ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா

Go down

பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Empty பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா

Post by nandhtiha Wed Dec 30, 2009 9:35 pm

Thuglak Dec 172009





பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் பழ. கருப்பையா


சிந்திக்கும் வேளையிலே...

மிகப் பழங்காலத்தில் ஜெமினி திரைப்பட நிறுவனம் சந்திரலேகா என்றொரு படம் எடுத்தது. மிகப் புகழ் பெற்ற படம் என்பது
மட்டுமில்லை
; இன்று பார்த்தாலும் சுவை குன்றாதது. அந்தப் படம் வெற்றி பெற்றதற்கு பிரும்மாண்டத் தன்மைதான் காரணம் என்பார்கள். ஆனால் கதைப் பின்னலும், ரஞ்சன் ஏற்ற சசாங்கன் என்னும் கெடுமதியாளனுடைய (Villain) பாத்திரப் படைப்பும்தான் அந்தப் படத்தை இன்றளவும் இளமை மாறாமல் வைத்திருக்கிறது.


பெரிய பதவிகள், மலிவான ஆசைகள் –பழ. கருப்பையா Karuppaiya


பழ.கருப்பையா



சசாங்கன் தன்னுடைய அண்ணனையும், பெற்றோர்களையும் பாதாளச் சிறையில் அடைத்து விட்டு, முடிசூட்டு
விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பான். மந்திரிகள், படைத் தலைவர்கள், மேற்குடியினர், மக்கள்
என்று எல்லோரும் குழுமியுள்ள அத்தாணி மண்டபத்தில் அரச உடை அணிந்து கொண்டு மிக உருக்கமாகப்
பேசுவான்!


என்னுடைய பெற்றோரின் உடல்நலம் மிகவும் சீர்கெட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களால் இங்கு வந்து நேரில் ஆசீர்வதிக்க முடியவில்லை. முறைப்படி இந்த மணிமுடியைத் தாங்கியிருக்க வேண்டிய என்னுடைய அண்ணன் அகால மரணமடைந்து விட்டான் - இந்த இடத்தில் சசாங்கனின் குரல் தழு தழுக்கும்; பேச
முடியாமல் உணர்ச்சிவசப்படுவான்; அவை திகைத்துப் போயிருக்கும்!


பிறகு தன்னை ஆற்றுப் படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசுவான்! இப்போது ஆட்சிச் சுமை என் தோள்களில் விழுந்து விட்டது. காலம் எனக்கு விதித்துள்ள கட்டளையை நாட்டுக்காகவும், உங்களுக்காகவும் ஆற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன்! பேச்சை நிறுத்தி விட்டு, எதையோ எதிர்பார்த்து அவையினரைப் பார்ப்பான் சசாங்கன்! அவர்கள் ஒரு உணர்ச்சியுமில்லாமல் வெறுமனே நின்று கொண்டிருப்பார்கள்.

எரிச்சலுற்ற சசாங்கன் கையைத் தட்டுவான். மறைவிலிருந்து ஓர் இளம் பெண் ஒரு தட்டில் மகுடத்தை வைத்து எடுத்துக் கொண்டு வருவாள்; எல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு அதைத் தானே எடுத்துத் தன் னுடைய தலையிலே சூடிக்கொள்வான்! மீண்டும் மக்களைப் பார்ப்பான்; எந்த உணர்ச்சியுமில்லாமல் நிற்பார்கள்!

உடனே சசாங்கன் முடிசூட்டு விழாக் களிப்பின் அறிகுறியாக, தன்னுடைய கைகளைத் தலைக்கு மேலே தூக்கி தானே தட்டிக் கொள்வான்; சசாங்கனின் படையைச் சார்ந்தவன், கை தட்டி பிறகு அவையோரையும் மிரட்டுவான்; உடனே அவையினர் அனைவரும் அவனைத் தொடர்ந்து கை தட்டுவார்கள்; கை தட்டல் ஓசை விண்ணைப் பிளக்கும். சசாங்கன் தன் ஒரு கையைத் தூக்கி அவர்களை அமைதிப்படுத்தி விட்டுப் பேசுவான்!

இன்று முதல் நானே உங்களுடைய மன்னன்! எல்லா அதிகாரங்களையும் கொண்ட இந்த நாட்டின் சர்வாதிகாரி இப்படிச் சொல்லிவிட்டு அவையோரைப் பார்ப்பான்; அவர்கள் சலனமே இல்லாமல் இருப்பார்கள்.

என்ன...? என்று இரைந்து அதட்டுவான் சசாங்கன்; ஆமாம்... ஆமாம்...! என்று மக்களும் இரைந்து சொல்வார்கள்!

இந்த ஆண்டின் சிறந்த வசனகர்த்தா நானே என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி! கலை உலகம் அமைதியாக இருக்கிறது.என்ன? என்று இரைகிறார் கருணாநிதி.

ஆமாம்... ஆமாம்...! என்று முழக்கமிடுகிறார்கள் முதல் வரிசையினரெல்லாம்!

மந்திரி பரிதி இளம்வழுதி மட்டும் கவலையாக இருக்கிறார். என்னய்யா... உனக்கு மகிழ்ச்சி இல்லையா? கேட்கிறார் முதல்வர்! அதில்லை தலைவா...! இந்த ஆண்டுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்களே...அப்படியானால் அடுத்த ஆண்டுக்கு...! என்று கலங்குகிறார்
மந்திரி பரிதி!


மொத்தமா அறிவிச்சா நல்லா இருக்காதைய்யா...! அடுத்த வருஷத்திற்கு அடுத்த வருஷம் அறிவிச்சுக்குவம்... அடுத்த வருஷமும் நம்ம ஆட்சிதான்யா இருக்கும்! பரிதி முகத்தில்
மகிழ்ச்சி அரும்புகிறது.


இந்த வயதிலும் கருணாநிதிக்கு விருது தேவைப்படுகிறது! அண்ணா விருது அறிவிக்கப்படுகிறது; கருணா நிதியே வாங்கிக் கொள்கிறார்! வசனகர்த்தா விருது அறிவிக்கப்படுகிறது; கருணாநிதியே பெற்றுக் கொள்கிறார்!

முதல்வருக்கு விருது


எல்லாப் புகழும் அல்லாவுக்கே என்று திருக்குரான் சொல்வது போல, எல்லா விருதுகளும்
எனக்கே
என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி!

அரண்மனைக் கோழிமுட்டை, அம்மியையும் உடைக்கும் என்பார்கள்; பராசக்தி வசனத்தை மனப் பாடம் செய்து ஒப்பித்துத்தான் தமிழையே கற்றுக் கொண்டதாக, சந்தை மதிப்பு மிகுந்த கலைஞர்களெல்லாம் பேசுவதைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகிறார் முதல்வர். தமிழின் மேலெல்லை தொல்காப்பியம் என்பது போய், தமிழின் மேலேல்லையே பராசக்தி வசனம்தான் என்றாகி விட்ட பிறகு, இறும்பூதெய்த மாட்டாரா முதல்வர் கருணாநிதி?

எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய காலம் தொட்டு, ரஜினி கமல் காலம் வரை
ஏறத்தாழ அறுபதாண்டுக் காலம், தான் இந்தத் துறையில் காலூன்றி நிற்பதைப் பற்றிக் கழிபேருவகை
அடைந்திருக்கிறார் கருணாநிதி!


அரசின் தலையாய வசனகர்த்தா விருதை வழங்கி மனங்கொள்ளாமல் பாராட்ட ரஜினிக்கும், கமலுக்கும் மனம் இருக்கிறதே என்பதற்காக, அவர்கள் ஏன் தங்கள் படங்களில் இந்த அரசு விருது பெற்ற வசனகர்த்தாவைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேட்டால், அது மிகவும் இடக்கான கேள்வி! அரசின் அளவுகோல் கருணாநிதியைச் சார்ந்தது; சந்தையின் அளவுகோல் மக்களைச் சார்ந்தது அல்லவா?


அழகிரி மகன், ஸ்டாலின் மகன், கலாநிதி மாறன், அமிர்தம் என்று இவருடைய ஆட்சியதிகாரம் காரணமாகச் சாக்குப் பைகளில் பணத்தைக் குவித்துத்தமிழ்த் திரைப்படத் துறையையே வளைத்து வைத்திருக்கிற இவருடைய பேரன்களும் மருமகன்களும் கூட, அரசு விருது பெற்ற கருணாநிதியை வசனம் எழுதச் சொல்வதில்லை என்பது மிகவும் இரங்கத்தக்கதுதான்!

விருதுகள்தாம் என்றில்லை; பட்டங்களுக்கும் கூட ஆலாய்ப் பறப்பார் கருணாநிதி! அவற்றை இவரே அறிவிப்பதுண்டு; இவருடைய விருப்பம் தெரிந்து பிறர் அறிவிப்பதுமுண்டு. கருணாநிதி முதல் தடவை முதலமைச்சராக வந்தபோது, அவருடைய விருப்பம் தெரிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து, மிகப் பெரிய அவதூறுக்கு உள்ளானது.

ஓ.பி. ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, இராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் என்று எல்லாருமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள்தாம். அவர்கள் காலத்திலும் இதே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருந்தது. அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்பதாலா அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கவில்லை?
அவர்களுக்கெல்லாம் மலிவான ஆசைகள் இல்லாத காரணத்தால், பல்கலைக்கழகங்கள் பாடம் சொல்லிக்
கொடுக்கின்ற வேலைகளை மட்டுமே பார்த்தன.


கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் ஆவதற்கு உதயகுமார் என்னும் மாணவனின் உயிர் காவு கொடுக்கப்பட்டது. பொங்கி எழுந்த மாணவர் திரளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். உதயகுமாரின் பெற்றோர் அவனைத் தம் மகனில்லை என்று மறுத்தனர். எவ்வளவு அசிங்கங்கள் அரங்கேறின!

கல்லூரியில் வாத்தியார் வேலை பார்க்கிறவனுக்குத்தான் அந்தப் பட்டம் வேண்டும்; பட்டத்தை வழங்குகின்ற வேந்தர்களும், துணை வேந்தர்களும் என்னுடைய வீடுகளில் முறை வைத்துக் கொண்டு முறைவாசல் பார்க்கிறபோது, எனக்கு அந்தப் பட்டத்தால் ஆகப் போவதென்ன? என்று உதறக் கருணாநிதியால்
முடியவில்லை! பள்ளிக்கூடம் தன்னைப் புறந்தள்ளிய கணக்கை, பல்கலைக்கழகத்தை விட்டு நேர்
செய்து கொள்ள நினைத்தார்!


அறிவு, கல்லூரிப் பட்டங்களால் அளக்கப்பட வேண்டிய ஒன்றன்று என்னும் சிந்தனை அவருக்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை! ஆகவே எல்லாப் பட்டங்களின் மீதும், எல்லா விருதுகளின் மீதும் அவர் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறார். அதனால் அவற்றைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும் அவருக்கு அசிங்கமாகப் படவில்லை!

பெரிய பதவிகள்; மலிவான ஆசைகள்!


avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum