ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்

Go down

டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம் Empty டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்

Post by ayyasamy ram Wed Dec 18, 2019 4:24 am

வாஷிங்டன்
டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம் 201912171801193873_Donald-Trump-poised-to-become-third-US-president-to-be_SECVPF
-
நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்திற்கு ஆளாகும் 3 ஆவது ஜனாதிபதி
என்ற அவப்பெயருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆளாகி உள்ளார்,
ஆனாலும் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்பது உறுதியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பின் முக்கிய எதிர் வேட்பாளர் என கருதப்படுபவர் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன். அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான இவரது மகன் உக்ரேன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு பற்றி விசாரணை நடத்துமாறு உக்ரேன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கிடம் கடந்த ஜூலை மாதம் டிரம்ப் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனயநாயக கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு, முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் வரும் நாளை அது தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 பேர் உள்ளனர். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 பேர் மட்டுமே உள்ளனர், எனவே கண்டனத் தீர்மானம் அங்கு நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும்.

ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிரம்பிற்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் 1974 ஆம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் அதிபர் ரிச்சர்டு நிக்சன் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் சூழலில் அவர் தாமாகவே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

1868 ஆம் ஆண்டு ஆன்ட்ரூ ஜான்சன் மீதும், 1998 ல் பில் கிளின்டன் மீதும் கண்டனத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை செனட்டில் தோற்கடிக்கப்பட்டன. இதனிடையே தம் மீதான குற்றச்சாட்டு வெறும் புரளியும், பொய்யானதும் ஆகும் என அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார். கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்ததற்காக ஜனநாயக கட்சி அரசியல் ரீதியாக தம்மை பழிவாங்க முயற்சிக்கிறது என்பது டிரம்பின் குற்றச்சாட்டு.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை
» காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
» நியூயார்க்கில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum