
தெளிப்பர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்
கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த
வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம்
வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாடு ஒன்றும்
இருப்பது அவசியம்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Empty Re: பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum