ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

3 posters

Go down

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்! Empty போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

Post by ayyasamy ram Tue Nov 26, 2019 5:49 pm


2021ல் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிக்க,
போர்டிங் பாஸ், விமான டிக்கெட் என பயணிகளுக்கு எந்த
ஆவணங்களும் தேவை இருக்காது என்று விமான நிலைய
இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களை அடுத்து
சென்னை 4வது பரபரப்பான விமான நிலையம் ஆகும். நாள்
ஒன்றுக்கு குறைந்தது 30,000 பயணிகள் வந்து செல்வதாகவும்,
கடந்த நிதியாண்டில் சுமார் 2 கோடி பயணிகள் வந்து சென்றதாக
புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே இடத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் இருப்பது
சென்னை விமான நிலையத்தில் மட்டுமே. மேலும், ஏற்கனவே உள்ள
4 டெர்மினல்களுடன் இரண்டு சேட்லைட் டெர்மினல்கள் அமைக்கும்
பணியானது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும்
பட்சத்தில் வருடத்திற்கு 4 கோடி பயணிகள் வந்து செல்வர் என
கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பல்வேறு போக்குவரத்து சேவைகளில் மத்திய அரசு டி
ஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. அந்த வகையில்,
விமானத்தில் நுழையும் பயணிகள் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் தொழில்
நுட்பம் மூலம் முகத்தை பதிவு செய்து ஆவணங்கள் எதுவும் இன்றி
விமானத்தில் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார்
கூறுகையில், 'இந்தியாவில் விமானப் பயணிகள் எந்தவித இடையூறும்
இன்றி ஆவணங்கள் இன்றி பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்
'Digi yatra' என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை தவிர விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா மற்றும் புனே
ஆகிய விமான நிலையங்களில் இது செயல்படுத்தப்பட உள்ளது.
2021ம் ஆண்டிற்குள் சென்னையில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்.

முதலில், தெற்கே இது விஜயவாடாவில் செயல்படுத்தப்பட்ட பின்னர்,
திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளது என்பதை தெரிந்து
கொண்டு, தேவைப்படும் பட்சத்தில் அதில் மாற்றம் செய்து பின்னர்
சென்னை உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களில் கொண்டு வரப்படும்.

விமான நிலையங்களில் பயணிகளின் டிஜிட்டல் பயணத்திற்கான
மத்திய அரசின் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதற்காக,
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முன்னதாக, ஆதார் கார்டு,
பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட
அடையாள அட்டையை பயன்படுத்தி 'டிஜி யாத்ரா' தளத்தில் ஒரு
தனிப்பட்ட அடையாள அட்டையை பெற வேண்டும்.

பயணிகள் இதனைப் பயன்படுத்தி, விமானத்தில் எப்போது
வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். விமான நிலையத்தின் முகப்பு
வாயிலில் உங்களது விபரங்கள் சரிபார்க்கப்படும். முக்கியமாக முக
சரிபார்ப்பு நடைபெறும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக உங்களது
முக ரேகை பதிவு செய்யப்படும்.

'டிஜி யாத்ரா' தளத்தில் பெறப்படும் அடையாள அட்டையே போர்டிங்
பாஸாக செயல்படும். இதன் மூலமாக செக் இன் செய்யப்படும் நேரம்
சேமிக்கப்படும். பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

டிஜி யாத்ரா ஏற்கனவே பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் விமான
நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திலும்
சோதனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகள் உருவாவதை
இதன்மூலம் தடுக்க முடியும். அதேபோன்று, மற்றொருவரின் போர்டிங் பாஸை
சிலர் பயன்படுத்துவதை இது தடுக்கும்' என்று தெரிவித்தார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்! Empty Re: போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

Post by krishnaamma Tue Nov 26, 2019 9:14 pm

டிஜி யாத்ரா ஏற்கனவே பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அட ஆமாவா ... நான் அறிந்திருக்கவில்லை ....நல்ல தகவல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்! Empty Re: போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

Post by T.N.Balasubramanian Tue Nov 26, 2019 9:28 pm

அடிக்கடி விமானப்பயணம் செய்யும் பயணிகள் --தொழில் வல்லுநர்கள்
அரசியல் தலைகள், கலைஞர்கள்,வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்! Empty Re: போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum